-லதா சேகர்
எப்பப் பார்த்தாலும் பளிச்சுன்னு மேக்-அப் பண்ணி, நீட்டா ட்ரஸ் போட்டு, ஒழுங்கா தலைவாரிகிட்டு... இப்படி இருக்கறதெல்லாம் ஃபாஷன் இல்லையாம். கலைந்த தலை முடி, டல்லடிக்கற ஃபேஸ், தொள தொள ட்ரஸ்... இப்படி ட்ரஸ் பண்ணிக்கறதுதான் லேட்டஸ்ட் ஃபாஷனாம்.
இதற்குப் பெயர் 'அவுட் ஆஃப் பெட்' (Out of bed) லுக்காம். அதாவது 'இப்பதேன் படுக்கையிலிருந்து எந்திரிச்சேன்' ங்கற தோற்றம்.
பார்ட்டிக்கு போகற மாதிரி மேக்-அப் உடை இருப்பதைவிட பார்ட்டி முடிந்து வீடு திரும்பற மாதிரி இருப்பதே சூப்பர் லுக் என்கின்றனர் யூத்! (தாங்க முடியலடா சாமி).
பைஜாமா, டெனிம் ஜீன்ஸ், தொள தொள ஸ்வெட்டர்கள், லூஸா ஷேப்பே இல்லாத ஷர்ட்... என இவ்வகை ட்ரஸ்கள்தான் இன்றைய டாப் ஃபேஷன். ஹாலிவுட் ஸ்டார்கள் இப்படி தாறுமாறாக ட்ரஸ் பண்ணி 'ரெட் கார்ப்பெட்டில் வலம் வருவது ஃபாஷனாகி விட்டது. எதுவுமே பர்ஃபெக்டாக இருக்கக் கூடாது. இம்பர்ஃபெக்ட் மேக் அப், ட்ரஸ் என்று இருந்தால் ட்ரெண்டியா கரெக்டா கெளம்பிட்டீங்கன்னு அர்த்தம்.
கண்ணுல மை, ஐ-லைனர் சரியாக, சீராக வரைந்து, தலைமுடியை ஷைனிங்கா செட் பண்ணி, ட்ரஸ்ஸும் படு நேர்த்தியாக ஃபிட்டிங்காக போட்டால் இவ்வகை அப்பியரன்ஸுக்கு செட் ஆகாது. நீங்க கேமிலிருந்து அவுட். அம்புட்டுத்தேன்...
தலையை சிலிப்பி விட்டு கோதிவிடவும். கண் மையை விரலால் மென்மையாக அழுத்தி கலைக்கவும். (இரவு நேரத்தில் வேண்டாம்- லக லக லக லக). படு காஷூவலா ட்ரஸ் மாட்டுங்க. தொள தொளன்னு இருக்கணும்.
டார்க் லிப்ஸ்டிக் போடலாம். ஆனா மத்த மேக்-அப் போடக்கூடாது. மினிமமா இருக்கணும். சிம்பிள் போனி டெய்ல் போடலாம். அதுவும் அலட்சியமா முடிந்துவிட்டதாக இருக்க வேண்டும். 'நான் போடுவதுதான் ஃபாஷனாக்கும். இதுதான் என் ஸ்டைல்' என கெத்து குமரிகளாக வலம் வாங்க.
ஒரு ட்ராக் பாண்ட், லூஸ் ஷர்ட், பறக்கும் தலைமுடி இதனால்கூட அழகு மிளிரும். 'என்ன ஃபாஷன் பண்ணுதய்யா இந்தப் பொண்ணு'ன்னு ரகசிய பஞ்சாயத்து நடக்கும். பிரிண்டட் பலாஸோ பாண்ட் போட்டு ஒரு பெரிய்ய சைஸ் ஹாண்ட் பேக் மாட்டி, கை கால்களில் ட்ரைபல் ஜூவல்லரி அடுக்கி, கால்களில் எத்னிக் வகை செப்பல்கள், தலைமுடி காற்றில் பறக்க, மினிமம் மேக்கப்புடன் பவனி வந்தால் அதுவே அவுட் ஆஃப் பெட் லுக்.