சமையலறை பொருட்களையே லிப் பாமாக பயன்படுத்தலாம் எப்படி தெரியுமா?

lip balm
lip balm image credit - pixabay
Published on

லிப் பாம் தீர்ந்து விட்டதா? கவலை வேண்டாம். அவசரத்திற்கு வீட்டிலுள்ள சில சமையலறை பொருட்களையே லிப் பாமாக பயன்படுத்தலாம்.

லிப் பாம் என்பது மெழுகு போன்ற பொருளாகும். இது பொதுவாக உதடுகளை ஈரப்பதமாக்குவதற்கும், வெடிப்பு அல்லது உலர்ந்த உதடுகளை சரி செய்வதற்கும் பயன்படுகிறது. சிலருக்கு உதடுகளின் நிறம் கருமையாக இருக்கும். கருமையை போக்கும்படியான லிப் லைட்டனிங் தன்மை கொண்ட லிப் பாமை பயன் படுத்தலாம். இப்படி எந்த தேவையும் இல்லை. வெறும் அழகுக்காக மட்டுமே லிப் பாம் உபயோகிப்பவர்கள் மாய்ஸ்சரைசர் உள்ள லிப் பாமை பயன்படுத்தினாலே போதும்.

பாதாம் எண்ணெய்:

பாதாம் எண்ணெயில் உள்ள விட்டமின் ஈ மற்றும் சிறந்த ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் புறஊதா கதிர்வீச்சால் ஏற்படும் சேதத்திலிருந்து நம் உதடுகளை பாதுகாக்கும். அத்துடன் உதடுகளின் இயற்கையான நிறத்தையும் மேம்படுத்த உதவும்.

 தேங்காய் எண்ணெய்:

இதிலுள்ள இயற்கையான கொழுப்பு அமிலங்கள் குறிப்பாக லாரிக் அமிலம் வறண்ட உதடுகளுக்கு ஊட்டம் அளித்து ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதனை பாடி லோஷன், லிப் பாம், ஹேர் கண்டிஷனர் என பலவாறாக பயன்படுத்தலாம்.

 ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் உள்ள விட்டமின் ஈ மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவும். இதன் ஊட்டமளிக்கும் பண்புகள் உதடுகளை மென்மையாகவும், மிருதுவாகவும், பிரகாசமாகவும் மற்றும் வறட்சி அடையாமலும், வெடிப்புகளை போக்கவும் பயன்படுகிறது.

 ஷியா வெண்ணை: 

அசாதாரணமான ஈரப்பத மூட்டும் பண்புகளை கொண்டுள்ளது. இது முடிக்கு மட்டுமல்ல தோல் பராமரிப்புக்கும் சிறந்தது. ஷியா வெண்ணையில் இருக்கும் விட்டமின் ஏ, பி,ஈ உதடுகளுக்கு ஊட்டம் அளிப்பதுடன் ஈரப்பதமாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

கோகோ வெண்ணெய்: 

இது தியோப்ரோமா எண்ணெய் என்றும் அழைக்கப் படுகிறது. கோகோ வெண்ணையில் பைட்டோ செர்னிகல்ஸ் உள்ளது. இது உதடுகளில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளவும் உதடுகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படும்.

இதையும் படியுங்கள்:
சுவாசப்பாதை பிரச்னைகளுக்கு கைக்கண்ட நிவாரணியாகும் நொச்சி இலையின் பலன்கள்!
lip balm

ஜொஜோபா எண்ணெய்:

ஜொஜோபா எண்ணெயில் விட்டமின் ஏ, பி சத்துக்கள் உள்ளது. இதனைக் கொண்டு லோஷன்கள், ஹேர் ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்கள் தயாரிக்கப் படுகின்றது. இது வறண்ட உதடுகளில் ஈரப்பதத்தை அளித்து மென்மையாக இருக்க உதவுகிறது.

உதடுகளுக்கு ஊட்டமளிக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் ஹைடிரேட் செய்யும் விட்டமின்கள் நிறைந்த நம் சமையலறை பொருட்களையே லிப் பாமாக பயன் படுத்தலாம். இதில் அதிகப்படியான வாசனையோ, அலர்ஜியை ஏற்படுத்தும் விஷயங்களோ இல்லாததால் தாராளமாக பயன்படுத்தலாம்..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com