
உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன். சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த உலக ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள வந்த மேக்னஸ் கார்ல்சன், ஜீன்ஸ் அணிந்து வந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டார். உடையை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போதும் கார்ல்சன் மறுத்துவிட்டார். பின்னர் போட்டியில் இருந்து விலகிவிட்டார். ஜீன்ஸ் மற்றும் டீ-ஷர்ட்டுகள் அணிந்து செல்லக்கூடாத இடங்கள் என சில உள்ளன. அவை எந்த இடங்கள் என இந்தப் பதிவில் பார்போம்.
ஜீன்ஸ் மற்றும் டீ-ஷர்ட்டுகள் அணிந்து செல்லக்கூடாத இடங்கள்;
முறையான விசேஷங்கள்/ நிகழ்வுகள்;
திருமணங்கள், விசேஷங்கள், சில பண்டிகைகளின் போதும், முறையான பார்ட்டிகளுக்கு செல்லும்போதும், பெரும்பாலும் அதற்கு ஏற்றார்போல ஆடைகள் அணிந்து செல்வது முக்கியம். ஜீன்ஸ் டி-ஷர்ட் போன்ற கேஷுவல் ஆடைகளை அணிந்து செல்லக்கூடாது.
வணிக அமைப்புகள்;
தொழில்சார் சூழல்கள் குறிப்பாக கார்ப்பரேட் அல்லது முறையான அமைப்புகளில் ஃபார்மலாக டிரஸ் செய்து கொள்வது அவசியம். அங்கே ஜீன்ஸ் அணிந்து செல்லக்கூடாது. கோட் சூட், நீளக் கை வைத்த சட்டைகள் அல்லது ஸிலாக்குகள் போன்றவற்றை அணிந்து செல்லலாம்.
நேர்காணல்கள்;
இன்டர்வியூக்குச் செல்லும்போது ஃபார்மலாக டிரஸ் செய்து செல்வது மிகவும் அவசியம். நீட்டாக அயர்ன் செய்த ஷர்ட் பேண்ட் அணிந்து கொள்ள வேண்டும். ஜீன்ஸ் டி-ஷர்ட் போடக்கூடாது.
மத / வழிபாட்டுத் தலங்கள்;
கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது முறையான உடை அணிவது அவசியம்.
இறுதிச் சடங்குகள்;
பொதுவாக இறுதிச்சடங்குகளில் மரியாதைக்குரிய ஆடை எதிர்பார்க்கப்படுகிறது. மேலை நாடுகளில் இந்த உடைக் கட்டுப்பாட்டை அவசியமாக கடைப்பிடிக்கிறார்கள்.
நல்ல உணவகங்கள் /உயர்தர உணவு விடுதிகள்;
சில பெரிய உணவு விடுதிகளில் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டுகளை அணிந்து செல்ல தடை உள்ளது. முறையான ஆடைக் குறியீட்டைக் கொண்டுள்ளன. முறையான உடையணித்து செல்பவர்களைத்தான் அனுமதிக்கிறார்கள்.
கலாச்சார நிகழ்வுகள்;
சில கலாச்சார நிகழ்வுகளுக்கு பாரம்பரியமான ஆடைக் குறியீடுகள் அல்லது முறையான ஆடைக் குறியீடுகள் தேவைப்படுகின்றன.
நெட்வொர்க்கிங் நிகழ்வுகள்;
நிபுணத்துவ நெட்வொர்க்கிங் நிகழ்வுகளில் பொதுவாக பங்கேற்பாளர்கள் மற்றும் வணிகர்கள் முறையான ஆடை அணிந்து வர வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறார்கள்.
பட்டமளிப்பு விழாக்கள்;
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள செல்லும்போது முறையான ஆடை அணிந்து செல்வது அவசியம்.
சர்வதேச விளையாட்டுகளில் முறையான ஆடைக்குறியீடு அவசியம். சதுரங்கம் போன்ற சர்வதேச விளையாட்டுக்களின்போது, விளையாட்டு வீரர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்களை அணிவது பொருத்தமற்றது. மேலும் அவர்கள் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அதிலும் உலக செஸ் சாம்பியன் ஷிப் விளையாட்டின் போது வீரர்கள் அவசியமாக ஃபார்மல் உடையில் இருக்கவேண்டும். கேஷுவல் ஆடைகள் அணிந்து வந்தால் அவர்கள் அனுமதி மறுக்கப்படுவார்கள். மேலும் செய்தியாளர் சந்திப்பு மற்றும் ஊடக நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் வீரர்கள் முறையான ஆடை அணிந்து வரவேண்டும். விருது வழங்கும் விழாக்களிலும் முறையான ஆடை அவசியம்.