மறந்தும் இந்த மூன்றுப் பொருட்களை முகத்தில் பயன்படுத்த வேண்டாம்!

Don't use these
Don't use these

சருமத்தைப் பராமரிப்பதற்காக வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் இயற்கையான பொருட்களை முகத்தில் தடவுவோம். ஆனால், சில பொருட்களை மட்டும் முகத்தில் பயன்படுத்தவே கூடாது. அவை எவை என்று பார்ப்போம்.

இயற்கை முறையில் முகத்தை ஜொலிக்க வைக்கவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், நிறைய வழிகளை பின்பற்றுவோம். அந்தப் பொருட்களில் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் அதிகம் இருக்கும். அதேபோல் சில பொருட்களை முகத்தில் தடவவும் கூடாது. அவை முகச்சருமத்தை கெடுத்துவிடும்.

அந்த மூன்றுப் பொருட்கள்:

எலுமிச்சையை தனித்து பயன்படுத்த வேண்டாம்:

எலுமிச்சை உங்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதிலும், அழுக்குகளை நீக்க உதவுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அதனை தனித்து பயன்படுத்தவே கூடாது. ஏனெனில் இது சருமத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, எரிச்சல், வீக்கம், சிவத்தல், சருமத்தில் வறட்சி அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகையால், சர்க்கரை அல்லது மஞ்சள் போன்ற பொருட்களையாவது சேர்த்துப் பயன்படுத்துங்கள். அதேபோல் அதிக அளவு பயன்படுத்த வேண்டாம்.

பேக்கிங் பவுடர்:

பேக்கிங் பவுடரை அதனுடன் சேர்த்து பயன்படுத்துங்கள், இதனுடன் சேர்த்துப் பயன்படுத்துங்கள், நயன்தாரா போல் அழகாகிவிடுவீர்கள் என்றெல்லாம் கூறுவார்கள். நம்பாதீர்கள். குறிப்பாக சென்ஸிட்டிவ் ஸ்கின் உள்ளவர்கள் மறந்தும் பயன்படுத்துதல் கூடாது. அரிப்பு, எரிச்சல், சிவத்தல் போன்றப் பிரச்சனைகள் வரக்கூடும்.

டூத் பேஸ்ட்:

எந்த கஷ்டமும் இல்லாமல், உடனடியாக முகத்தில் பருக்களையும் அழுக்குகளையும் நீக்க டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம் என்று கூறினால், அதையும் நம்ப வேண்டாம். ஏனெனில், பற்பசையை நேரடியாக தோலில் தடவுவது உங்கள் முகத்தில் தடிப்புகளை ஏற்படுத்தும். அதை மேலும் உலர வைப்பது, சருமத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
வயதான தோற்றத்தை விரைவில் ஏற்படுத்தும் பழக்கங்கள் எவை தெரியுமா?
Don't use these

மேலும், மிகவும் சூடான நீர், சமையல் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தவே கூடாது. அதேபோல் உடம்புக்கு பயன்படுத்தும் லோஷனை முகத்தில் தடவுவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், அது உடல் சருமத்திற்கு ஏற்றவாறு தயாரித்திருப்பார்கள்.

முகத்தின் அழகைப் பராமரிப்பதில் மிகவும் கவனத்துடன் இருப்பது அவசியம். ஏதாவது புதிதாக முயற்சி செய்தீர்கள் என்றால், ஒருமுறை விசாரித்துவிட்டு பயன்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com