
ஆளிவ் விதைகளை ஹலிம் விதைகள் என்றும் கூறுவதுண்டு. இதில் முடி வளர்ச்சியைத் தூண்டக் கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சிறிய ப்ரௌன் விதைகளில் இரும்பு, கால்சியம், புரதம் மற்றும் ஒமேகா3 கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதன் இரும்புச்சத்து மண்டையில் நல்ல ஆக்சிஜனேற்றத்தை ஊக்குவித்து உச்சந்தலையில் நல்ல வலுவான முடிவளர்ச்சி ஏற்படுகிறது.
முடி வளர்ச்சிக்காகவும் புரதம் மிக முக்கியமானது. ஆளி விதையில் உள்ள புரதச்சத்து முடி பிளவு படுவதைத் தடுத்து வேர்க்காலிலிருந்து வளர்ச்சியைத் தூண்டுகிறது. இவை ஆக்சிஜேனேற்றியாக இருப்பதால் வேர்க்காலிருந்து முடியை வலுவாக்கிறது.
தலைமுடியை வறண்டுபோக விடாமல் ஈரப்பதத்தடன் நீரேற்றத்துடன் வைப்பதால் முடி பாதுகாக்கப் படுகிறது. இதன் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் கெமிகல்களிடமிருந்து காக்கிறது.
எப்படி உபயோகிப்பது
ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளோடு 3டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணை சேர்க்கவும். ஆலிவ் விதைகளை முதலில் பௌடர் செய்யுங்கள். பிறகு தேங்காய் எண்ணை சேர்த்து 5நிமிடம் கழித்து வடிகட்டி தலையில் மசாஜ் செய்யவும். அரைமணி நேரம் கழித்து ஷாம்பூ போட்டு குளிக்கவும். இது முடிக்கும் சிறந்த ஊட்டச் சத்தை அளிக்கிறது.
ஆளி விதை தேன் மாஸ்க்
ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் விதை பௌடருடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் யோக்ஹர்ட் சேர்த்து நல்ல பேஸ்ட் ஆக்குங்கள். அரைமணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் அலசவும். இது முடி மெலிவதைத் தடுக்கும்.
ஆளி விதை டானிக்
இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் விதையை ஒரு கப் நீரில் கொதிக்க விடவும். ஆறிய பிறகு வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து இரவில் முடிக்கு ஸ்ப்ரே செய்யுங்கள். மறுநாள் அலசலாம். இது முடிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
ஆளி விதை மற்றும் ஆலோவேரா ஜெல்
ஒரு டேபிள் ஸ்பூன் ஆளி விதை பௌடருடன் 2டேபிள்ஸ்பூன் ஆலோவேரா ஜெல் சேர்த்து பேஸ்ட் ஆக்கி தலைமுடியில் தடவுங்கள். பிறகு 30நிமிடம் கழித்து ஷாம்பூ வாஷ் சேர்க்கவும். இது முடியில் அரிப்பைத் போக்கி முடி வளர்ச்சியைத்தூண்டும்.