ஜப்பானியர்கள் பின்பற்றும் வாழ்க்கைக்குத் தேவையான 6 யுக்திகள்!

Japanese Women
Japanese MotivationImage Credits: Pngtree
Published on

ப்பானியர்கள் சுறுசுறுப்புக்கு பெயர்போனவர்கள். எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் உடனே செய்து முடிக்கும் குணம் கொண்டவர்கள். இரண்டாம் உலகப் போரில் மிகவும் பாதிப்புக்கு ஆளான நாடாக ஜப்பான் இருந்தும், சிறிது காலத்திலேயே வளர்ந்த நாடாக மாறியதற்கு ஜப்பான் மக்களின் உழைப்பையும் ஒரு காரணமாக சொல்லலாம். அத்தகைய ஜப்பான் மக்களால் பின்பற்றப்படும் 6 யுக்திகளை பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

கைசன் (Kaizen): வாழ்க்கையில் தினமும் சின்னச் சின்ன முன்னேற்றம் இருப்பது நல்லது. எதையுமே ஒரேயடியாக செய்து முடித்துவிட முடியாது. நம் வாழ்வில் மாற்றம் என்பது சின்னச் சின்ன அடியாகவே நிகழும். வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்காமல் அமைதியாக இருப்பதை விட தினமும் சின்னச் சின்ன மாற்றத்தால் முன்னேற்றம் அடைவது சிறந்ததாகும். இதையே, ‘கைசன்’ என்று ஜப்பானியர்கள் கூறுகிறார்கள்.

இக்கிகாய் (Ikigai): நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தை தெரிந்துகொள்ளுதல் என்று அர்த்தம். நமக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும். நாம் எதில் திறமையாக இருக்கிறோமோ அதைச் செய்ய வேண்டும். நம்மிடம் இந்த உலகம் என்ன எதிர்பார்க்கிறதோ அதைச் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் எந்த வேலைக்கு ஊதியம் கிடைக்கிறதோ அதை செய்ய வேண்டும். இதன் எளிமையான அர்த்தம், மக்களை ஊக்கப்படுத்தி உண்மையிலேயே வாழ்க்கையில் அவர்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வதாகும்.

வபிசாபி (Wabisabi): நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் சிறந்தவனாக, குறைவின்றி நிறைவுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. ஆனால்,  குறையிலும் நிறையைக் காண வேண்டும். நம்முடைய குறையை பலவீனமாக நினைக்காமல் அதையும் ஏற்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

சோசின் (Shoshin): எப்போதுமே ஏதேனும் புதிதாக கற்றுக்கொள்ள முற்படும்போது, ‘எல்லாம் எனக்கு தெரியும்’ என்ற மனநிலையில் இல்லாமல், புதிதாக ஒரு விஷயத்தை கற்கும்போது மனதை சுத்தமாக புதிதாக கற்பவர்களின் மனநிலையில் வைத்திருக்கும்போது எளிதாக அனைத்தையும் கற்க முடியும்.

இதையும் படியுங்கள்:
ஜெர்சி நம்பர் '7' ஏன் அனைவருக்கும் பிடித்திருக்கிறது?
Japanese Women

கன்பாரு (Ganbaru): ஏதாவது ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் கடுமையாக அதற்காக உழைக்க வேண்டும். எப்பேர்ப்பட்ட கஷ்டம் வந்தாலும், ஆரம்பித்த காரியத்தை முடிக்கும் வரை ஓயக்கூடாது என்பதே இதன் பொருளாகும்.

சின்ரின் யோக்கு (Shinrin yoku): ஜப்பானிய மொழியில் ‘சின்ரின்’ என்றால் காடு, ‘யோக்கு’ என்றால் குளியல் என்று பொருள். இது ஒரு தெரபி முறை போன்றதாகும். காடுகளின் நடுவில் இயற்கையோடு வாழ்ந்து இயற்கையோடு இணையும் முறையாகும். இது உடலையும் மனதையும் தூய்மையாக்கும், குணப்படுத்தும், அமைதிப்படுத்தும், புத்துணர்ச்சி தரும். எனவே, இந்த 6 யுக்திகளையும் வாழ்வில் பயன்படுத்தி மேன்மையடையுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com