நீங்கள் பயன்படுத்தும் Perfume நாள் முழுவதும் இருக்கணுமா? இந்த 9 டிப்ஸை ட்ரை பண்ணுங்க!

Perfume...
Perfume...Image credit - pixabay
Published on

நாம் காலையில் குளித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் உடலில் அடித்துக் கொள்ளும் பர்ப்யூம் மாலை வீடு திரும்பும்போது இருப்பதில்லை. சில மணி நேரங்களிலேயே அதன் வாசனை மறைந்து விடுகிறது. இதை சரிசெய்ய என்ன வழிகள் உள்ளது என்பதைப்பற்றி இந்த பதிவில் காணலாம்.

1.முதலில் Perfume ஐ எப்போதும் ஆடைக்கு மேலே அடிக்கக்கூடாது. அப்படி இதுவரை செய்திருந்தால் அதை நிறுத்திவிட்டு இனி பல்ஸ் பாயின்ட்டில் அடிக்கவும். பல்ஸ் பாயின்ட் என்றால், காதுக்கு பின்புறம், மணிக்கட்டு, கை முட்டி போன்ற இடங்களை பல்ஸ் பாயின்ட் என்று சொல்வார்கள்.

2.Perfume ஐ நம் மீது அடித்ததும் அதை தேய்த்து விடாமல், பர்ப்யூமை ஸ்பிரே செய்த இடத்தை மெதுவாக தட்டினாலே போதுமானது. அதன் பார்முலா மாறாமல் அப்படியேயிருக்கும்.

3.உங்களுடைய Perfume உடைய வாசனையையே லேயரிங் செய்யலாம். அதாவது Lotion, body wash, perfume ஆகியவற்றை ஒரே  வாசனையுள்ள சென்ட்டை பயன்படுத்தலாம்.

4.உங்கள் உடலில் சொல்லப்பட்டிருக்கும் பல்ஸ் பாயின்டில் Perfume அடிப்பதற்கு முன்பு சிறிது Vaseline தடவிக்கொண்டு பிறகு பர்ப்யூம் அடிப்பது நல்லது. அப்போதுதான் அந்த பர்ப்யூமுடைய வாசனை நீண்ட நேரத்திற்கு இருக்கும்.

5.Perfume ஐ பல்ஸ் பாயின்டில் அடிக்க வேண்டும். அதேபோல, Deodorant, roll on ஐ உடலிலே பயன்படுத்த வேண்டும்.

6.குளித்து முடித்து வந்த உடனேயே Perfume அடித்துக் கொண்டு காயவிடும் பொழுது நீண்ட நேரம் உடலில் வாசனையை தக்க வைக்கும். உடலில் Lotion தடவிய பிறகு Perfume அடித்துக் கொள்வதால் அதன் வாசனையை அதிக நேரம் லாக் செய்து வைக்கிறது.

7.Perfume ஐ பாதுகாப்பாக இருட்டு மற்றும் குளிர்ந்த இடத்தில் வைப்பது சிறந்தது. அப்படியில்லை என்றால் பர்ப்யூம் சீக்கிரமே வீணாகிவிடக்கூடும். Bathroom Cupboard, box போன்ற இடங்களில் வைத்து பயன்படுத்தும்போது வெகு காலம் வைத்துப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
அம்பானி மருமகள் திருமணத்தில் உடுத்திய உடையின் மதிப்பு என்ன தெரியுமா?
Perfume...

8.அதிக நேரம் வாசனை வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிக  Concentration உள்ள பர்ப்யூம்கள் கடையில் விற்பனையில் உள்ளது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

9.Roll on perfume oil பயன்படுத்தலாம். இதில் அதிக Concentration ல் வாசனையிருப்பதால் அதிக நேரம் நீடிப்பதோடு பையில் வைத்து எடுத்து செல்வதும் மிகவும் சுலபம். இந்த வழிமுறைகளை பின்பற்றி நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com