கொலாஜன் சப்ளிமென்ட் உண்மையிலேயே வேலை செய்யுமா? 

Collagen
Collagen
Updated on

வயதானால் தோல் சுருங்கி அதன் தன்மையை இழப்பது இயற்கையானதுதான். ஆனால், இந்த மாற்றத்திற்குக் காரணம் நம் உடலில் உள்ள கொலாஜன் எனும் புரதம். இது குறைவதால் தோல் சுருங்கி, வறண்டு, மெலிந்து காணப்படும். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க கொலாஜன் சப்ளிமெண்ட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், பலருக்கு இருக்கும் சந்தேகம், இவை உண்மையிலேயே வேலை செய்யுமா என்பதுதான். அதன் உண்மையை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

நம் உடலில் காணப்படும் பல வகையான புரதங்களில் கொலாஜனும் ஒன்று. இது சருமம், எலும்பு, மூட்டுகள், தசைகள் மற்றும் இணைப்புத் திசுக்களை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இது நம் உடலின் செல்களை ஒன்றாக இணைத்து சிறப்பான அமைப்பை வழங்குகிறது. 

கொலாஜன் சப்ளிமெட்டுகள் பொதுவாக விலங்குகளின் எலும்பு, தோல், மீன்களின் செதில்களில் இருந்து பெறப்படுகின்றன.‌ இவற்றை உட்கொள்ளும்போது உடல் இந்த கொலாஜனை செரிமானம் செய்து, தோல் எலும்பு மற்றும் மூட்டுகளில் பயன்படுத்திக்கொள்ளும். இதனால், சருமம் இளமையான தன்மையை அடைந்து சுருக்கங்கள் குறைந்து நெகச்சித்தன்மையை அடையும். 

இதையும் படியுங்கள்:
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்திப்பழத்தின் நன்மைகள்!
Collagen

இது எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிப்பதால் எலும்பு முறிவு அபாயம் குறைகிறது. மேலும் மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பை பாதுகாத்து மூட்டு வலி குறைய உதவும். தசைநார் மற்றும் இணைப்புத் திசுக்களை வலுப்படுத்தி காயங்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. 

உண்மையில் வேலை செய்யுமா? 

இந்த சப்ளிமெண்டுகள் முறையாக வேலை செய்கின்றனவா என்பது குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில ஆய்வுகள் இந்த சப்லிமென்ட்கள் தோல், எலும்பு, மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று கூறினாலும், சிலவற்றில் இதனால் எந்த பலனும் கிடைப்பதில்லை என தெரியவந்துள்ளது. 

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே கொலாஜன் க்ரீம் செய்வதற்கான வழிமுறைகள்!
Collagen

நீங்கள் கொலாஜன் சப்ளிமென்ட் எடுக்கப் போகிறீர்கள் என்றால் சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும். எந்த ஒரு சப்ளிமெண்ட்டையும் நீங்களாகவே எடுக்கக்கூடாது. மருத்துவரை அணுகி அது சார்ந்த முழு உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்றாலும், மருத்துவரின் அறிவுரை மிகவும் முக்கியம். 

நீங்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் மருந்துகள் அல்லது சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொண்டால், கொலாஜன் சப்ளிமென்ட் எடுத்துக் கொள்வதைப் பற்றி யோசிக்கவும். எனவே, உங்களது உடல்நிலை மற்றும் தேவைக்கு ஏற்ப இதை எடுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள். 

logo
Kalki Online
kalkionline.com