புது டிரெண்டுக்கு ஏத்த விதவிதமான கொலுசு வகைகளைப் பற்றி பார்க்கலாம் வாங்க!

Anklet With Beautiful Stones
Different Types Of AnkletsImage Credits: pinterest
Published on

ண்டைய காலம் முதலாகவே கொலுசு போடும் கலாச்சாரம் தமிழ் மக்களிடையே உண்டு. அதற்கு தமிழ் காப்பியமான சிலப்பதிகாரமே சிறந்த சாட்சியாகும். ராஜஸ்தானி பெண்கள் மிகவும் கனமான கொலுசுகளை அணிவார்கள். ஒடிசா பெண்கள் கால்கள் முழுவதுமே மூடுமளவிற்கான ‘பாதபத்மா’ என்னும் கொலுசை பயன்படுத்தினர். பழங்காலத்தில் ஆண்களுமே கொலுசு அணியும் பழக்கத்தை கொண்டிருந்தனர். சத்திரியர்கள் தங்கத்தில் கொலுசு அணிவார்கள். மற்றவர்கள் வெள்ளியிலே கொலுசு அணியும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.

 இந்த பதிவில் விதவிதமான கொலுசு வகைகள் டிரெண்டிங்கில் என்ன உள்ளது என்பதை பற்றி காண உள்ளோம்.

சிங்கிள் அண்ட் மல்ட்டி லேயர் (Single and multi layer anklet) கொலுசுக்கள்.

இந்த வகை கொலுசுகள் ஆடம்பரம் இல்லாமல் சின்ன மெல்லிய லேயரில் வரக்கூடியது. சிம்பிள் மினிமலிஸ்ட் லுக்கை விரும்புபவர்கள் இவ்வகை கொலுசை அணியலாம். இதில் மல்ட்டி லேயரும் வருகிறது. எனினும் அவ்வளவாக ஆடம்பரம் இல்லாமல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இன்றைய இளம் பெண்களிடம் இவ்வகை மினிமலிஸ்ட் கொலுசுகளே டிரெண்டாக உள்ளது.

Single and multi layer anklet
Single and multi layer anklet

ஜெம்ஸ்டோன் கொலுசுகள் (Gemstone anklet)

பெண்களுக்கு எப்போதுமே கற்கள் வைத்த நகை மீது அலாதி பிரியம் உண்டு என்பதை அறிவோம். அப்படியிருக்கையில் கொலுசில் மட்டும் கற்கள் இல்லையென்றால் எப்படி? இந்த வகை ஜெம்ஸ்டோன் கொலுசுக்கள் பலவகை நிறங்களிலும் வரும் அல்லது வெள்ளை நிற கற்களை கொண்டும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்து கொலுசுக்கள் (Pearl anklet)

முத்துக்கள் வைத்து கோர்க்கப்பட்டு செய்திருக்கும் இவ்வகை கொலுசுக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இவ்வகை கொலுசுகளை அணியும் பொழுது நேர்த்தியான வகையிலும் மற்றும் பெண்களின் நலினத்தை கூட்டும் வகையிலும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தண்டை கொலுசு ( Thandai anklet)

‘தண்டை’ என்பது சிலம்பு போலவே காலில் அணியப்படும் தடிமனான ஒரு அணிகலனாகும். இந்த சிலம்பை மையமாக வைத்தே சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் தமிழில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஜப்பானியர்கள் பின்பற்றும் வாழ்க்கைக்குத் தேவையான 6 யுக்திகள்!
Anklet With Beautiful Stones

அஜ்மேரி கொலுசுக்கள் (Ajmeri anklet)

அஜ்மேரி கொலுசுகள் நடனமாடுபவர்கள் அணியும்போது மிகவும் அழகாக இருக்கும். இதை குச்சுப்புடி போன்ற நடனமாடும் கலைஞர்கள் அதிகம் அணிவார்கள். இது பார்ப்பதற்கு பெரிதாகவும் நிறைய சலங்கைகளும் வைத்திருப்பதால் அதிகமாக சத்தம் எழுப்புவதும் நடனமாடுபவர்களின் விருப்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Gold anklet

தங்க கொலுசு (Gold anklet)

தற்போது வெள்ளி கொலுசுகளை விட தங்க கொலுசுக்களே டிரெண்டிங்காக உள்ளது. இது இந்திய பாரம்பரிய உடைகளுடன் அணியும் போது மிகவும் அசத்தலாக இருக்கும். சல்வார், லெஹங்கா, புடவைகளுடனும் இதை அணியலாம். இதை அணியும் போது பாரம்பரிய லுக் மட்டும் இல்லாமல் ராயல் லுக்கையும் தரும். கேரள பெண்கள் தங்க கொலுசு அணிவதற்கு அலாதி பிரியம் காட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com