நீடா அம்பானியின் அழகு + ஆரோக்கியத்திற்கான சீக்ரெட் என்ன தெரியுமா!

நீடா அம்பானி...
நீடா அம்பானி...Image credit - manithan.com
Published on

நீடா அம்பானி 60களில் இருந்தாலும் இளமையான தோற்றத்துடன் ஃபிட்டாக காணப்படுகிறார். ஒரு சுறுசுறுப்பான தொழிலதிபராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் தனது பொறுப்புகளை செய்து வருவதுடன் ஆரோக்கியத்திற்காகவும் நேரத்தை செலவிடுகிறார்.

மூன்று குழந்தைகளுக்கு தாய் மற்றும் பேரப்பிள்ளை எடுத்தவர் என பல அடையாளங்கள் இருந்தாலும், அவர் எப்படி எப்பொழுதும் போல் ஒரே மாதிரி இருக்கிறார் என்பதற்கான பதில் உடற்பயிற்சி, யோகா, பிட்னஸ் இவைதான்.

சிறந்த சமூக ஆர்வலரான இவர் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து வருகிறார். உடற்பயிற்சி, யோகா செய்வதுடன் நீச்சல் பழக்கத்தையும், டான்ஸ் பயிற்சியையும் செய்து வருவதால் ஆரோக்கியமாக இருப்பதாக கூறுகிறார். இவர் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் எலுமிச்சை ஜூஸுடன் நாளை தொடங்குவாராம்.

யோகாவின் தீவிர பயிற்சியாளர் இவர். காலை, மாலை என இரு வேளைகளிலும் யோகா செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இது அவர் உடல் தகுதியை மேம்படுத்துவதுடன் மனத்தெளிவையும் வழங்குவதாக கூறுகிறார். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒதுக்கி புதிய காய்கறிகள், பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார்.

காலையில் புத்துணர்ச்சியூட்டும் நடைப்பயணத்தையும், அதற்குப் பிறகு பீட்ரூட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜூஸையும் எடுத்துக் கொள்வதாக கூறும் இவர், நடைப்பயிற்சி தனக்கு ஊக்கம் அளிப்பதாகவும், ஜூஸ் சருமத்திற்கு பளபளப்பையும், ஆரோக்கியத்தையும் தருவதாகவும் கூறுகிறார்.

விட்டமின் சி, இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற விட்டமின்கள் நிறைந்த பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் இவை உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்ரூட் சாறில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுவதால் சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை பராமரிக்கவும், சுருக்கங்களை தடுக்கவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
மனக்கவலை… மாற்றல் எளிது!
நீடா அம்பானி...

மதிய உணவில் காய்கறிகள், சாலட் மற்றும் சூப்புகள் இடம் பெறுமாம். சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பதும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் அவர் காட்டும் அக்கறையை உணர்த்துகிறது.

இரவு உணவுக்கு மிகவும் லைட்டான உணவுகளையே எடுத்துக்கொள்கிறார். இது வளர்சிதை மாற்றத்திற்கும், சிறந்த தூக்கத்திற்கும் உதவுகிறது. குறிப்பாக சூப்களையும், முளைகட்டிய தானியங்களையும் சேர்த்துக் கொள்கிறார்.

உடல் எடைக்கு ஏற்ப தினமும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர், அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com