உடல் வலிகளைப் போக்கும் வெந்நீர் மருத்துவம்!
காலநிலை மாற்றம் மற்றும்பல்வேறு காரணங்களால் அடிக்கடி ஏற்படும் சிறு சிறு உடல் நலக் கோளாறுகளுக்கு எடுத்தவுடன் பெரிய டாக்டர், மருத்துவமனை எனச் செல்லாமல் வெந்நீர் உதவி கொண்டே நிவர்த்தி செய்து கொள்ளலாம். உடல் நலத்துக்கு வெந்நீர் எந்த வகையிலெல்லாம் நன்மை பயக்கிறது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
* வெந்நீர் இரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றி உடலிலுள்ள கழிவை அகற்றுகிறது.
* அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் செரிமானமின்மையால் ஏற்படும் தலைவலி குணமாகும்.
* வயிற்றுப் புண், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிக்கு மிதமான சூட்டில் வெந்நீரை சிறிது சிறிதாக அருந்தலாம்.
* சாப்பிடுவதற்கு முன்பு வெந்நீர் கொஞ்சம் அருந்த உடல் எடை குறையும்.
* ஒரு டீஸ்பூன் பார்லி வேக வைத்து அந்த வெந்நீரை குடித்தால் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
* வெந்நீரில் தேன் கலந்து அருந்த உடல் எடை குறையும்.
* தலைவலியால், மூக்கடைப்பால் அவதிப்படும்போது பாத்திரத்தில் வெந்நீர் விட்டு அதில் விக்ஸ் கலந்து ஆவி பிடிக்க தலைபாரம், சளி, மூக்கடைப்பு சரியாகும்.
* ஒரு டேபிள் ஸ்பூன் காபித்தூள், ஒரு கிராம்பு, ஒரு சின்ன பட்டை போட்டு கொதிக்க வைத்து இளம் சூடான வெந்நீரை குடிக்க தலைவலி குணமாவதோடு, செரியாமையால் ஏற்படும் நெஞ்செரிச்சலை குணப்படுத்தலாம்.
* நொச்சி இலை, வாதநாராயணன் இலை போட்டு கொதிக்க வைத்த நீரை, மூட்டு வலி மற்றும் உடல் வலி உள்ள இடங்களில் ஊற்றி கழுவ வலி பெருமளவு குறையும்.
* சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த வெந்நீரை சற்று ஆறிய பின் குடித்து வர, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
* சுக்கு, மிளகு சேர்த்த வெந்நீரை மிதமான சூட்டில் குடிக்க, தொண்டை கரகரப்பு, தொண்டை வலி குணமாகும்.