10 பிரபலமான லேஸ் வேலைப்பாடுகள் தெரியுமா?

செப்டம்பர் 28 - சர்வதேச சரிகை (Lace) தினம்!
International Lace Day
Lace work...Image credit - pixabay
Published on

செப்டம்பர் 28ஆம் தேதி சர்வதேச சரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஆடைகளில் லேஸ் எனப்படும் சரிகை வைத்து வடிவமைக்கப்படுவது ஒரு நுட்பமான கலைத்திறன் ஆகும்.

சர்வதேச சரிகை தினத்தின் வரலாறு;

பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் முதல் முதலில் சரிகை வேலைப்பாடு உருவாக்கப்பட்டது. ஊசி சரிகை என அழைக்கப்படும் ஒரு நூலில் இருந்தும் பாபின் லேஸ் என அறியப்படும் பல நூல்களில் இருந்து தயாரிக்க ப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சரிகை வேலைப்பாடுகள் பற்றிய புத்தகங்கள் வெளிவர தொடங்கின. 18ம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டனில் சரிகை வேலைப்பாடுகள் கொண்ட துணிகளை வடிவமைப்பது தொழில் மயமாக்கப்பட்டது. ஆரம்பத்தில் சரிகை செய்ய பயன்படுத்தப்படும் நூல் கைத்தறி துணியாக இருந்தது. பின்னர்  பணக்காரர்களுக்கு என்று பட்டு அல்லது தங்க சரிகையில் உருவாக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் பருத்தியாலான சரிகை பிரபலமானது.

சரிகை வேலைப்பாடு கொண்ட ஆடைகளின் தனிச்சிறப்புகள்;

ஒரு ஆடை சரிகை வேலைப்பாடு கொண்டிருந்தால் அது நேர்த்தியான மற்றும் நுட்பமான அழகையும் சிறப்பையும் தருகிறது. மலர் வடிவங்கள் இவற்றில் பயன்படுத்தப் படுகின்றன. பெண்கள் அணியும் ரவிக்கைகளின் ஸ்லீவ் பகுதியிலும், விளிம்பு மற்றும் இடுப்புச் சுற்றுப்பட்டை பகுதிகளிலும் வைக்கப்படுகிறது. பட்டு, பருத்தி,  நைலான், பாலிஸ்டர் போன்ற நவீன பொருட்களாலும் லேஸ் வைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
Dry Shampoo பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா?
International Lace Day

10 பிரபலமான லேஸ் வேலைப்பாடுகள்;

1. ஆர்கன்சா லேஸ்  (Organza Lace)

மென்மையான துணியில் பளபளப்பான சிக்கலான சரிகை வேலைப்பாடுகளை கொண்டது. இது இலகுரக துணியில் வைத்து வடிவமைக்கப்படும்.

2. லேஸ்  ஷிஃபான்; (Lace Chiffon)

ஷிபான் மெட்டீரியலில் மலர்களைக் கொண்ட வடிவங்களில் மென்மையான எம்பிராய்டரி வேலைப்பாட்டில் இந்த வகையான லேஸ் அமைந்திருக்கும். எளிமையான ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

3. டல்லே லேஸ்  (Tulle Lace)

நுட்பமான வலை போன்ற அமைப்பு, சிக்கலான சரிகை  மேலடுக்கைக் கொண்டது இது பந்து கவுன்களுக்கு மிகவும் ஏற்றவை

4. சில்க் டுபியோனி  (Silk Dupioni )

இது மிகவும் ஆடம்பரமான லேஸ் வகை. பளபளப்பாகவும் சிக்கலான சரிகை வேலைபாட்டுடனும் உயர்தரமான ஆடைகளுக்கு அமைக்கப்படும் சரிகை. மிக மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

5. பருத்திப் புல்வெளி சரிகை;  (Cotton Lawn Lace)

வீட்டில் அணியக்கூடிய சாதாரணமான ஆடைகளுக்கு இந்த வகையான லேசுகள் பொருத்தமாக இருக்கும். வசீகரமாகவும் இயற்கையான அழகுடனும் விளங்கும்.

6. விவியன் லேஸ்;.  (Vivienne Lace)

இது கடினமான தேன்கூடு போன்ற அமைப்பில் இருக்கும். நவநாகரீக பாணியில் இருக்கும்.

7. லேஸ் நெட்டிங் (Lace Netting):

சிக்கலான சரிகை வடிவங்களைக் கொண்ட இலகுரக, வலை போன்ற துணி, பெரும்பாலும் திருமணத்தில் பெண்கள் தலையில் அணிந்து கொள்ளும் முக்காடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

Lace work saree
Lace work sareeImage credit - pixabay

8. வெல்வெட் லேஸ்;

வெல்வெட் மெட்டீரியலில் மென்மையான பட்டு போன்ற அதே சமயம் சிக்கலான சரிகை வேலைப்பாடுகள் கொண்ட ஆடம்பரமான துணி வகைகளுக்கு மிகவும் ஏற்றது.

9. லேஸ் சாட்டின் :

நுட்பமான பளபளப்பு மற்றும் மென்மையான சரிகை வடிவங்களைக் கொண்டது.

10. ஐலெட் லேஸ் (Eyelet Lace):

சிறிய, அலங்காரத் துளைகள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்ட ஒரு வகை சரிகை துணி, விளையாட்டுத்தனம் மற்றும் வினோதத்தை சேர்க்க விரும்பும் சாதாரண அல்லது அன்றாட ஆடைகளுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com