கிரிஸ்டல் ரோலர் ஏழாம் நூற்றாண்டில் சீனர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது நமது முகத்தில் வயதான தோற்றம் உண்டாகாமல் தடுக்க உதவுகிறது. ஆற்றல் சமநிலை, அக்குபிரஷர், மெரிடியன் தெரபி ஆகியவற்றிற்கும் உதவுகிறது.
இதனை தினமும் உபயோகித்து வந்தால் முகத்தில் உள்ள எலும்புகள் சரியான வடிவத்தில் மாற உதவும். முகம் அழகான வடிவம் பெறும். மேலும் திசுக்களையும் சீராக வைத்து சருமத்தை சுருக்கம் விழாமல் இளமையாக வைத்துக் கொள்ளவும் உதவும்.
பலன்கள்:
கிரிஸ்டல் ரோலர் முகத்தை சரியான அளவிலும் 'V' வடிவத்திலும் மாற்ற உதவும். இந்த மசாஜ் செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். பொலிவான சருமத்தையும் கொடுக்கும்.
இந்த வகையான மசாஜ் முகத்தில் உள்ள சருமத்தின் மூலம் எலும்புகளைத் தூண்டுகிறது. இது தேவையற்ற கொழுப்புகளை நீக்கி முகத்தின் வடிவத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இது தேவையற்ற செல்கள், திசுக்கள் ஆகியவற்றையும் நீக்கிவிடும்.
ஒரு அறுவை சிகிச்சை மூலம் எப்படி முக வடிவத்தை மாற்றிக் கொள்கிறார்களோ அதுபோல் தான் இதுவும். ஆனால் இது இயற்கை முறையில் செய்யப்படும் ஒன்று. ஆனால் இதற்கு அதிக நாட்களும் ஆகும்.
உபயோகப்படுத்தும் முறை:
கல்லினால் செய்யப்பட்ட இந்த கிரிஸ்டல் ரோலர் ஒன்றே அனைத்து பலன்களையும் தருகிறது. இது நடுவில் பிடிமானத்துடனும் இரண்டு பக்கமும் உருளை கல் போலவும் பொறுத்தப் பட்டிருக்கும். முகத்தில் நன்றாக எண்ணெய் தேய்த்து விட்டு, பின் மசாஜ் செய்ய வேண்டும்.
முதலில் கிரிஸ்டல் ரோலரின் ஒருபக்கம் உள்ள சின்ன கல் பயன்படுத்தி தாடைப் பகுதியின் இருப்பக்கமும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் மறுப்பக்கம் இருக்கும் சற்று பெரிய கல் பயன்படுத்தி கன்னங்களின் இருபக்கமும் கீழிருந்து மேலாக 10 முறை தேய்க்க வேண்டும்.
அதன்பிறகு சிறு கல் பயன்படுத்தி மூக்கின் வளைவிலிருந்து கண்ணுக்கு கீழ் இருபக்கமும் மசாஜ் செய்ய வேண்டும். கடைசியில் பெரிய கல் மூலம் நெற்றியில் இடதிலிருந்து வலமாக மசாஜ் செய்ய வேண்டும்.
பிறகு விரல்களை வைத்து நன்றாக எல்லா பகுதிகளிலும் மசாஜ் செய்ய வேண்டும்.
இப்படி தினமும் செய்து வருவதால் கண்ணுக்கு கீழ் விழும் கருவளையம், சுருக்கம் ஆகியவை நீங்கி, முகம் வடிவத்துடனும் பொலிவாகவும் இருக்கும்.