Vitamin A குறைபாடு உடையவர்கள் சாப்பிட வேண்டிய பழங்கள்! 

Fruits
Boost Your Vitamin A Levels with These Delicious Fruits
Published on

நீங்கள் விட்டமின் ஏ குறைபாட்டினால் அவதிப்படும் நபராக இருந்தால் இனி கவலைப்பட வேண்டாம். இதை சரி செய்வதற்கு ஏராளமான பழங்களை இயற்கை நமக்கு வழங்கியுள்ளது. இந்தப் பதிவில் உங்களது தினசரி விட்டமின் ஏ தேவையைப் பூர்த்தி செய்யும் சில சிறந்த பழங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

மாம்பழங்கள்: பழங்களின் ராஜா என அழைக்கப்படும் மாம்பழங்கள் சுவையானது மட்டுமல்ல விட்டமின் ஏ இன் சிறந்த மூலமாகவும் இருக்கிறது.‌ ஒரு கப் மாம்பழம் உங்களது தினசரி விட்டமின் ஏ தேவைக்கான 25 சதவீதத்தை வழங்குகிறது. எனவே அவற்றை காலையில் சாப்பிடுவது நல்லது. 

முலாம்பழம்: கோடைகாலத்தில் அதிகமாக கிடைக்கும் இந்த முலாம்பழம் கோடை வெப்பத்தை தணிப்பது மட்டுமல்லாமல் உடலுக்குத் தேவையான விட்டமின் ஏ-வை வழங்குகிறது. எனவே விட்டமின் ஏ சத்து குறைபாடுடையவர்கள் முலாம்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. 

பப்பாளி: பப்பாளியில் அதிகப்படியான விட்டமின் சி சத்து நிறைந்திருப்பது மட்டுமின்றி, விட்டமின் ஏ சத்தும் அடங்கியுள்ளது. ஒரு நடுத்தர அளவிலான பப்பாளியை நீங்கள் சாப்பிட்டாலே போதும் ஒரு நாளைக்குத் தேவையான விட்டமின் ஏ சத்து மொத்தமாகக் கிடைத்துவிடும். 

பாதாமி பழம்: சிறிய அளவில் பார்ப்பதற்கு ஆரஞ்சு பழம் போல இருக்கும் பாதாமி பழங்களில் விட்டமின் ஏ உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. ஒவ்வொரு பாதாமி பழமும் உங்களது தினசரி விட்டமின் ஏ தேவைகளில் 13 சதவீதத்தை வழங்கும். எனவே இவற்றை சாப்பிடுவது ஆரோக்கியத்தில் பெரும் உதவியாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
உடலில் விட்டமின் A குறைவாக உள்ளது என்பதற்கான 5 அறிகுறிகள்! 
Fruits

ஆரஞ்சு: ஆரஞ்சு பழங்கள் விட்டமின் சி உள்ளடக்கத்திற்கு மிகவும் பிரபலமானவை என்றாலும் அவற்றில் நல்ல அளவு விட்டமின் ஏ உள்ளது என்பதை நாம் மறக்கக்கூடாது. ஒரு பெரிய ஆரஞ்சு உங்களது தினசரி விட்டமின் ஏ தேவையில் தோராயமாக 10% வழங்குகிறது. இவற்றை அப்படியே நேரடியாகவோ அல்லது ஜூஸ் போட்டோ குடிப்பது விட்டமின் ஏ குறைபாடு உடையவர்களுக்கு மிகவும் நல்லதாகும். 

இந்தப் பழங்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது விட்டமின் ஏ குறைபாட்டை எதிர்த்து போராடுவதற்கு சிறந்த வழியாகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com