
குளிர்காலத்தில் குறைந்த ஈரப்பதம் காரணமாக சருமம் வறண்டு பலவீனமாகும். இதற்கு தீர்வாக இருக்கும் சில இயற்கை பொருட்களும் குளிர்காலத்தில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆதலால் குளிர்காலத்தில் முகத்தில் தவிர்க்க வேண்டிய 5 பொருட்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.சந்தன தூள்
சரும எரிச்சலை போக்கவும், வீக்கத்தை தணிக்கவும் பாரம்பரியமாக சருமத்தை பளபளப்பாக்கும் சந்தனத்தூளை குளிர்காலத்தில் சருமத்திற்கு பயன் படுத்துவது நல்லதல்ல. சந்தனத்தில் உள்ள குளிர்ச்சியான தன்மை, குளிர்காலத்தில் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, அதிகப்படியான வறட்சி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் சந்தனத்தூள் தடவாமல் இருப்பதே குளிர்காலத்தில் மிகவும் சிறந்தது. அப்படியே இதைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், மற்ற ஈரப்பதமூட்டும் பொருட்களுடன் கலந்து பயன்படுத்தவும்.
2.பேக்கிங் சோடா
பல வீட்டு வைத்தியங்களில் மூலப் பொருளாக பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடாவின் pH அளவு தோலின் pH ஐ விட அதிகமாக உள்ளதால் இதன் காரணமாக சருமத்தின் இயற்கையான சமநிலையை சீர்குலைத்து, சரும எரிச்சல், வறட்சி மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் குளிர்காலத்தில் பேக்கிங் சோடாவை பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் சோடாவிற்குப் பதிலாக, ஓட்ஸ் அல்லது தேன் போன்ற இயற்கையான சரும எக்ஸ்ஃபோலியேட்டர்களைப் பயன்படுத்தலாம்.
3.ஆலிவ் எண்ணெய்
சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்டரைசராக கருதப்படும் ஆலிவ் எண்ணெய், குளிர்காலத்தில் சிலருக்கு கடினமாக இருக்கும் என்பதால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்துவதால் துளைகளை அடைத்து முகப்பருவை ஏற்படுத்தும் என்பதால், வறண்ட சருமத்தினருக்கு நன்மை அளித்தாலும் எண்ணெய் பசை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பதே நல்லது. மேலும் அவசியம் உபயோகிக்க வேண்டி இருந்தால் சருமத்தின் துளைகளில் சிக்காமல் இருக்க அதை சருமத்தில் நன்கு தடவவேண்டும்.
4.பற்பசை
முகப்பருவை குணப்படுத்த சிலர் பற்பசையை பயன்படுத்துகின்றனர் குளிர்காலத்தில் பற்பசையில் உள்ள புத்துணர்ச்சியூட்டும் பொருட்கள் சருமத்தில் கடுமையான எரிச்சல், வறட்சி மற்றும் சிவத்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்பதால் இது ஒரு பெரிய தவறாகவே கருதப்படுகிறது. முகப்பருவிற்கான பிரத்தியேக மேற்பூச்சு ஜெல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
5. எலுமிச்சை சாறு
வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த எலுமிச்சை சாறு சருமத்தை பளபளப்பாக்க உதவுவதோடு பிரகாசமாக்குவதற்கும் அறியப்படுகிறது. ஆனால் குளிர்காலத்தில் எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் அமிலம் சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை உறிஞ்சும் என்பதால் சருமம் வறண்டு இருக்கும். மேலும் எலுமிச்சை சாறு தடவுவது எரிச்சல், அரிப்பு மற்றும் வெயில் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் குளிர்காலத்தில் இதனை தவிர்ப்பது நல்லது. மேலும் எலுமிச்சைசாறு பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் மிகக் குறைந்த அளவிலும் வறண்ட சரும பகுதியில் மட்டும் தடவினால் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்கும்.
நன்மை பயக்கக்கூடிய பொருட்களே என்றாலும் இந்த 5 பொருட்களை குளிர்காலத்தில் சருமத்திற்கு தடவாமல் இருப்பதுதான் மிகவும் சிறந்தது.