
அனைவரும் ஆடைகள் அணிகின்றனர். ஆனால் அடிக்கடி பார்க்கும் பல விஷயங்களின் அர்த்தங்கள் நமக்கு தெரிவதில்லை. அப்படி தான் இணையத்தில் இந்த கேள்வி உலாவி வந்தது. ஆனால் பலரும் இந்த கேள்விக்கு என்ன பதில் என்று தெரியாமல் திணறினர். அது என்ன கேள்வி என்று தெரியுமா?
ஆண், பெண் என இருவரும் சரி ஆடைகளை பேஷனுக்கு தகுந்தவாறு தேர்ந்தெடுப்பார்கள். தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்றவாறு உடை அணியாமல் முந்தைய பேஷன்களில் உள்ள உடைகளை அணிவது உங்களை வயதானவராகக் காட்டக்கூடும். அது போல் ட்ரெண்ட்டில் இருக்கிறேன் என்ற பெயரில் உங்களுக்கு செட் ஆகாத ஸ்டைலில் உடை அணிவது உங்களை மற்றவரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும். உடலின் வகைக்கு ஏற்றவாறு இல்லாமல் மிகவும் சிறியதாகவோ அல்லது மிகவும் லூசாகவோ ஆடை அணிந்தால் அது ஒருமாதிரி அசிங்கமாக தெரியும். குண்டாக இருப்பவர்கள், அவர்களுக்கு ஏற்ற ஆடையும், ஒல்லியாக இருப்பவர்கள் அவர்களுக்கு ஏற்ற ஆடையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதே போன்று உங்களின் நிறத்திற்கு ஏற்றது போலவும் ஆடை செலக்ட் செய்வது அவசியமாகும். உங்களுக்கு என்ன கலர் செட் ஆகும் என்பதை உங்களது மணிக்கட்டில் உள்ள நரம்பை பாருங்கள். அதில் உள்ள வண்ணம் லைட்டாக இருந்தால் உங்களுக்கு லைட் கலரும், அது டார்க்காக இருந்தால் உங்களுக்கு டார்க் கலர் சூட் ஆகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் கடைகளில் ட்ரஸ் எடுக்க போகும் போதும், ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போதும், உங்களது சட்டை, டாப் என்ன அளவு என்று தேடுவீர்கள். எனக்கு XS, XL என்று கூறுவீர்கள். அதில் வரும் X என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? இதில் வரும் L, S என்ற எழுத்துக்கு லார்ஜ், ஸ்மால் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் X என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் பலரும் யோசிக்கதான் செய்கிறார்கள்.
உண்மையில், 'x' என்பது எக்ஸ்ட்ரா என்பது அர்த்தம். XL என்றால் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்றும், XXL என்றால் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதையும் குறிக்கிறது. அதே போல் XS என்பது எக்ஸ்ட்ரா ஸ்மால் என்பதையும் குறிக்கிறது. M என்றால் மீடியம் என்பதையும் குறிக்கும். ஆண்கள், பெண்கள் என அனைத்து ஆடைகளுக்கும் இதுவே குறியீடாகும்.பொதுவாக XL அளவுள்ள சட்டை அளவு 42 இன்ச் முதல் 44 இன்ச் வரை இருக்கும். இதேபோல், XXL சட்டைகள் அல்லது ஆடைகள் விஷயத்தில், அளவு பொதுவாக 44 அங்குலங்கள் முதல் 46 அங்குலங்கள் வரை இருக்கும்.
இனி உங்களிடம் இந்த கேள்வியை யாராவது கேட்டால் எக்ஸ்ட்ரா என்று கூறுங்கள்.