Flix, Bang, Fringe என்னனு தெரியுமா?

Flix, Bang, Fringe என்னனு தெரியுமா?

சிகை அலங்காரம் என்பது பொதுவாகவே ஆண், பெண் என இருபாலரும் விரும்பும் ஒன்று. அதிலும் பெண்கள் தங்களின் முடியை திருத்தம் செய்துகொண்டு தங்களை மேலும் அழகாக்கிக்கொள்ள அதிகம் விரும்புகின்றனர்.

Visible difference
Visible difference

தலைமுடியை வெட்டி அழகாக்க பல styles இருந்தாலும், பெண்களில் பலருக்கு அவற்றைப்பற்றி தெரியாத காரணத்தால், அழகு நிலையம் செல்லும்போது பொதுவாகவே U-Cut, V-Cut, Straight-Cut என சாதாரணமாக சொல்லிவிட்டு அதை செய்துகொள்கின்றனர்.

cutting Styles...Flix, Bangs, Fringe
cutting Styles...Flix, Bangs, Fringe

Special Styles

இப்படிச் சாதாரணமாக இல்லாமல், வேறு என்ன மாதிரியான styleலில் முடி வெட்டிக்கொள்ளலாம், என்னென்ன வகைகள் உள்ளன என்பதைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். Flix, Bangs, Fringe முதலிய cutting ஸ்டைல்களில் முடியை முகத்திற்கு முன்னும், பக்கவாட்டிலும், பின்னும் என வெட்டிக்கொள்வதன் மூலம் நேர்த்தியாகவும் ஸ்மார்ட்டாகவும் தோற்றம் அளிக்கலாம்.

Perimeter Cuts- U-Cut, V-Cut Straight-Cut,
Perimeter Cuts- U-Cut, V-Cut Straight-Cut,

Perimeter Cuts எனும் மிகச் சாதாரணமாக செய்து கொள்ளும் haircut வகைகளான, U-Cut, V-Cut Straight-Cut,  ஆகியவை நீள முடியின் கடைசியில் மட்டும் சிறிய அளவில் கத்தரித்துக்கொள்ளும் முறைகள்தான். இதில் பெரிதாக மாற்றங்கள் தெரிவதில்லை. முடியின் கடைசி பகுதி மட்டும் அளவாக சீரான வரிசையில் தெரியும்.

Layer Cut...
Layer Cut...

Layer Cut முறையில் முடியை கத்தரிக்கும்போது, அடுக்குகளாக பிரித்துக்கொள்ளப்பட்டு கத்தரிக்கப்படும் என்பதால், குறைந்த அளவே முடி இருப்பினும் பார்ப்பதற்கு அடர்த்தியாக தோன்றும். Pony Tail அதிகமாக போட்டுக்கொள்ளும் நபராக இருந்தால் இந்த Layer Cut முறை நன்றாக இருக்கும். முடியின் அடர்த்தி அதிகமாக இருப்பவர்கள், Layer போலவும் வேண்டும், நல்ல வடிவமும் வேண்டும் என விரும்பினால் அவர்கள் Butterfly Layer cut செய்துகொள்ளலாம். அடர்த்தி குறைவாக இருப்பவர்கள் முடியை அடர்த்தியாக இருப்பதைப்போல காட்டவும்,  இந்த வகை haircuts பெஸ்ட்.  Round Layers, Square Layers, High Layers இப்படி பல வகைகளில் செய்துகொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: Pony Tail  வேண்டும், பின்னலும் வேண்டும் என நினைப்பவர்கள் Layer Cut செய்துகொள்ளக்கூடாது.

Layer Cut செய்துகொள்ளும்போது முடி அடுக்கடுக்காக தெரியும் என்பதால் முகத்தின் வடிவத்தை நன்றாக எடுத்து காட்டும். Front Fringe Style  என்பது பக்கவாட்டில் செய்துகொள்ளலாம், நடுவில் வகிடு எடுத்து இருபுறமும் செய்துகொள்ளலாம் அல்லது மேலே தூக்கி சீவியும் செய்துகொள்ளலாம்.

Front Fringe Style - Short Layers, Boy Cut, Diana Cut
Front Fringe Style - Short Layers, Boy Cut, Diana Cut

Short Layers, Boy Cut, Diana Cut என்பவை எல்லாம் முடியை அடுக்குகளாக மிக சிறிய நீளம் கொண்டவையாக வெட்டிக்கொள்பவை. இந்த மாதிரி முடியை வெட்டிக்கொள்ளும்போது அதில் வேறு எந்த பின்னலோ,  ஸ்டைலோ ஏதும் செய்துகொள்ள முடியாது. அதேசமயம், முடியை அழகுபடுத்த ரொம்ப மெனக்கெட வேண்டிய அவசியம் இருக்காது. முடி பராமரிப்பும் சுலபமாக இருக்கும்.

ஒரு முறை முடி கத்தரித்துக்கொண்ட பின்னர், அவ்வப்போது முடியை trimming செய்து கொள்வதன் மூலம் அதன் வடிவத்தை அப்படியே தக்கவைத்துக்கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
அடுத்த மனிதரில் உங்களைத் தேடாதீர்கள்!
Flix, Bang, Fringe என்னனு தெரியுமா?
styling products - gel, cream, spray, serum
styling products - gel, cream, spray, serum

சரியான ஸ்டைலில் முடி கத்தரிப்பது 50% என்றால் அந்த முடியை ஸ்டைல் ஆகா காட்டுவதற்கு styling products பயன்படுத்துவது 50%. முடியை மேலும் அழகாகக் காட்டவும் அடர்த்தி அதிகமாக தெரியவும், தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு,  styling gel, styling cream, hair finishing spray, hair serum முதலியவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். 

ஸ்டைலிங் மற்றும் ஸ்டைலிங் சாதனங்கள் குறித்து மேலும் பல தகவல்களைத் தெரிந்துகொள்ள, சிறந்த அழகு நிலையத்தை நடத்தும் அனுபவம் மிகுந்த அழகு கலை நிபுணரை அணுகுவது சிறப்பு. உங்கள் முக வடிவத்துக்கும், உடல் வாகிற்கும், முடியின் தன்மைக்கும், அடர்த்திக்கும் ஏற்றவாறு நல்லதொரு Hair Styleஐ அவர் பரிந்துரைப்பார்.

தொகுப்பு: மரிய சாரா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com