
புருவம் ஒரு வில்லாக என்ற பாடல் வரியைக் கேட்டிருப்போம். அப்பொழுது புருவத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறப்பது உண்டு. அந்தப் புருவம் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருந்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். இவற்றைப் பற்றி புருவ இலட்சணங்கள் கூறும் கருத்துக்கள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
சிலரின் புருவங்களை பார்த்தால் புருவங்கள் இரண்டும் பிறை சந்திரனைப் போன்ற வடிவத்தில் அமைந்திருப்பதை காணலாம். இப்படிப்பட்டவர்கள் பரம்பரை செல்வ வளமை உடையவர்களாக விளங்குவார்கள். இவர்களுடைய உடல் தோற்றம் அவ்வளவு கவர்ச்சியாக இல்லாவிட்டாலும் இவர்கள் சார்ந்த குணமும், தயாள மனமும் உடையவர்களாக இருப்பார்கள் என்கிறது லட்சணம்.
புருவங்கள் எடுப்பாகவும், விசாலமாகவும் இருந்தால் தீர்க்காயிலும், சுபபோகமான வாழ்க்கையும், தன தானிய லாபமும் ஸ்வர்ண ரத்தினாபரணச் சேர்க்கையும் அடையக்கூடியவர்களாக இருப்பார்களாம்.
புருவங்கள் வில்லை போல் நீண்டும் வளைந்தும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இணையாமலும் கம்பீரமாக அமைந்து இருப்பவர்கள் நினைத்த காரியத்தை முடிப்பவர்கள் ஆகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். ஐஸ்வர்ய வசதியும், விருத்தியும், வாகன வசதிகளும் உடையவர்களாக என்றென்றும் திகழ்வார்கள் என்கிறது புருவசாஸ்திரம்.
நீண்ட கட்டையான புருவ அமைப்பை உடையவர்கள் முரட்டு சுபாவம், வீர தீர செயல்களை செய்வதற்கு தகுதி உடையவர்களாக இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலும் பலர் போலீஸ் அல்லது ராணுவத்துறையில் பணியாற்றுவார்கள். இவர்கள் பெரும்பாலும் குடும்பத்தைவிட பொது சேவை செய்வதிலேயே காலத்தை கடத்துபவர்களாக இருப்பார்கள்.
நீளமானதாகவும் நெருக்கமானதாகவும் கோடு போன்ற புருவம் உடையவர்களுக்கு பொதுவாக கோபம் வராது. இவர்களுள் பலர் பெரும்பாலும் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களாக இருப்பார்கள்.
நீளமான புருவங்களும் அடர்த்தியான இரப்பையும் அமைய பெற்றவர்கள் சட்டத்துறையிலும் நீதித்துறையிலும் மிகவும் மேதைகளாக திகழ்வார்கள். இவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணைவியார் அழகானவர்களாகவும் மிகவும் சிறப்பான கல்வி தகுதியை பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
புருவங்கள் எடுப்பாக இருந்தாலும் விசாலமாக இல்லாவிட்டால் அற்ப ஆயுள் உடையவர்களாக இருப்பார்கள் .மேலும் அந்த ஆயுட்காலத்திற்கு உள்ளாகவே உலகம் மதித்துப் போற்றும் அறிஞர்களாகவும் புகழ்பெற்றவர்கள் இவர்களுள் சிலர் இருப்பதுண்டு.
இவ்வாறு புருவ அமைப்பை பற்றி புருவ லட்சண சாஸ்திரங்கள் கூறுகின்றன.