ஆடைகளின் மூலம் பெண்கள் தங்களை எப்படி அழகுபடுத்திக்கொள்ளலாம் தெரியுமா?

How women can beautify themselves.
Azhagu tips
Published on

“சாமுத்திரிகா இலட்சணம்” என்று சொல்வதுபோல் எந்தவித குறையும் இல்லாமல் பிறப்பவர்கள் குறைவு. தங்களை ஆடையின் மூலம் ஒப்பனை செய்து கொண்டு தங்கள் குறைகளை மறைத்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் புத்திசாலிகள்.

சரியான உடையை தேர்வு செய்வது: நம்முடைய உடல் அமைப்புக்குத் தக்க ஆடைகளைத் தேர்வு செய்வது முக்கியம். ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட உடல் அமைப்பு இருக்கும், அதன்படி நன்றாகப் பொருத்தமான உடைகள் அழகை வலுப்படுத்தும்.

நிறம் பொருத்தங்கள்: நம்முடைய தோலின் நிறம் மற்றும் ஆடை நிறம் ஒருவருக்கொருவர் நன்றாக பொருந்துமாறு தேர்வு செய்யலாம். மெலிந்த நிறங்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரே மாதிரியாக தோன்றாது. கறுப்பு நிறம் உடையவர்கள் வெள்ளை கலந்த நிறத்தில் அல்லது லைட் கலர் ஆடைகள் அணிந்தால் எடுப்பாக இருக்கும்.

சரியான அளவு: ஆடைகள் மிகுந்த இடைவெளியோ அல்லது அதிகமாக இறுக்கமாகவோ இருக்கக்கூடாது. சரியான அளவிலான ஆடைகள் அணிந்தால் அழகாகவும் வசதியாகவும் இருக்கும்.

பயன்படுத்தும் பொருளின் தரம்: நல்ல துணி மற்றும் வடிவமைப்பு கொண்ட ஆடைகளை அணியுங்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.

பொருத்தமான அணிகலன்கள்: எளிமையானதொரு அணிகலன்கள் உங்கள் ஆடையின் அழகை பெருக்கும். கடிகாரம், காதணி, சில கைக்கொடிகள் என தக்க அணிகலன்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

காலநிலைக்கு ஏற்ப தேர்வு: வெயிலில் லைட் நிற ஆடைகள், மழைக்காலத்தில் தண்ணீர் நிறத்தில் கிடைக்கும் வஸ்திரங்கள், குளிர்காலத்தில் கோட், ஸ்வெட்டர் போன்றவை பொருத்தமாக இருக்கும். வெயில் காலத்தில் நூல் சேலைகளாகிய கைதறி சேலைகளை கட்டலாம். இது சரும நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

அழகான காலணி: ஆடைகளுக்கு பொருத்தமான காலணிகளைத் தேர்வு செய்வது தோற்றத்திற்கு முக்கியம்.

நம்பிக்கையுடன் அணியுங்கள்: அழகாக ஆடைகள் அணிவதற்கு நம்முடைய உடை மட்டுமல்ல, அதனை உடுத்தும் நம்முடைய நம்பிக்கையும் முக்கியம்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் உதடு வெடிப்பு நீங்க 5 எளிய வழிகள்!
How women can beautify themselves.

தேர்ந்தெடுக்கும் விதம்: ஆடையில்தான் அழகே இருக்கிறது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியானவர்கள். அவரவர்களுடைய நடை, இயல்பு ஆகியவைகளுக்கு தகுந்த மாதிரி டிரஸ்ஸை தேர்ந்தெடுத்து எப்போதும் அதையே கடைப்பிடிக்க வேண்டும்.

ஒல்லியான நீண்ட கைகளை உடைய பெண்கள் நீண்ட கைகளை உடைய சோளிகள் அணிந்தால் கைகள் உருண்டையாக அழகாக தெரியும். கைகளுக்கு ஏற்றபடி ஜாக்கெட் தைக்க வேண்டும்.

புது துணி எடுக்கும்போது விளம்பரத்தைக்கண்டு, விலையை, பகட்டை, சிலு சிலுப்பை, நிறத்தை கண்டு மயங்கி விடக்கூடாது. துணியை எடுத்து உடலோடு சேர்த்து பொருத்தமாக இருக்கிறதா என்று பார்த்து, சூரிய வெளிச்சத்தில் கொண்டு வந்து துணியை பார்த்து பிடிக்காவிட்டால் பல கடைகளிலும் ஏறி, இறங்கி தேர்ந்தெடுக்க வேண்டும். காசு கொடுத்து வாங்குவதில் கௌரவம் பார்க்க கூடாது.

ஒல்லியாக இருப்பவர்கள் பருத்தி ஆடைகளை அணிந்தால் அவர்கள் பார்ப்பதற்கு எடுப்பாக இருப்பார்கள். லைட் கலர் துணிகளை அணியலாம். சோளி ஒரு நிறத்திலும், சேலை வேறு நிறத்திலும் இருந்தால் அழகாக தோற்றமளிக்கும்.

பருமனாக இருப்பவர்கள் சோளியும், சேலையும் ஒரே நிறத்தில் தேர்ந்தெடுக்கலாம். டார்க் நிறங்கள் இவர்களுக்கு பொருந்தும். சோளிகளுக்கு கைகளை கொஞ்சம் நீளமாக வைத்து தைக்கலாம்.

பெண்கள் கோயிலுக்கு போகும்போது எளிய உடைகளை அணியலாம். ஆடம்பரமான உடைகளை அணிந்து அதிக மேக்கப்புடன் போகும்போது மற்றவர்கள் கவனத்தை கவர்வதால் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பக்தி சிதறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com