மனக்கவலை… மாற்றல் எளிது!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

னதால் வாழ நேர்ந்தவர்கள் மனிதர்கள் மட்டும்தான். மனதிற்கு ஏதேனும் வந்துவிட்டால் நம்மால் அதனை எளிதில் அறிந்து கொள்ளவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடிவதில்லை. அலுப்பும் சலிப்புமாக, சோர்வும் எரிச்சலுமாக, கோபமும் ஆத்திரமுமாக நம் செயல்பாடுகள் வெளிப்பட்டு நம் மனக்கவலைகள் வெளிப்பட்டு விடுகிறது. மனதிற்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் சோம்பலும் மறதியும் சேர்ந்து கொண்டு இல்லாத நோய்களையும் இருப்பதாக நினைக்கத் தூண்டி நம்மை படுக்கையில் தள்ளி விடுகிறது.

மனதில் கவலைகள் மட்டும் தோன்றிவிட்டால் நம் வாழ்வின் மேல் உள்ள நம்பிக்கையை சிதைத்து தயக்கமும், எந்த வேலை செய்யவும் சுணக்கமும் ஏற்படவும் செய்கிறது. நம்முடைய இயக்கம் முற்றிலுமாக தடைப்பட்டு விடுகிறது. மனக்கவலைகள் தோன்றிவிட அவை கரையான் அரித்த புத்தகம்போல் ஆகிவிடும். தொடக்கத்தில் இதெல்லாம் நமக்கு சுகம் தருவது போல் தோன்றும். அதாவது நம் உடலில் சிரங்கு ஏற்பட்டால் அதை சொறிந்து விடும்போது சுகம் ஏற்படுமே அதுபோல் சுகமாக தெரியும். ஆனால் அதுவே பின்பு ரணமாக மாறி நம் மனதை காயப்படுத்தும். 

மனக் கவலைகள் மெல்ல மெல்ல நம்மை தின்னத் தொடங்கிவிடும். இப்படிப்பட்ட மனக்கவலைகளை மாற்றுவது மிகவும் சுலபம்.  கண்ணதாசனின் பாடலில் "நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை" என்ற வரிகள் நிதர்சனமான உண்மை.

பாரதியாரோ "எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்று அழிக்கும் கவலை என்னும் குழியில் விழுந்து குமையாதீர்" என்று எச்சரிக்கிறார். தின்று விளையாடி இன்புற்று வாழவும் தீமையெல்லாம் அழிந்து போகும் திரும்பி வராது என்று உறுதி கூறுகிறார். கவலைக்கு மாற்று மருந்து மனதை திசை திருப்புதலேயாகும். அத்துடன் எந்த ஒரு பொருள் மீதும் அளவு கடந்த பற்றுகளை வைக்கக்கூடாது. அதாவது ஈடுபாடு அதிகரிக்க அதிகரிக்க கவலையின் விகிதாச்சாரம் உயர்ந்து கொண்டே செல்லும்.

எல்லாவற்றிற்கும் மாற்று இருக்கிறது. கஷ்ட காலத்தை அதாவது கடினமான நேரத்தை மனப்பக்குவத்தால் கடக்கும் கலையை கற்றுக் கொண்டால் நமக்கு துன்பம் நேராது. "என்ன கொண்டு வந்தோம் இழப்பதற்கு" என்கிறது கீதை. இந்த பூவுலகை விட்டு செல்லும்போது நம்மால் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. எல்லாவற்றிற்கும் நாம் தற்காலிக உரிமையாளர்களே என்பதை உணர்ந்தால் போதும் மனக்கவலை மாற்றல் எளிது. எந்த இழப்பிற்கும் மனதை விட்டு விடாமல் தேற்றிக் கொள்வதும், இழப்பால் ஏற்பட்ட வெற்றிடத்தை தன்னம்பிக்கை உணர்வுடன் தத்துவார்த்த பார்வை கொண்டு நிரப்பவும் செய்தால் மனக்கவலை மாற்றல் எளிது.

இதையும் படியுங்கள்:
அஷ்டலட்சுமிகளை வணங்குவதால் உண்டாகும் பலன்கள்!
motivation article

பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை கட்டி ஆண்ட அரசர்களை நினைத்துப் பாருங்கள். போகும்போது எதையேனும் கட்டி எடுத்துச் சென்றார்களா?

மனம் என்பது எந்த நிலையிலும் கலங்கி விடாமல் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டியது அவசியம். மனக் கவலைகளை மாற்றுதல் எளிது. சின்ன சின்ன விஷயங் களுக்கு எல்லாம் கவலைப்பட்டு வாழ்க்கையின் சந்தோஷங்களை இழக்காமல் இறைவனை சரணடைந்தவர்களுக்கு மனக்கவலை மாற்றல் எளிது.

தீராத கவலைகள் என்று எதுவுமே கிடையாது. மனதை ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் வாழ்க்கை வாழ்வதற்கே என்று புரிந்து கொண்டு எடுத்ததற்கெல்லாம் கவலை கொள்ளாமல் வாழப்பழக மனக் கவலை மாற்றல் எளிது. ஒரு பிரச்சனை வந்தால் அதனை அறிவுபூர்வமாக அணுகி தீர்வு கண்டால் மனக்கவலை மாற்றல் எளிது. செய்வோமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com