Acne on your nose
Acne on your nose

மூக்கின் மேல் சொர சொரப்பாக இருக்கிறதா?... அப்போது இந்த ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துங்கள்!

Published on

மூக்கின் மேல் கருமையான புள்ளிகளோ அல்லது ஒயிட் ஹெட்ஸ் படர்ந்தாலே அந்த இடம் சொர சொரவென்றுதான் இருக்கும். கண்ணாடி முன் நின்றுப் பார்க்கும்போது அந்தக் கரும்புள்ளிகள் அசிங்கமாக தெரியும். அதேபோல் நாம் தொட்டுப் பார்க்கும்போது சொர சொரவென்று இருந்தால் நமக்கே ஒரு மாதிரி அசிங்கமாக இருப்பதுபோல உணர்வு ஏற்படும். பொதுவாக செத்த செல்களால்தான் மூக்கில் இதுபோன்று ஏற்படுகிறது.

சிலர் அதனை சரி செய்ய பார்லர் வரை சென்றுப் பணத்தை வீணாகச் செலவழிப்பார்கள். ஆனால் இதை நாம் வீட்டிலேயே சரி செய்யும்போது இயற்கையாகவும் எளிமையாகவும் பணம் செலவழிக்காமலும் சரி செய்துவிடலாம். அந்தவகையில் மூக்கின் மேல் உள்ள கருமைகள் கலந்த சொர சொரப்பை நீக்க இந்த ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துங்கள்.

முட்டை ஃபேஸ் பேக்:

முட்டையில் உள்ள வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் ஒருமுறை தடவி உலர வைக்க வேண்டும். உலர்ந்த பிறகு மீண்டும் அந்த வெள்ளை கருவை முகத்தில் தடவி உலரவைத்துவிட்டு மூன்றாவது முறையும் வெள்ளைக்கருவைத் தடவி ஊற வைக்க வேண்டும். அதாவது மூன்று கோட்டிங்காகப் பயன்படுத்தி உலர வைக்க வேண்டும். பின்னர் ஒரு 15 நிமிடங்கள் ஊற வைத்தப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் வெள்ளை கருவுடன் சேர்த்து ½ டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி அந்த இடம் மென்மையாக மாறிவிடும்.

தக்காளி ஃபேஸ் பேக்:

தக்காளி ஃபேஸ் பேக் பயன்படுத்துவது மிகவும் சுலபமானதுதான். நன்றாகக் கனிந்தத் தக்காளியை மென்மையாக அரைத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின் 15 நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல ரிசல்ட் தரும். இதனை அவ்வப்போது செய்து வரலாம்.

இதையும் படியுங்கள்:
சருமத்தை பாதுகாக்கும் முல்தானி மிட்டியின் 5 அசர வைக்கும் நன்மைகள்! 
Acne on your nose

பட்டை ஃபேஸ் பேக்:

முதலில் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் தேன் சேர்த்து, அதனை முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். அதன்மேல் காட்டன் ஸ்ட்ரிப்பை அழுத்தி வைத்துக்கொள்ளவும். ஒரு 15 நிமிடங்கள் கழித்துக் காட்டன் ஸ்ட்ரிப்பை நீக்கிவிட்டு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். இதனையும் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்து வந்தால் கரும்புள்ளிகளும் சொர சொரப்புத் தன்மையும் நீங்கி மூக்கு உட்பட முகம் முழுவதுமே மென்மையாக மாறிவிடும்.

இந்த மூன்று ஃபேஸ் பேக்குகளை முயற்சி செய்துப்பாருங்கள். எது உங்களுக்கு உடனே ரிசல்ட் காண்பிக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு தொடர்ந்து அதையே முயற்சி செய்யுங்கள். அதேபோல் ஃபேஸ் பேக் போடுவதற்கு முன்னர் சுடு நீரில் ஆவி பிடித்துக்கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com