பெண்கள் நிறைய பேருக்கு Double chin இருக்கும். இது பெரிதும் அவர்கள் அழகை பாதிப்பதாக நினைப்பார்கள். ஆனால், இனி அந்த கவலை வேண்டாம். இந்த 5 ஃபேஷன் தவறுகளை செய்யாமல் இருந்தாலே அழகாக தெரிவீர்கள். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
1.Heavy chokers.
முதலில் மிகவும் பெரிதான சோக்கர்களை கழுத்தை ஒட்டிப்போடாதீர்கள். ஏனெனில், அது கழுத்தை ஒட்டி இருப்பதால் இன்னும் அதிகமாக double chin தெரிய வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, இதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக பெரிய நீளமான செயின்களை அணிவதன் மூலம் மற்றவர்கள் பார்வை கழுத்துப்பகுதிக்கு செல்லாது.
2.Hair style.
உங்களுடைய சிகையலங்காரத்தில் Lower Bun போடுவதை தவிர்க்கவும். ஏனெனில், அது உங்களுடைய Double chin ஐ அதிகமாக ஹைலைட் பண்ணிக்காட்டும். அதற்கு பதில் Layer haircut with bangs, feather haircut, Curls ஆகிய சிகையலங்காரத்தை முயற்சித்துப் பாருங்கள் மிகவும் அழகாக இருக்கும்.
3.Neckline.
ஆடைகளில் நெக்லைன் தேர்வு செய்யும்போது, கழுத்தை ஒட்டி இருக்கும் நெக்லைன்னான Closed neckline ஐ தேர்வு செய்ய வேண்டாம். அது Double chin ஐ அதிகமாக ஹைலைட் செய்துக்காட்டும். இதையும் தவிர்த்து விடவும். அதற்கு பதில் V neckline ஐ தேர்வு செய்வதின் மூலம் தோல்பட்டை மற்றும் கழுத்துப்பகுதி அதிக கவனம் பெறுவதால் டபுள் சின் இருப்பது பெரிதும் தெரியாது.
4.Earrings.
நீங்கள் காதணிகளை தேர்வு செய்யும்போது பெரியை ஜிமிக்கிகளை தேர்வு செய்யாதீர்கள். அது அதிகமான Odd லுக்கைக் கொடுக்கும். அதற்கு பதில் Studded and cluster போன்ற காதணிகளை அணியும் போது பெரிதாக டபுள் சின் இருப்பது யாருடைய கவனத்தையும் ஈர்க்காது.
5.Dresses and Dress colour.
கழுத்தை சுற்றி Scarf அணிவது மேலும் அழகைக் கூட்டும். இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்கவும். அதற்கு பதில் தளர்வான உடைகள் அணிவது சிறப்பாகும். சிவப்பு, பிரவுன், கருப்பு, நேவி ப்ளு போன்ற அடர்நிறங்களில் உடைகளை தேர்வு செய்யலாம். Off shoulder உடைகள் அணிவது நீளமான கழுத்து இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கும். இந்த 5 ஃபேஷன் மிஸ்டேக்களை தவிர்த்து அழகாக மாறிக் கலக்குங்கள்.