Drumstick Packs: கூந்தல் மற்றும் முகம் என இரண்டையுமே அழகாக்கும் ஒரே பேக்!

Face Pack
Face Pack
Published on

முருங்கை நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், அதே முருங்கை நம்மை அழகுப்படுத்துவதில் எவ்வளவு நன்மைகளை தருகிறது என்று தெரியுமா?

முருங்கை பருக்கள், கொப்புளங்கள் மற்றும் புண்களைக் குறைக்க மிகவும் உதவுகிறது. உங்கள் சருமத்தை உடனடியாக சுத்தம் செய்ய முருங்கை இலைகளைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் செய்யலாம்.  மேலும் முருங்கையில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இதனால் இவை வயதான அறிகுறிகளை குறைக்கின்றன.

முருங்கைக்காயில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஐசோதியோசயனேட்டுகள் வீக்கத்தை எதிர்த்துப் போராடும் திறனைக் கொண்டுள்ளன.

முருங்கைக்காயில் ஒமேகா 3 உள்ளது. இது முடியின் அடர்த்தியை அதிகரிக்கிறது. துளைகளை மூட உதவுகிறது. மேலும் இது உங்கள் தலைமுடியின் தடிமன் மற்றும் அமைப்பை மேம்படுத்தும் ஓவர் கோட்டாக செயல்படுவதன் மூலம் முடியின் ஊட்டச்சத்தை தக்கவைக்க உதவுகிறது.

முருங்கைக்காயில் பயோட்டின் உள்ளது, இது உச்சந்தலையில் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கிறது மற்றும் முடி செல்களின் நீண்ட ஆயுளுக்கு உதவுகிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின் ஏ, துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

முருங்கை உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படும். ஏனெனில் இது இயற்கையான பெஹெனிக் அமில அளவைக் கொண்டுள்ளது. எனவே இது உங்கள் தலைமுடியை ஷைன் செய்கிறது. மேலும் உங்கள் தலைமுடியை மந்தமான, உடையக்கூடிய நிலையிலிருந்து பாதுகாக்கிறது.

எப்படி பயன்படுத்துவது?

முருங்கை மாஸ்க்:

முருங்கைத்தூளை காய்ச்சாத பால் அல்லது தயிரில் கலந்து அடர்த்தியான பேஸ்ட் போல் செய்து விடவும். இதை கூந்தலில் தடவி 30 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும். இது முடிக்கு சிறந்த பிரகாசத்தை அளிக்கும்.

இந்த மாஸ்க்கைப் பயன்படுத்துவதற்கு முன்னர் கூந்தலை நன்றாக சுத்தம் செய்தல் வேண்டும்.

வாழைப்பழத்துடன் முருங்கைத் தூள்:

முருங்கைத் தூள் 1 டீஸ்பூன் அளவு எடுத்து, அதனை அரை வாழைப்பழத்துடன் மசித்து, அதில் தேன் 1 டீஸ்பூன் மற்றும் டீ ட்ரீ ஆயில் சேர்த்து பேக் செய்து பயன்படுத்தலாம்.

இந்த மாஸ்க் சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஊட்டம் கொடுக்கும். தேனில் இருக்கும் வைட்டமின்கள் தாதுக்கள் சருமத்துக்கு ஈரப்பதத்தை அளிக்கின்றன. இது முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்யும். முடி வளர்ச்சியை ஊக்குவித்து பொடுகு, வழுக்கை போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.

இந்த மாஸ்க் பயன்படுத்தும் முறை:

கூந்தலை ஈரமாக்கிய பிறகு உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். பேஸ்ட்டை தலை மற்றும் முடியின் நுனியில் தடவி ஷவர் தொப்பியை பயன்படுத்துங்கள். பிறகு 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை லேசாக அலசி எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
Vitamin A குறைபாடு உடையவர்கள் சாப்பிட வேண்டிய பழங்கள்! 
Face Pack

இந்த பேக்கை வாரத்தில் ஒருமுறை பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் பல நன்மைகளை பெறும். இந்த கலவையை முகத்திலும் தடவி பயன்படுத்தலாம். கண்களை மட்டும் தவிர்த்து முகத்தில் தடவி மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றவும் உதவுகிறது மற்றும் சருமத்தை சுத்தமாக்குகிறது.

முருங்கையின் ஒரே பேக்கில் முகம் மற்றும் கூந்தல் என இரண்டுமே அழகாகிவிடும். இது இயற்கையின் 2 in 1 Offer ங்க…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com