சுவாசப்பாதை பிரச்னைகளுக்கு கைக்கண்ட நிவாரணியாகும் நொச்சி இலையின் பலன்கள்!

நொச்சி இலை, பூ
நொச்சி இலை, பூhttps://vanakkamlondon.com
Published on

நொச்சி இலை பல ஆரோக்கிய நன்மைகளைத் தரவல்லது. எளிதில் கிடைக்கும் இதைக் கொண்டு சிறு சிறு உடல்நலக் கோளாறுகளை குணமாக்கிக் கொள்ளலாம். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சளியால் ஏற்பட்ட சுவாச அடைப்பு நீங்கும்.

* தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் காய்ந்த நொச்சி இலைகளை புகை மூட்டி அந்த புகையை சுவாசிக்க, தலைவலி குணமாகும்.

* நொச்சி இலையை தலையில் வைத்து கட்ட, தலைபாரம் குறையும்.

* கரு நொச்சி இலை சாறு, சீதபேதி, உடல் பலவீனம், அஜீரணம், மந்தம், நரம்பு வலி, செரிமாமின்மை போன்ற பிரச்னைகளைப் போக்கும்.

* நொச்சி இலை ஒருவித வாசனை கொண்டது. அவைதான் சுவாசப் பாதையை சீராக்கி நன்மை அளிக்கிறது. கடுமையான நெஞ்சு வலி, இருமல் தொந்தரவு இருந்தால் கொதிக்க வைத்த தண்ணீரில் நொச்சி இலைகளைப் போட்டு ஆவி பிடிக்க, சுவாசப் பாதை சீராகும்.

* நொச்சி இலையை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை பயன்படுத்தி குளிக்கவும் செய்யலாம். இது உடலுக்கு பல்வேறு விதங்களில் பயன் தருகிறது.

* உடலில் ஏற்படும் கட்டி, வீக்கத்திற்கு நொச்சி இலைகளை வதக்கிக் கட்டி மேல் வைத்துக்  கட்ட அவை கரைந்து போகும்.

* நொச்சி இலை உடலின் பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வலி, வீக்கத்தை குறைக்கிறது. கை, கால், முட்டி வலிக்கும் நொச்சி இலையை கசக்கி துணி வைத்துக் கட்ட நிவாரணம் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
நாற்பத்தெட்டு கிராம மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் ஜெனகை மாரியம்மன்!
நொச்சி இலை, பூ

* புண் மற்றும் காயங்களுக்கு நொச்சி இலை சாறை நல்லெண்ணையை கலந்து கொதிக்க வைத்து ஆறியதும் பாட்டிலில் சேமிக்கவும். இதை புண், சிரங்கு, படை உள்ள இடத்தில் தடவி வர, நல்ல நிவாரணப் பலன் கிடைக்கும்.

* நொச்சி மலர்கள் அடர்ந்த கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். இதில் உற்பத்தியாகும் தேன் உடல் வலி, வீக்கத்தைப் போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com