ஆண்களுக்கான மோனோக்ரோம் ஆடைகளும், அவற்றை அணிவதால் கிடைக்கும் நன்மைகளும் பற்றி தெரியுமா?

மோனோக்ரோம் அவுட் ஃபிட்...
மோனோக்ரோம் அவுட் ஃபிட்...Image credit -agentlemanslifestyle.com

மோனோக்ரோம் அவுட் ஃபிட் என்பது தலையிலிருந்து கால் வரை ஒரே வண்ணத்தில் உடை அணிந்து கொள்வதை குறிக்கிறது. ஒரே நிறத்தில் பேண்ட், சட்டை, ப்ளேசர், ஷூக்கள், பெல்ட், கைக்கடிகாரம், தொப்பி  போன்றவை இருக்கவேண்டும். அணியும் ஆடைகளில் லைட் கலர் மற்றும் டார்க் கலர் போன்ற சிறிய வேறுபாடு மட்டுமே இருக்கும்

ஆண்களுக்கு பொருத்தமான சில மோனோக்ரோம் ஆடைகள்;

1. கருப்பு வண்ண மோனோக்ரோம் ஆடைகள்

கருப்பு நிற பேண்ட் மற்றும் கருப்பு சட்டை அல்லது லெதர் ஜாக்கெட்டுடன்  கருப்பு நிற சூட் பொருத்தமாக இருக்கும். கருப்பு நிற ஷூக்கள் அல்லது செருப்புகள், கருப்பு நிறம் பெல்ட், வாட்ச்  போன்றவை நேர்த்தியாக இருக்கும்.

2. பிரவுன் நிற மோனோக்ரோம் ஆடைகள்

மண் நிறத்தில் உள்ள பிரவுன் நிற ஆடை பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கும். மாலை நேர விருந்து மற்றும் விழாக்களுக்கு இந்த ஆடை நேர்த்தியாக இருக்கும். பழுப்பு நிற தோல் பூட்ஸ், பொருத்தமாக இருக்கும். குளிர்கால இரவுகளுக்கு ஏற்றது

3. சாம்பல் நிறம்

சாம்பல் நிற பேண்ட் உடன் சாம்பல்  நிற ஸ்னீக்கர்கள் அல்லது சாதாரண காலணிகள் அணியவும். சில்வர் நிறத்தில் வாட்ச், கோட்டில் சில்வர் நிற கஃப்ளிங்க்ள் சேர்க்கவும்.

4.  வெள்ளை நிறம்

வெள்ளை நிற பேண்ட் அல்லது ஜீன்ஸ் உடன் வெள்ளை நிற சட்டையை தேர்ந்தெடுக்கவும். வெள்ளை தோல் பெல்ட், தொப்பி, வாட்ச், வெள்ளை கேன்வாஸ், ஸ்னீக்கர்கள் அல்லது லோஃபர்கள் சரியாக இருக்கும்.  இந்த உடை கோடை காலத்திற்கு ஏற்றது. தோட்ட விருந்துகள் மற்றும் கடற்கரை திருமணங்களுக்கு ஏற்றது. பலர் கூடியுள்ள இடத்தில் இந்த ஆடை தனித்துக் காட்டும்.

நீல வண்ணம் மோனோக்ரோம்...
நீல வண்ணம் மோனோக்ரோம்... Image credit - bucco.us

5. சிவப்பு நிற மோனோக்ரோம்

ஆழமான பர்கண்டி சிவப்பு அல்லது துடிப்பான சிவப்புச் செர்ரி நிறம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. சிவப்பு சினோஸ் அல்லது மெருன் நிற பேண்ட்,  சிவப்பு சட்டை அல்லது ஸ்வெட்டர் மேட்ச் ஆக இருக்கும். சாதாரண ஸ்னீக்கர்கள் அல்லது சிவப்பு  தோல் ஷூக்கள் சரியாக இருக்கும்.

6. நீல வண்ணம்

நேவி, ஸ்கை ப்ளூ அல்லது டெனிம் போன்ற பல்வேறு நீல வண்ணங்களை ஸ்டைலான மற்றும் ஒருங்கிணைந்த தோற்றத்திற்காக உபயோகப்படுத்தலாம். இது ரிச் லுக் தரும்.

மோனோக்ரோம்  ஆடைகளை அணிவதால் உண்டாகும் நன்மைகள்;

1. எளிமையும் அழகும்

ஒரே வண்ணத்தில் ஆடைகள் அணிவதால் அது பார்ப்பதற்கு எளிமை மற்றும் அழகை தருகிறது. மிக விரைவில் தயாராகி விடலாம்.

இதையும் படியுங்கள்:
அறுசுவை தெரியும், அதென்ன ‘உமாமி’ சுவை?
மோனோக்ரோம் அவுட் ஃபிட்...

நேர்த்தியும் நுட்பமும்

ஒரே வண்ண ஆடைகள் நேர்த்தி மற்றும் நுட்பமான உணர்வை வெளிப்படுத்துகின்றன. பல்வேறு சந்தர்ப்பங்களில் அணிந்து கொள்ளலாம். நேர்த்தியான பளபளப்பான தோற்றத்தை அவை வழங்குகின்றன. தலையிலிருந்து கால் வரை ஒரே நிறத்தில் உடை அணிந்து கொள்வது ஒட்டுமொத்த தோற்றத்தின் தனிப்பட்ட பாணியை வெளிப்படுத்தும்.  பார்வைக்கு  உயரமாகவும் மெலிந்தவர் போலவும் தெரிவீர்கள்.

அழகியல்

மோனோக்ரோம் ஆடைகள் அழகியலுடன் இணைந்து ஒழுங்கான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட தோற்றத்தை தருகிறது. அலங்காரத்தின் எளிமைத்தன்மை ஒரு விதமான கவர்ச்சியை தருகிறது.

ஆடையை அணிந்திருக்கும் நபரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஸ்டைலிஷ் லுக் தரும் நாள் முழுவதும் அவரது மனநிலையும் நடத்தையும் உற்சாகமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com