வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நெயில் பாலிஷை அகற்றும் வழிகள் தெரியுமா?

nail polish...
nail polish...Image credit pixabay
Published on

பொதுவாக, பெண்கள் நெயில்பாலிஷை அகற்ற அசிட்டோன்  பயன்படுத்துவார்கள். ஆனால் அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நெயில்பாலிஷை அகற்றுவது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அசிட்டோன்  ஏற்படுத்தும் பாதிப்புகள்;

அசிட்டோனில் உள்ள ரசாயனம் நகங்கள் மற்றும் சுற்றியுள்ள தோலை மிகவும் உலரச்செய்து, காலப்போக்கில் நகங்கள் உடைய வழிவகுக்கும். சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு, தோல் சிவந்து, அரிப்பு அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.

அசிட்டோன் மிகவும் வலுவான மற்றும் கடுமையான வாசனையைக் கொண்டுள்ளது. இதனால் தலைவலி, தலைச்சுற்றல் அல்லது சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். அசிட்டோன் ஒரு இரசாயன கரைப்பான். இது முறையற்ற முறையில் அகற்றப்படும் போது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்.

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நெயில் பாலிஷை அகற்றும் வழிகள்;

வினிகர் மற்றும் எலுமிச்சை;

வினிகர் இயற்கையில் அமிலத்தன்மை கொண்டது. எலுமிச்சைச் சாறுடன் கலக்கும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிறிதளவு வினிகர் மற்றும் எலுமிச்சைசாறை சூடான நீரில் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை நகங்களில் தடவி 10 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். பிறகு சிறிதளவு பஞ்சை எடுத்து நகங்களில் உள்ள நெயில் பாலிஷை அகற்றினால், எளிதில் நீங்கிவிடும்.

சானிடைசர்கள்;

பெரும்பாலான சானிடைசர்களில் சிறிது ஆல்கஹால் உள்ளது. இது நெயில் பாலிஷை மென்மையாக்கி நல்ல கரைப்பானாக செயல்படும். முதலில் நகங்களை வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும்.  பின்னர் பஞ்சு உருண்டையில் சிறிது சானிடைசர் தெளித்து நெயில் பாலிஷை துடைத்தால், நகங்களில் உள்ள நெயில் பாலிஷ் அகன்றுவிடும்.

பற்பசை;

பற்பசையில் எத்தில் அசிடேட் உள்ளது, இது நெயில் பாலிஷ் ரிமூவர்களில் காணப்படும் பொதுவான மூலப்பொருளாகும். நெயில் பாலிஷை அகற்ற வெள்ளை பற்பசையைப் பயன்படுத்தவும். ஒரு துளி பற்பசையை எடுத்து  நகங்களில் சிறிய அளவில் தடவவும். ஐந்து நிமிடம் கழித்து, நகங்களை பழைய டூத் பிரஷ் அல்லது பேப்பர் டவலால் ஸ்க்ரப் செய்து நெயில் பாலிஷை அகற்றவும்.

இதையும் படியுங்கள்:
இயல்பான நிலையில் இருப்பவர்களுக்கு எப்போதும் சந்தோஷம்தான்!
nail polish...

ஹேர்ஸ்ப்ரே;

ஹேர் ஸ்ப்ரேக்கள் நெயில் பாலிஷ் ரிமூவருக்கு அடுத்த சிறந்த மாற்றாகும். ஒரு பஞ்சு உருண்டையில் ஹேர் ஸ்ப்ரேயை நேரடியாக ஸ்ப்ரே செய்து கொள்ளவும். பின்னர் நகங்களில் உள்ள பாலிஷ் மேல்  ஸ்வைப் செய்வதன் மூலம் நெயில் பாலிஷை அகற்றலாம். அது முழுமையாக வெளியேறும் வரை மீண்டும் செய்யவும். பின்னர் கைகளை நன்கு கழுவிக் கொள்ளவும்.

டியோடரன்ட்;

 நெயில் பாலிஷை அகற்ற மற்றொரு வழி டியோடரண்டைப் பயன்படுத்துவதாகும். அதை நகங்களில் தெளித்து, பருத்திப் பஞ்சினால்  தேய்க்கவும். இரண்டு மூன்று முறை முயன்றால் பாலிஷ் அகன்றுவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com