
கிரேக்கப் பெண்கள் முகப்பூச்சுக்கும், உடல் பூச்சுக்கும் பல வகையான வாசனைப் பொடிகளைத் தயாரித்து உபயோகித்து வந்ததாகக் கூறப்படுகிறது. யவனர்கள் கண்ணுக்குக் கரும்புச்சாயம் தடவி தோலில் வெள்ளீயமும் சுண்ணாம்புத்தூளும் கலந்த ஒரு வாசனைப் பொடியைப் தேய்த்து உடலை சிவப்பாக்கிக் கொள்வார்களாம்.
நம் இந்தியப் பெண்களும் இதற்கு விதிவிலக்கா என்ன? அவர்களும் பல்வேறு சாதனங்களை உபயோகித்தார்கள்.
பனை நுங்கின் நீர், இளநீர் ஆகியவற்றையும், களிமண்ணயும் காயவைத்து, இடித்த பொடியையும் மஞ்சள் பொடியையும் கலந்து உடலிலும் முகத்திலும் பூசி வந்ததாக பண்டைய தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.
இப்போது கூட சில கிராமங்களில் ஆரஞ்சு பழத்தோலைக் காய வைத்து கடலைப்பருப்பு அல்லது பயத்தம் பருப்புடன் சேர்த்து அரைத்து அதை பாலில் கலந்து உடலில் தேய்த்து ஊறவைத்துக் குறிக்கிறார்கள். இது நாளடைவில் நிறத்தைத் தருகிறது.
கேரளப்பெண்கள் தேங்காயை அரைத்துப் பசும் பாலில் கலந்து உடலில் பூசிக்கொண்டு அரைமணி நேரம் கழித்துத் குளிப்பது உண்டு. இது மேனிக்கு நல்ல நிறம் தரும்.
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணை, ஆலிவ் ஆயில், பாலேடு, வெண்ணை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தடவ நிறம் பெறலாம்.
மசாஜ் செய்யும்போது கழுத்தின் பின்புறத்திலிருந்து ஆரம்பித்து முன்புறம் இரு கைகளாலும் தேய்க்க வேண்டும். அப்படித் தேய்க்கும் போது மேல் நோக்கிதான் தேய்க்கவேண்டும். ஏனென்றால் வயது ஏற ஏற மனிதனின் தோல் கீழ் நோக்கி சரிய ஆரம்பிக்கிறது. அதைத் தடுக்க நாம் தினசரி உடல் தோலை மேல்நோக்கி தேய்த்து விடுவது நல்லது.
எண்ணெய், வெண்ணேய், பாலேடு, பழச்சாறு அல்லது க்ரீமோ எதைத் தேய்த்தாலும் மேல் நோக்கித் தேய்ப்பதுதான் நல்லது.
இயற்கையான முறையிலான சருமத்தை பளபளக்கச் செய்யும் முறை.
ஒரு பாத்திரத்தில் ஆவி பொங்கும் நீரைக் கொட்டவும். அதிலிருந்து வரும் ஆவியை உங்கள் முகத்தில் படும்படி கண்களை மூடிக்கொண்டு அந்த ஆவிக்கு நேரே தலையைக் கவிழ்த்துக் கொள்ளுங்கள். ஆவி வெளியே சென்று விடாதபடி துண்டினால் நான்கு பக்கமும் மறைத்துக்கொள்ள வேண்டும். ஆவி உங்களுக்கு சூடு பொறுக்கும்படி இருக்க வேண்டும். நீராவியில் வேவு பிடிப்பது ரோமானியர்களின் பண்டைக்கால வழக்கமாக இருந்தது. இவ்வாறு நீராவியில் சருமத்தைப் காட்டும்போது முகத்தின் துவாரங்கள் திறக்கப்படுகின்றன. இவ்வாறு அடிக்கடி செய்வதால் உடல் சருமம் சிவப்பாக மாறும்.
குளிர்காலங்களில் குளிரில் சுற்றிவிட்டு உடலை சூடாக்க கணப்பு அடுப்பு அருகில் சென்று அமர்வதும் சருமத்தை பாதிக்கும்.