
கடலை மாவு பாசிப்பயிறு மாவு இரண்டையும் சமஅளவு கலந்து அத்துடன் ஆரஞ்சு பழதோலை காயவைத்து பொடியாக்கி கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு கிரீம் போல உடலில் பூசி குளித்தால் வறட்சித்தன்மை நீங்கி மிருதுதன்மை உருவாகும்.
ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து பூசி வந்தால் உதட்டு வெடிப்பு மாறும்.
பனிக்காலத்தில் சோப்பு பயன்படுத்தக்கூடாது.
காய்ச்சாத பாலை பஞ்சில் தொட்டு முகம் முழுவதும் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்புடன் மிருதுவாக இருக்கும்.
பனிக்காலம் வந்தாலே உதடு படிப்பு தோலில் வறட்சி தன்மையை ஏற்படலாம். இதை அப்படியே விட்டுவிட்டால் பாதிப்பு அதிகமாகிவிடும். குளிக்கும் முன் உடலில் லேசாக தேங்காய் எண்ணெய் தேய்த்து பிறகு குளித்தால் சருமம் எளிதில் வறண்டு போகாது.
பனிக்காலத்தில் கூந்தல் அதிகமாய் வறண்டு போவதுடன் ஓரங்களில் வெடித்துபோய் அதிக முடி இழப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்த நிலையை தவிர்க்க தலைக்கு அவ்வப்போது எண்ணெய் மசாஜ் கொடுக்க வேண்டியது மிக அவசியம்.
முகத்திற்கு ஆவி பிடிப்பது வெதுவெதுப்பான நீரில் கை கால்களுக்கு மசாஜ் செய்வது பனிக்காலத்துக்கு இதமாக இருக்கும்.
அதிகமாக வறண்டுபோன சருமத்திற்கு தேன் கலந்து முகபேக் நல்லது. இரண்டு ஸ்பூன் தேனில் சிறிதளவு முல்தானி மெட்டி பவுடர் போட்டு நன்றாக குழைத்துவிட வேண்டும். பேஸ்ட் போல் இருக்கும் இந்த கலவையை முகத்தில் சிறிது நேரம் ஊறவிட்டால் பலன் கிடைக்கும்.
சன்ஸ்கிரீன் அடங்கிய மாய்ஸ் ரைஸர் போட்டுக்கொண்ட பிறகு வெளியில் புறப்பட வேண்டும் கோல்ட் கிரீம் போன்ற அடர்ந்த கிரீம் வகைகளை இரவில் போடலாம் அதிகமாக வறண்ட சருமமுடையவர்களுக்கு கோல்ட் கிரீம்கள் நல்லது.
சருமத்திற்கு தேவையான எண்ணெய் பசையை கொடுக்க இயற்கை மாய்ச்ரைஸரான பாலேட்டை விட சிறப்பான மிகச்சிறந்த பொருள் இருக்க முடியாது. சிறிதளவு பாலேட்டை எடுத்து கை கால் முகம் மற்றும் வறண்டுபோன பகுதிகளில் பரவலாக தடவி பதினைந்து நிமிடம் ஊற விட்டு கழுவி விடவேண்டும்.
சாதம் வடித்த கஞ்சியுடன் பாலை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும் இந்த கலவையை முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்கமாகும்.
சூடான ஒரு டம்ளர் பாலில் அரை எலுமிச்சம் பழச்சாறு பிழியவேண்டும் இப்போது பால் தயிர்போல் கட்டி ஆகிவிடும். இதை முகம் கழுத்து கை கால்களில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவேண்டும் இவ்வாறு செய்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
பனிக்காலத்தில் வெறும் பாலேட்டை நக ஓரங்களில் தடவி ஊற விடுவது நல்லது.
சருமத்தின் வறட்சியும் சொரசொரப்பும் மாறி மென்மையாக மாற வெந்தயபொடி பச்சைபயறு மாவு துளசி பொடி ரோஜா இதழ்கள் கடலை மாவு ஆகியவற்றை பாலேட்டோடு கலந்து பூசி வந்தாலும் சருமம் பளபளப்பாகும் பாதாம் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் பளபளப்பு கிடைக்கும்.
பனிக்காலத்தில் வரும் உதடு வெடிப்பு நீங்க ரோஜாப்பூ ஒன்றை எடுத்து பால் விட்டு அரைத்து அந்த விழுதினை தடவவேண்டும்.