உங்கள் உதடுகள் தான் உலகிலேயே மிகவும் அழகானது என்று மனசுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள்.
கண்ணாடி முன்பு அமர்ந்து கொள்ளுங்கள் இதழ்களை குவியுங்கள். நேராகுங்கள். இது போல் இருபது முறை செய்யுங்கள் .
காற்றை வாய்க்குள் நிரப்பி உப்பன்று வைத்துக் கொள்ளுங்கள் கன்னத்தின் ஒவ்வொரு பக்கமும் அந்த காற்றைத் தள்ளி உப்பச் செய்யுங்கள்.
வாயை அகல திறவுங்கள் பின் பபுள்கம் சாப்பிடுவது போல வாயை மெல்லுங்கள்.
வாய் நிறைய தண்ணீரை எடுத்துக்கொண்டு கொப்பளியுங்கள். இதனால் கன்னங்கள் கொழு கொழு வடையும் மிகவும் சுலபமான, நல்ல பலனளிக்க கூடிய பயிற்சி இது.
முக ஒப்பனையின் கடைசி பகுதி உதடு தான் என்று சொல்வார்கள். இதழ்களுக்கான அழகு சாதனங்கள் பென்சில் டியூப் திரவம் போன்ற வடிவங்களில் கிடைக்கின்றன .
உதட்டின் அளவு, முகத்தின் வனப்பில் உதட்டின் பங்கு, உடை மற்றும் லிப்ஸ்டிக் பூசுபவரின் வயது உயரம், தலைமுடியின் அளவு அதன் நிறம், ஆகியவற்றிற்கு தகுந்தார் போல் லிப்ஸ்டிக்கை பூச வேண்டும். ரொம்ப அதிகமாவோ, ரொம்ப குறைவாகவோ பூசினால் அசிங்கமாகிவிடும்.
லிப்ஸ்டிக் பூசுவதற்கு முன்பு உதடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் . ஃபவுண்டேஷன் க்ரீம் போட்ட பிறகோ க்ளௌன்ஸிங் மில்க்கினால் சுத்தப்படுத்திய பிறகோ லிப்ஸ்டிக் போடலாம். சிலர் வெளியில் கிளம்பும் அவசரத்தில் நின்று கொண்டே போடுவார்கள்; அது திட்டுதிட்டாய் பரவி நிற்கும். டென்ஷன் இல்லாமல் உட்கார்ந்த நிலையில் லிப்ஸ்டிக் போடுவது நல்லது.
ஒரு வாரத்திற்கு இரவில் படுக்கப் போகும் முன் வெண்ணையை உதடுகளில் பூசி வந்தால் அவை மென்மையாக மாறும்; வனப்பும் கூடும்.
வெயிலால் உதட்டின் நிறம் மாறுவதை தவிர்க்க வாசலைன் பூசிக்கொள்ளலாம். சிலருக்கு உதடுகள் கருப்பாகவே இருக்கும். அவர்கள் பிரஷ்ஷான கொத்தமல்லி சாற்றை இரவில் உதடுகளின் மீது பூசி வர நிறம் மாறும். விளக்கெண்ணெயும் தடவலாம்.
உதடு வெடிப்பு உள்ளவர்கள் ரோஜா இதழ்களை பால் விட்டு நன்றாக அரைத்து பின்பு உதடுகளில் தடவி வரலாம்.
செப்பு உதடுகள் எனப்படும் மெல்லிசான உதட்டுக்காரர்கள் டார்க் நிறத்தை கீழ் உதட்டிலும் லைட் நிறத்தை மேல் உதட்டிலும் பூச வேண்டும்.
சிறிய முகமுடையவர்கள் இதற்கு நேர் மாறாக கீழ் உதட்டில் லைட்டாகவும் மேலே டார்க்காகவும் பயன்படுத்த வேண்டும்.
பெரிய உதட்டுக்காரர்கள் அவுட்லைனை குறைத்துக் கொள்ள வேண்டும்.
மெல்லிய உதடுகளை உடையவர்கள் உதட்டின் இயல்பான கோட்டுக்கு வெளியில் பென்சிலை வரய வேண்டும் .
அதேபோல் தடித்த உதடுகளை உடையவர்கள் உதடுகளின் இயல்பான கோட்டுக்கு உள்ளாக அவுட்லைன் போட்டால் சிறிதாக தெரியும்.
கலரான இளம் பெண்கள் பிங்க் கலர்களையும் மாநிறமான இளம் பெண்கள் ஆரஞ்சு கலரிலும் கருநிற பெண்கள் லேசான சிவப்பு நிறங்களையும் திருமணமானவர்கள் லைட்டர் ஷேடுகளையும் உபயோகிக்க வேண்டும் .
காலையில் லைட்டான கலர்களையும் மாலையில் கொஞ்சம் டார்க்கான கலர்களையும் உபயோகப்படுத்தலாம் .
லிப்ஸ்டிக் பூசுவது உதட்டிற்காகத்தான். மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அல்ல அதனால் அழுத்தமாக பூசுவதை தவிருங்கள்.