விதவிதமான ஓவர்கோட் ஜாக்கெட் மாடல்கள் பற்றித் தெரியுமா?

Do you know about the different overcoat jacket models in Modern Sarees?
Do you know about the different overcoat jacket models in Modern Sarees?Image Credits: YouTube
Published on

த்தனையோ மார்டன் உடைகள் வந்தாலும், எப்போதுமே பெண்களுக்கு மிகவும் பிடித்த உடை எதுவென்று கேட்டால் புடவை என்று சொல்வார்கள். அத்தகைய புடவைகளை தற்போது உள்ள மார்டன் டிரெண்டிற்கு ஏற்றவாறு ஃபேஷனை புகுத்தி, வடிவமைத்து பெண்கள் அணிவது மேலும் பெண்களுக்கு அழகைக் கூட்டுகிறது. ஒரே மாதியான புடவையுடன் கூடிய ஜாக்கெட்டை அணிந்து போர் அடித்துவிட்டது என்றால், இதுபோன்ற மார்டன் மற்றும் ஸ்டைலிஷ்ஷான ஜாக்கெட் ஓவர்கோட்டை ட்ரை பண்ணிப் பாருங்கள். இன்றைக்கு புடவையுடன் சேர்த்து அணியக்கூடிய ஓவர்கோட் டிசைன்களை பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.

1.Cape style Jacket.

Cape style jacket என்பது புடவைக்கு மேலே அணியக்கூடிய கோட் போன்றவையாகும். இதற்கு Sleeves இருக்காது. அதிகமாக காலாருடன் வரக்கூடியதாக வடிவமைக்கப் பட்டிருக்கும். இதை புடவையின் மீது அணியும்போது மிகவும் ஸ்டைலிஷ்ஷாக இருக்கும். Cape Jacket மற்றும் புடவையை இரண்டையும் ஒரே நிறத்திலும் அணியலாம் அல்லது Contrast நிறத்திலும் அணியலாம்.

2. Boho style saree Jacket.

இந்த வகை ஜாக்கெட்களில் துடிப்பான நிறங்களும், டிசைன்களும் மற்றும் வடிவமைப்புகளும் கொண்டிருக்கும். இந்த வகை ஜாக்கெட்களை அணியும் போது, I don’t care look ஐ தரும். இது நன்றாக எடுப்பாக தெரிவதற்கு Solid colours உடன் அணிவது சிறந்ததாகும்.

3. Saree with Long jacket.

புடவையுடன் நீளமான ஜாக்கெட்டை சேர்த்து அணிவது பேன்ட் அல்லது ஸ்கர்ட்டுடன் நீளமான ஜாக்கெட் அணியும் போது கிடைக்கும் அதே ஸ்டைலிஷ் லுக்கை தரும். Raw silk or georgette புடவையுடன் நீளமான கோட்டை சேர்த்து அணியும்போது மிகவும் அழகான மற்றும் நேர்த்தியான லுக்கை கொடுக்கும்.

4.Saree with short Jacket.

இந்த சிறிய ஜாக்கெட் கோட்டை அணியும்போது அது அணிபவருக்கு இளமையான தோற்றத்தை தரும். இந்த ஜாக்கெட்களை உங்களுக்கு ஏற்ற அளவு வரை வடிவமைத்துக் கொள்ளலாம். இடுப்பு வரை அல்லது அதற்கும் சற்று நீளமாகவும் உங்களுக்கு பிடித்த வண்ணம் அமைத்துக் கொள்வது சிறப்பாக இருக்கும். இதில் Art silk, georgette, chiffon ஆகிய புடவைகளுக்கு இந்த ஜாக்கெட் கச்சிதமாக பொருந்தும்.

5. High low saree with jacket.

இந்த வகை ஜாக்கெட்களை புடவையுடன் அணியும்போது நேர்த்தியான அழகை கொடுக்கும். இந்த ஜாக்கெட் முன்பக்கம் சிறிதாகவும், பின்பக்கம் நீளமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த வகை ஜாக்கெட்களில் வெல்வெட்டில் அதிக எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இதை ஒரே நிறத்தில் உள்ள Solid colour raw silk, chiffon, georgette புடவைகளுடன் சேர்த்து அணிந்தால் அற்புதமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
Skincare routine ல் இன்னுமா இதை காசு கொடுத்து வாங்குறீங்க?
Do you know about the different overcoat jacket models in Modern Sarees?

6.Chinese and mandarin collar Jacket.

இது மிகவும் பிரபலமான ஜாக்கெட் டிசைனாகும். இந்த ஜாக்கெட்டை அணியும்போது  எல்லா வகை உடல் அமைப்பிற்கும் பொருத்தமாக இருக்கும். இந்த Chinese and Mandarin Collar ஜாக்கெட்டை ட்ரை பண்ண போகிறீர்கள் என்றால், சற்று நீளமான ஜாக்கெட்டில் காலர், ஸ்லீவ்ஸ் மற்றும் முன்பக்கத்தில் எம்பிராய்டரி அமைப்பது சிறப்பாக இருக்கும்.

7.Denim jacket with saree.

Pastel நிறப்புடவைகளுக்கு மேல் எம்ராய்டரிங் செய்யப்பட்ட டெனிம் ஜாக்கெட் அணிவது தற்போதைய டிரெண்டாக உள்ளது. இப்படி அணிவது Casual look ஐ தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com