பெண்களை வசீகரிக்கும் பல்வேறு வகையான இந்தியப் புடவைகள்!

டிசம்பர் – 21- உலக புடவை தினம்!
World Saree Day!
Variety sareesImage credit - pixabay
Published on

புடவைக் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு வகையான புடவைகள் பல்வேறு ஸ்டைல்களில் அணியப்படுகின்றன. இந்தியாவில் உள்ள பல பிராந்தியப் புடவைகள் நெசவு மரபுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

பனாரசி பட்டுப் புடவை;

பனாரசிப் புடவை வாரணாசியில் தோன்றியவை. இந்தப் புடவைகள் செழுமையான பட்டு மற்றும் சிக்கலான ப்ரோகேட் வேலைகளுக்குப் பெயர் பெற்றவை. பனாரசி புடவைகளின் பணக்கார, ஆடம்பரமான தோற்றம் காரணமாக பெரும்பான்மையாக மணப்பெண்களின் தேர்வாக இருக்கிறது. 

காஞ்சிபுரம் பட்டுப் புடவை;

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திலிருந்து இந்தப் புடவைகள் தூய மல்பெரி பட்டுக்களால் நெய்யப்படுகின்றன. அவை கோயில் உருவங்கள் மற்றும் துடிப்பான வண்ணங்கள், டிசைன்களுக்கு பெயர் பெற்றவை. காஞ்சிபுரம் புடவைகள் தென்னிந்திய பாரம்பரியத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. திருமணங்கள், விசேஷங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் இவை பெண்களால் அணியப்படுகின்றன. 

பாலுசாரி (Baluchari) புடவை;

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாலுசாரி புடவைகள் இதிகாசங்கள் மற்றும் புராணங்களின் காட்சிகளை சித்தரிக்கும் விரிவான பல்லு ( முந்தானைத் தலைப்பு) வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்றவை. அவை நேர்த்தியான பட்டால் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் பண்டிகை சமயங்களில் அணியப் படுகின்றன.

சந்தேரி புடவை;

மத்திய பிரதேசத்தின் சந்தேரியில் உற்பத்தியாகும் இந்தப் புடவைகள் பட்டு மற்றும் பருத்திக் கலவையால் செய்யப்படுகின்றன. இவை கையால் நெய்யப்படுவதால் இதன் வடிவமைப்பும் நேர்த்தியும் மிகப் பிரபலம். 

இதையும் படியுங்கள்:
பிக்மென்ட்டேசன் பிரச்சனையா? இந்த எண்ணெய் போதுமே! 
World Saree Day!

பைதானிப் (Paithani): புடவை;

மகாராஷ்டிராவை சேர்ந்த பைதானிப் புடவைகள் சிக்கலான மயில் மற்றும் கிளி உருவங்களால் அலங்கரிக்கப்படுபவை. இவையும் கையால் நெய்யப்படும் பட்டுப் புடவைகள். தங்கள் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன. 

போச்சம்பள்ளி இக்காட் சேலை;

தெலங்கானாவில் உள்ள போச்சம்பள்ளியில் இருந்து உருவான இந்த புடவைகள் டையிங் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படுபவை. சிக்கலான வடிவியல் அமைப்புகளுக்கு பெயர் பெற்றவை. 

ஜம்தானி (Jamdani): புடவை;

ஜம்தானிப் புடவைகள்  சிறந்த மஸ்தலின் துணி மற்றும் கலை வடிவங்களுக்கு பெயர் பெற்றவை. இதன் நெசவுப் பாரம்பரியம் வங்காள தேசத்தின் டாக்காவில் இருந்து தோன்றியது. மேலும் மேற்கு வங்காளத்திலும் நடைமுறையில் உள்ளது.

மாடர்ன் புடவைகள்...
மாடர்ன் புடவைகள்...Image credit - pixabay

மாடர்ன் புடவைகள்;

மாறிவரும் காலங்கள் மற்றும் ஃபேஷன் விருப்பங்களுக்கு ஏற்ப சேலைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. நவீனத் தகவல் தொழில் நுட்பங்களும் புதுமைகளும் புடவைகளை சமகால ரசனைகளுக்கு பொருத்த மானவைகளாக தோற்றமளிக்க செய்கின்றன. தற்கால வடிவமைப்பாளர்கள் புடவை வடிவமைப்புகளில் புதிய பொருட்கள் மற்றும் அதி நவீன நுட்பங்களை இணைக்கிறார்கள். பாரம்பரிய மற்றும் நவீனத்துவத்தின் கலவையானது இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் புதுமையான புடவைகளாக உருவாகின்றன.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையான புடவைகள்;

சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான ஃபேஷனுக்காக ஆர்கானிக் துணிகள் மற்றும் இயற்கை சாயங்களை பயன்படுத்தி புடவைகள் உருவாகின்றன. இவை நிலையான ஃபேஷன் பிராண்டுகள் பாரம்பரிய நெசவு நுட்பங்களை தழுவி வருகின்றன.

இதையும் படியுங்கள்:
பனிக்காலத்தில் சரும அழகைப் பராமரிப்பதற்கான சில டிப்ஸ்கள்!
World Saree Day!

டிஜிட்டல் பிரிண்ட் புடவைகள்;

டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்நுட்பம் துடிப்பான வண்ணங்கள் மற்றும் வடிவங்களுடன் சிக்கலான வடிவமைக்கப்பட்ட புடவைகளை உருவாக்க உதவுகிறது. இவை விலை மலிவாகவும் இளம் பெண்களால் விரும்பக்கூடிய  வகையிலும் இருக்கின்றன. 

பியூஷன் புடவைகள்;

இவை பாரம்பரியப் புடவைகளின் கூறுகளை நவீன பாணிக்கு ஏற்ப ஒருங்கிணைத்து எளிதாக அணியக்கூடிய வகையில் உருவாகி பல்வேறு வயதில் உள்ள பெண்களைக் கவர்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com