தர்பூசணி பழம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும்தான் தெரியுமா?

தர்பூசணி பழம் ...
தர்பூசணி பழம் ...Image credit - pixabay.com

ர்பூசணி பழத்தை தண்ணீர் பழம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தண்ணீர் அதிகம் உள்ளது. தர்பூசணி பழத்தில் 91% தண்ணீரும் 3.3% மிகச்சிறிய அளவில் இரும்புச்சத்து தாது உப்புக்கள் கால்சியம் கொழுப்பு பாஸ்பரஸ் பரதம் போன்றவை இருக்கின்ற இதில் கலோரிகள் எதுவுமே இல்லை. ஆனால் தாகம் தீர்ப்பதில் தண்ணீருக்கு இணையாக இதைச் சொல்லலாம்.

தர்பூசணி பழம் உடலையும் மூளையும் குளிர்ச்சியாக்கி அமைதிப்படுத்துகிறது.

தர்பூசணியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் அளவு சருமத்தை ஆரோக்கியமாக வைத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் உடலில் ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டால் தர்பூசணி அதை போக்குகிறது.

தர்பூசணி பழத்துடன் இளநீர் கலந்து அருந்த, வெயிலினால் ஏற்படும் வெப்பம் குறையும் உடல் சூடு தணியும்.

தர்பூசணியில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் இதய துடிப்பை சீராக்கும்.

தர்பூசணி பழச்சாறுடன் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் பூசி பின்னர் முகம் கழுவ முகம் பளபளப்பாகும்.

தர்பூசணி பழத்தை வாங்கும்போது அதை கைகளில் எடுத்துப் பார்க்க வேண்டும். அதிக எடை உள்ளது போன்று தெரிந்தால் அது நீர் சத்தானது. பழத்தின் மீது அதிக மென்மையாகவோ அல்லது மஞ்சள் நிறத்திலோ காணப்பட்டால் நன்கு கனிந்த பழமாகும். மாறாக பச்சை நிறத்தில் காணப்பட்டால் நன்கு காய்க்கும் முன்னரே பறிக்கப்பட்டதாகும் அதில் அதிக அளவு நீர்ச்சத்து இருக்காது. அதிக பச்சை நிறத்தினை உடையதாக இருந்தால் அதிக அளவு இனிப்பு தன்மை இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அழகு சாதனப் பொருட்களைப் பாதுகாக்கும் வழிகளும் நம்மை அழகுபடுத்தும் வழிகளும்!
தர்பூசணி பழம் ...

தர்பூசணியின் விதையுடன் சாப்பிடலாம் விதையில்தான் அதிக அளவு வைட்டமின்களும் பொட்டாசியம் புரோட்டீன்களும் உள்ளது.

தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை நீக்கி சதை பகுதியை மட்டும் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து பானமாக பருகினால் உடலுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து கிடைக்கும். வயதானவர்கள் இதை பருகினால் இளமை தோற்றத்துடன் இளமை துடிப்புடன் இருப்பார்கள்.

கோடை காலத்தில் ஏற்படும் நீர்க்கடுப்பு நீர் கசிவு போன்றவைகளை கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைக்கிறது வேனல் கட்டிகளை குணப்படுத்துகிறது.

தர்பூசணி பழச்சாறு பயத்தமாவு இரண்டையும் கலந்து கலவையை முகத்தில் பூசி வந்தால் முகம் புதுப்பொலிவு பெறும்.

தர்பூசணி துண்டுகளுடன் சிறிது தேன் மற்றும் தயிர் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும்.

தர்பூசணி சாறு, வெள்ளரிக்காய் சாறு இரண்டையும் கலந்து பயன்படுத்தினால் முகப்பருக்கள் உடனே நீங்கிவிடும்.

தர்பூசணி சூரியனிடமிருந்து சரும எரிச்சலை சரியாக்கும். வெளியில் இருந்து வந்தவுடன் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி தர்பூசணி மசித்து அல்லது அதன் சாற்றை தனியே எடுத்து காட்டன் பஞ்சில் நனைத்து முகத்தில் ஒத்தி எடுக்க வேண்டும். முகம் முழுவதும் ஒத்தி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முகம் வெயிலினால் ஏற்பட்ட எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தர்பூசணி பழம் ...
தர்பூசணி பழம் ...

தர்பூசணி பழம் நீரழிவு நோய் இதய நோய் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் உடல் பருமன் உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது.

தர்பூசணியில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் இதயத்துடிப்பேச்சு இருக்கும்.

தர்பூசணி பழச்சாற்றுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும் கண்கள் குளிர்ச்சி பெறும்.

தர்பூசணியில் இருக்கும் தனிமங்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன அதேபோல் இதயத்தில் தமனிகள் சிறப்பாக செயல்படவும் தர்பூசணி பழங்கள் உதவுகின்றன. இதில் இருக்கும் வைட்டமின் சி உடலுக்கு கட்டாயம் தேவைப்படும் ஊட்டச்சத்து ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com