இயல்பான நிலையில் இருப்பவர்களுக்கு எப்போதும் சந்தோஷம்தான்!

Motivation article
Motivation articleImage credit - pixabay
Published on

யற்கையை உற்று கவனித்தால் அது ஆனந்தமாக இருக்கிறது புரியும். பூ ஆனந்தமாக உள்ளது‌ அருவி இனிமையாக பாடுகிறது. பறவை வசீகரத்தோடு வட்டமடிக்கிறது. மனிதன் மட்டும்தான் சந்தோஷத்தை தொலைத்துவிட்டு சங்கடத்தோடு சகவாசம் வைத்துக் கொள்கிறான். அரண்மனையில் பணிபுரியும் சேவகர் ஒருவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். அரசருக்கு குறைந்த வருமானம் உள்ள இவனால் எப்படி சந்தோஷமாக இருக்க முடிகிறது என சிந்தித்தார். அவனை அழைத்து உனக்கு வருத்தமே கிடையாதா என்று கேட்டார்.

அதற்கு அவன் "நான் ஏழை. தேவைகள் குறைவு. மழை வெயிலை மறைக்க கூரை. வயிறு நிரம்ப ஏதோ உணவு. மானம் காக்க துணி. இது எனக்குப் போதுமானது. வேறு ஆசைகள் எதையும் வைத்துக் கொள்வதில்லை" என்றான்.

அமைச்சரிடம் இதைக்கூற  அவர் அவனை கவலைபட வைத்து விடலாம். 99 தங்கக் காசுகளை அவன் வீட்டு வாசலில் வைத்த பிறகு பாருங்கள் என்றார். அப்படியே செய்யப்பட்டது

ஒன்று    குறைகிறதே  என்று அங்கும் இங்கும் தேடினான். எப்பாடுபட்டாவது பணம் சேர்த்து ஒரு தங்கக் காசு வாங்கி நூறு பொற்காசுகளாக முழுமைபடுத்த கலகலப்பு நிம்மதி சந்தோஷம் எல்லாம் தொலைத்தான். பதட்டமும் படபடப்பும் அவனது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் குடியேறிவிட்டது.

அரசே பார்த்தீர்களா அவன் நமது சங்க உறுப்பினர் ஆகிவிட்டான் என்றார் அமைச்சர். சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் சந்தோஷப்பட முடியாதபடி இந்த மனோபாவம் நம்மைக் கெடுக்கிறது.

ரு நரி காலையில் வேட்டைக்குப் புறப்பட்டது. சூரிய ஒளியில் அதன் நிழல்  வெகு நீளமாக வெகு பிரம்மாண்டமாகத் தெரிந்தது. நாம் ரொம்ப பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய நமக்குப் பசி தீர யானையோ ஒட்டகமோ கிடைத்தால்தான் கட்டுப்படியாகும்  என எண்ணி சின்ன விலங்குகளைப் பார்த்து அலட்சியப்படுத்தி பசிக்கு யானை யானை என ஓடிக் கொண்டேயிருந்தது. மதியம் சூரியன் தலைக்குமேல் வந்தவுடன் அதன் நிழல் சிறுத்து காலடியில் விழுந்தது. "ஆஹா நாம் பசியால் வாடி களைத்துப் போய்விட்டோம் என நரி வருந்தியது. இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக்குட்டியோ கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என தேடியது. ஒன்றுமே கிடைக்கவில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது. நரிக்குத் தன் நிழலே தெரியவில்லை. ஆஹா நாம் வெகுவாக இளைத்து விட்டோம். இந்தப் பசிக்கு ஒரு எலும்பு அல்லது கோழிக்குஞ்சு கிடைத்தால் கூடப் போதும் என எண்ணி தள்ளாடி தள்ளாடி நடந்தது. இந்த நரியின் கற்பனை மாதிரிதான் சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக் கொண்டு தங்கள் திருப்திக்கு எதை எதையோ தேடுகிறார்கள். முடிவில் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி நாடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தொடர் முயற்சிகளால் திறக்கப்படும் இறைக் கதவுகள்!
Motivation article

இரண்டும் வேண்டாமே! அரண்மனை சேவகனுக்கு கிடைத்த 99 பொற்காசுகளை அனுபவிக்காமல் அதை நூறாக்கப் போராடி நிம்மதியை இழந்தான். காலை நரிபோல் ஆர்வத்தோடு தேடவும் வேண்டாம். மாலையில் கவலையோடு வாடவும் வேண்டாம். இயல்பான நிலையில் இருப்பவர்களுக்கு எப்போதும் சந்தோஷம்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com