வயதான தோற்றத்தை விரைவில் ஏற்படுத்தும் பழக்கங்கள் எவை தெரியுமா?

Habits that makes you look older
Habits that makes you look olderImage Credits: Turning Point Psychology

ம்முடைய வயது அதிகரிக்கும்பொழுது முதுமையான தோற்றம் வருவது இயல்பு. ஆனால், நம்மிடம் இருக்கும் சில வேண்டாத, ஆரோக்கியமில்லாத பழக்கங்களால் முதுமையான தோற்றம் சீக்கிரமே வந்துவிடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அது என்னென்ன பழக்கங்கள் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

தூக்கமின்மை: தூக்கம் நம் உடலுக்கு முக்கியமான ஒன்றாகும். தினமும் குறைவான நேரம் தூங்குவதோ அல்லது தூக்கமின்றி அவதிப்படுவதோ உடலுக்கும், மனதிற்கும் அதிக சோர்வை தரும். இது வழக்கமாக நாம் செய்யக்கூடிய வேலையை கூட பாதிக்கும். இப்படி தூங்குவதில் பிரச்னை இருந்தால் அது விரைவிலேயே நமக்கு முதுமையான தோற்றத்தை தந்துவிடும்.

ஊட்டச்சத்துக் குறைபாடு: நாம் தினமும் உண்ணும் உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும். அதனை பற்றி கவலையில்லாமல் சாப்பிடுவது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுத்துவிடும். இதனால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்துவிடும், வளர்சிதை மாற்றம் குறைந்துவிடும், உடல் எடை அதிகரிக்கக் காரணமாகிவிடும். இதனால் வயது முதிர்ச்சியாகக் காணப்படுவீர்கள்.

மன அழுத்தம்: மன அழுத்தப் பிரச்னை உடலிலும், மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மன அழுத்த பிரச்னையிலிருந்து விரைவில் மீளாவிட்டால் அது மனநோயாக மாறிவிடும். இதனால் உடலும் கடுமையாக பாதிக்கப்படும். அதன் தாக்கம் சருமத்திலும் எதிரொலிக்கும். இதனால் முதிர்ந்த தோற்றம் விரைவில் வந்துவிடும்.

மதுப்பழக்கம், புகைப்பழக்கம்: மதுப் பழக்கமும், புகைப் பழக்கமும் ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடானது. இதை தொடர்ந்து செய்துகொண்டே வரும்போது விரைவில் முதுமையான தோற்றத்தை அடைவதற்கு வழிவகுத்துவிடும்.

கடுமையான உணவுக்கட்டுப்பாடு: பணி நெருக்கடி, இரவு நேர வேலை, காலையில் தாமதமாக ஏழுவது போன்ற காரணத்தால் பலரும் காலை உணவை எடுத்துக்கொள்வதில்லை. காலையில் உணவு உண்ணும்போது அது நம் உடலுக்கு ஆற்றலைத் தரும். அப்படி உணவை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், உடல் பலவீனமடைந்து விரைவில் முதுமையான தோற்றத்தை கொடுத்துவிடும்.

அது மட்டுமில்லாமல், ‘டயட்’ என்ற பெயரில் கடுமையான உணவுக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும்போது அதனால் உடலில் அதிக அழுத்தம் ஏற்பட்டு  தேவையில்லாத உடல்நல பிரச்னைகளை எதிக்கொள்ள நேரிடும்.

இதையும் படியுங்கள்:
செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும் பழங்கள் என்னென்ன தெரியுமா?
Habits that makes you look older

காபின்: தேநீர், காபி போன்றவற்றை அளவுக்கு மீறி பருகும்போது அதனாலும் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். இது விரைவாகவே வயது முதிர்ச்சிக்கு வழிவகுத்துவிடும்.

உடற்பயிற்சியின்மை: நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற கடுமையான நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு உடற்பயிற்சியின்மையே முக்கியக் காரணமாகும். இப்படி உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் விரைவிலேயே சருமம் முதுமையான தோற்றத்திற்கு மாறிவிடும்.

எனவே, மேற்கண்ட பழக்கங்களைத் தவிர்த்து ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், உடற்பயிற்சி என்று உடலை நன்றாக பேணிப் பாதுகாக்கும்போது எப்போதும் இளமையாக இருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com