
ஃபேஷன் உலகில் தனித்துவமான இடத்தை நீல நிற ஜீன்ஸ் பிடித்துள்ளது. ஒவ்வொரு அமெரிக்கரும் குறைந்தது ஏழு ஜோடி ஜீன்ஸ் வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய நீல ஜீன்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி அன்று கொண்டாடப் படுகிறது. உலகெங்கிலும் உள்ள அலமாரிகளில் நீல நிற ஜீன்ஸ் பிரதான இடம் பிடித்திருக்கிறது.
நீல ஜீன்ஸ் ;
தேசிய நீல ஜீன்ஸ் தினம் என்பது ஸ்டைலான ஜீன்ஸின் பணக்கார மரபுக்கு ஒரு அங்கீகாரம் தருவதாகும். டெனின் துணியில் தயாரிக்கப்படும் ஜீன்ஸ் எல்லா வயதினரும் எல்லாப் பின்னணியில் உள்ளவர்களாலும் அணியப்படும் ஒரு உடையாகும். இது பல ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. நீண்ட மற்றும் பாகி ஜீன்ஸிலிருந்து குறுகிய மற்றும் இறுக்கமான ஜீன்ஸ் வரை பல மாறுதல்களை அடைந்திருக்கிறது.
தேசிய நீல ஜீன்ஸ் தின வரலாறு;
1873 இல் தையல்காரர் ஜேக்கப் டேவிஸ் என்ற தையல்காரரும் லெவி ஸ்ட்ராஸ் என்ற தொழிலதிபரும் நீல நிற ஜீன்ஸுக்கான காப்புரிமையை அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பெற்றனர். அமெரிக்கத் தொழிலாளர்கள் இதை விரும்பி அணியத் தொடங்கினர். பண்ணை, ரயில்வே தொழிலாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், விவசாயிகள் என தொழிலாளர்களுக்கு அது ஒரு சீருடை போல இருந்தது கருமையான இன்டிகோ நிறம் எண்ணெய் மற்றும் அழுக்குக் கறைகளை மறைத்ததால் தொழிலாளர்கள் அவற்றை விரும்பினர் கடுமையான உடல் உழைப்பைத் தாங்கி நீடித்த தன்மையுடன் உழைத்ததால் அவர்களுக்கு அது மிகப் பிடித்தமான உடையாக இருந்தது.
பிற நாடுகளில் நீல ஜீன்ஸ்;
1930 களில் மெல்ல மெல்ல ஜீன்ஸ் தொழிலாளர் களிடமிருந்து பிற மக்களுக்குப் பரவியது ஜீன்ஸ் அணிந்த கவுபாய்கள் மேற்கத்திய ஹாலிவுட் படங்களில் தோன்றி ஜீன்ஸ் நாகரீகத்தை பரப்பினர். மார்லின் பிராண்டோ மற்றும் ஜேம்ஸ் டீன் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் அவற்றை பிரபலப்படுத்தினர். அமெரிக்கர்கள் தங்கள் அன்றாட நாகரிகத்தின் ஒரு பகுதியாக நீல நிற ஜீன்ஸை அணிய தொடங்கினர். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க வீரர்கள் ஜீன்ஸ் அணிந்து போரில் ஈடுபட்டனர். இதனால் மற்ற நாடுகளுக்கு ஜீன்ஸ் அறிமுகமானது
நீலநிற ஜீன்ஸ் ஆல் டைம் ஃபேவரைட் ஆக இருப்பதற்கான காரணங்கள்;
பன்முகத்தன்மை; நீல நிற ஜீன்சை பல்வேறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு அணிந்து கொள்ளலாம். தினமும் வேலைக்குச் செல்லும்போதும், விருந்து, பார்ட்டிக்கு சென்றாலும் இது பொருத்தமாக இருக்கும்.
டைம்லெஸ் ஸ்டைல்;
நீல ஜீன்ஸ் பாணி பல வருடங்களாக ஃபேஷன் உலகில் இருக்கிறது. அவற்றின் எளிமையான தோற்றம் எல்லா காலத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது. இளவயதுக்காரர்கள் மட்டுமன்றி நடுத்தர வயதுக்காரர்களும் விரும்பி அணிய முடிகிறது.
வசதி;
நீல நிற ஜீன்ஸ் நன்கு உழைக்க கூடியது மற்றும் அணிவதற்கு சௌகரியமாகவும் வசதியாகவும் இருக்கிறது. இதை அணிந்துகொண்டு பயணிக்கவும் வேலை செய்வதற்கும் எளிதாக இருக்கிறது.
பொருத்தம்;
நீல நிற ஜீன்ஸ் வெவ்வேறு உடல் வாகுக்கு ஏற்றவர்களுக்கு கூட பொருத்தமாக இருக்கிறது. ஒல்லியான மற்றும் பருமனான நடுத்தர பருமன், உயரமான குட்டையான எனப் பல விதமான வடிவங்களில் இருப்பவர்களுக்கும் இது பொருந்துகிறது.
பராமரிப்பு;
இதை பராமரிப்பது மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கிறது.
அழகியல் தன்மை;
நீல நிற ஜீன்ஸை பல்வேறு விதமான மேலாடைகளுடன் அணிந்து கொள்ளலாம். எந்த விதமான உடைக்கும் இது பொருத்தமாக இருப்பதால் அனைவருக்கும் விருப்பமான உடையாக இருக்கிறது.
மலிவு;
முக்கியமாக நீல நிற ஜீன்ஸ் பல்வேறு விலைகளிலும் மலிவாகவும் கிடைக்கிறது. பலதரப்பட்ட நுகர்வோர்க்கு எளிதில் அணுகக்கூடிய வகையில் உள்ளது. உயர்தர பிராண்டுகள் முதல் பட்ஜெட்டுக்கு ஏற்றவரை இவை கிடைக்கின்றன என்பது இதன் சிறப்பம்சமாகும்.