மழைக்காலங்களில் வீட்டில் இருக்கும்போதும் வெளியே போகும்போதும் எந்த மாதிரியான உடை அணிந்தால், வசதியாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
மழைக்காலங்களில் அதற்கேற்றவாரு உடை அணியவில்லை என்றால், ஒன்று அதிகமாக குளிரும். இல்லையெனில், மழையில் நனைந்த உடை காயவே காயாது. மேலும், வெளியில் இருக்கும்போது காயாத உடை அணியும்போது அது உடலில் பட்டு உடம்பு சரியில்லாமல் போய்விடும். இப்படி பல பிரச்னைகள் வரும். ஆகையால் இந்த சமயத்தில் எந்தெந்த உடைகள் அணியலாம் என்றுப் பார்ப்போம்.
டிரான்ஸ்பரண்டாக இருக்கும் ஆடைகளைத் தவிர்த்துவிடுங்கள். அதேபோல், வெள்ளை, சந்தன நிறங்கள் போன்ற நிறங்களை தவிர்க்கவும். கருப்பு, பிரவுன், பழுப்பு, சிவப்பு, பச்சை போன்ற நிறங்கள் அழுக்கு பட்டாலும் அதிக்கம் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ளும். வெள்ளை மற்றும் வெளிர் வண்ணங்களை அணிவதைத் தவிர்க்கவும். ஏனென்றால் ஏனெனில், இதுபோன்ற உடைகள் அணியும்போது உடம்பு தெரிவதுபோல் இருக்கும். ஆகையால் மழைக்காலங்கள் உடல் தெரியும் உடைகளை தவிர்க்கவும்.
கால் வரை இருக்கும் குர்தா போன்ற ஆடைகளை தவிர்ப்பது நல்லது. லூஸ் பேண்ட் அணிந்து டாப்கள் முட்டிவரையோ அல்லது அதற்கு மேலாகவோ அணிவது நல்லது.
குறைவான எடைக் கொண்ட எளிதாக நீர் உரிஞ்சும்விதமான ஆடைகளை அணியுங்கள். ஜீன்ஸ் போன்ற மொத்தமான உடைகளைத் தவிர்க்கலாம்.
இறுக்கமாக இருக்கும் ஆடைகளை தவிர்ப்பது நல்லது. பிட்டிங் ஆடைகளை ஈரத்துடன் நாள் முழுவதும் அணிந்து இருந்தால், உங்களை கஷ்டப்படுத்திக்கொண்டே இருக்கும். கனமான டெனிம் ஆடைகளைத் தவிர்க்கவும். தளர்வான மற்றும் காற்றோட்டமான பிட்டிங் ஆடைகளைத் தேர்வு செய்யவும்.
ரப்பர் அல்லது பிளாஸ்டிக் காலணிகளைத் தேர்ந்தெடுக்கவும், அவை சுத்தம் செய்ய எளிதானவை மற்றும் விரைவாக உலரக் கூடியவை. தோல் காலணிகள் வேண்டாம். நீர் புகாத எந்த காலணிகளும் வேண்டாம். ஃப்ளிப் ஃப்ளாப் காலணிகள் வழுக்கி விழும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் அதைப் பயன்படுத்த வேண்டாம்.
அதேபோல் வாட்டர் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளைப் பயன்படுத்துங்கள். இது உங்கள் குளிருக்கு இதமாக இருக்கும்.
ஆக்ஸஸெரிஸ்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.
மேலும் ஒரு ஆடையை எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. ஏனெனில், நனைந்துவிட்டு அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, அங்கு அப்படியே வேலைப் பார்க்க முடியாது. அப்போது உடையை மாற்றிவிட்டு வேலைப் பார்ப்பது வசதியாக இருக்கும்.
இந்த விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றினால், மழைக்காலங்களில் ஆரோக்கியமாக இருக்கலாம்.