
கருவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடி நன்றாக கருமையாக வளரும் என்றும் கருவேப்பிலையை அரைத்து பேஸ்ட்டாக்கி அதில் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலையில் தடவும் போது முடி வளரும் என்று சொல்கிறார்கள். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது? என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கருவேப்பிலை ஆயுர்வேதத்தில் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் கருவேப்பிலையை நாம் உணவுக்கு பயன்படுத்துகிறோமோ இல்லையோ தலை முடியை வளர்ப்பதற்காக அதிகம் பயன்படுத்துகிறோம். பொதுவாக பெண்கள் கருவேப்பிலையை அரைத்து எண்ணெய்யில் காய்ச்சி அதை தலைக்கு பயன்படுத்துவார்கள். கருவேப்பிலை முடி உதிர்வை தடுக்கும், முடிவளர்ச்சிக்கு உதவும், நரைமுடியை சரிசெய்யும் போன்ற நம்பிக்கைகள் நிறையவே உள்ளன.
பொதுவாகவே எல்லா இலை, தழைகள் மற்றும் மூலிகைகளில் இருப்பது போல கருவேப்பிலையிலும் Alkaloids, Flavonoids இருக்கின்றன. இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் தன்மை அதாவது ஆக்ஸிஜனேற்றத்தால் செல்களில் நடக்கக்கூடிய பாதிப்பை தடுக்கக்கூடிய தன்மையிருக்கும். இதை தவிர கருவேப்பிலையில் பீட்டா கரோட்டின் என்னும் பிக்மெண்ட் உள்ளது. கேரட், பப்பாளி போன்றவற்றிலும் இந்த பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. இது கருவேப்பிலையில் இருப்பது முடி வளர்ச்சிக்கு உதவலாம்.
அதை தவிர Essential oil, Antioxidants, Mahanimbine, Girinimbine உள்ளது என்று சொல்கிறார்கள். இவை தான் பொதுவாக கருவேப்பிலையில் இருக்கும் கெமிக்கல்கள் ஆகும். இது நம் முடி உதிர்வை தடுக்க எந்த அளவு உதவுகிறது என்பதை பார்க்கலாம்.
கருவேப்பிலையை முடிவளர்ச்சிக்கு பயன்படுத்துவதால் முடி வளருவதில்லை என்று சொல்லப்படுகிறது. பொதுவாகவே இதுப்போன்ற எண்ணெய்களை தலையில் தடவும் போது முடியின் வேர் வரை செல்வதில்லை.
இருப்பினும் Minoxidil என்ற மருந்துகளை தலையில் தடவினாலேயே முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. கருவேப்பிலையை உணவாக உண்ணும் போது அதிலிருக்கும் Alkaloids, Mahanimbine, Girinimbine, beta carotene முடிவளர்ச்சிக்கு உதவுகிறதோ இல்லையோ இது கணையம், பிளாடர் (Bladder) போன்றவற்றில் ஏற்படும் கேன்சரை தடுக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வயிற்று புண்ணை குணமாக்கும் தன்மையும் இதில் உள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே, கருவேப்பிலையை உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்வது நல்லது.