வறண்ட முடி, பொடுகு தொல்லை... நிரந்தரப் பிரச்னைகள். தீர்வுதான் என்ன?

hair maintenance...
hair maintenance...Image credit- pixabay.com
Published on

ங்களை மேலும் அழகாக்கிக்கொள்ள, பொதுவாகவே பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே அதிகமாக கவனம் செலுத்துவது சிகை அலங்காரம் மற்றும் பராமரிப்பில்தான். முடி கொட்டுதல், பொடுகு, வறண்ட கூந்தல், முடி உடைத்தல் என தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண ஒவ்வொருவருக்குமே அந்தத் துறையில் சிறந்த வல்லுனர்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அத்தகைய வழிகாட்டுதலை இந்தக் கட்டுரையில் நமக்காக வழங்குகிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

 அழகுக்கலை நிபுணர் வசுந்தரா
அழகுக்கலை நிபுணர் வசுந்தரா


High-frequency treatment
தலைமுடி தொடர்பான பிரச்னைகளில் முக்கியமானது பொடுகு தொல்லை. தலையில் உள்ள சருமத்தின் இறந்த மற்றும் வறண்ட செல்கள் உதிர்வதே பொடுகு ஆகும். இது Malassezia globasa என்ற பூஞ்சையால் உற்பத்தியாகிறது. இதனை சரி செய்ய அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் சிகிச்சை முறைதான் இந்த High-frequency treatment. வளப்படுத்தப்பட்ட ஆக்சிஜன் மூலக்கூறுகளைக்கொண்டு மேற்கொள்ளப்படும் இந்தச் சிகிச்சை முறையில், தலைமுடியின் வேர்ப்பகுதிகளில் இருக்கும் பூஞ்சை, dead cells, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு தலைமுடிக்கு வலுவூட்டப்படுகிறது.

Hair Oil Massage Treatment
உச்சந்தலை மற்றும் தலைமுடி வறண்டு போய் இருந்தால், ஆயில்  மசாஜ் எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருந்தபடியே நம்மால் இதை முறையாக எடுத்துக்கொள்ள இயலாது என்பதால் அழகு நிலையங்களுக்குச் சென்று செய்துகொள்ளலாம். ஆயில்  மசாஜ் அழகு நிலையத்தில் எடுத்துக்கொண்ட பிறகு வீட்டிற்கு வந்து, 2 அல்லது 3 மணி நேரம் கழித்து சிகைக்காய் அல்லது ஷாம்பு போட்டு முடியை சுத்தம் செய்துகொள்ளவேண்டும். அல்லது பார்லரிலேயே Oil Massage செய்துகொண்டு, தலைமுடிக்கு பேக் போட்டுக்கொண்ட பின்னர், சிறிது நேரம் கழித்து தலைமுடியை ஷாம்பு கொண்டு சுத்தம் செய்துகொள்ளலாம்.

Visible difference
Visible difference

இந்த Oil Massage-க்கு ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆல்மண்ட் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியனவற்றை 50ml என்ற சம அளவில் எடுத்துக்கொண்டு லேசாக சூடாக்கிய பின்னர், தலையின் scalp மற்றும் முடியின் நீளம் வரை படுமாறு மசாஜ் செய்யவேண்டும். பின்னர் hair பேக் போட்டுக்கொள்ளவேண்டும்.

hair pack தயாரிக்கும் முறை:
ஹைபிஸ்க்ஸ் பவுடர், ஆம்லா பவுடர், வெட்டிவேர் பவுடர், கருவேப்பிலை பவுடர் ஆகியவற்றை ஒவ்வொன்றிலும் 10 கிராம் அளவில் எடுத்துக்கொண்டு அதை அலோவீரா ஜெல்லுடன் கலந்து தலையில் pack ஆகா போட்டுக்கொண்ட பின்னர் அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
பயத்தை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்!
hair maintenance...

hair spa therapy
hair spa செய்துகொள்வதன் மூலமும் தலைமுடியை அழகாகவும், வலுவுள்ளதாகவும் பராமரித்துக்கொள்ள முடியும். இந்த hair spa ஒவ்வொரு நபரின் தலைமுடியின் தேவைகளை பொறுத்து பிரித்துக்கொள்ளலாம். இதற்கான கிரீம்களுடன் கான்செண்ட்ரேட்டுக்கள் சேர்த்து மசாஜ் செய்த பின்னர் ஸ்டெம்மிங் செய்யப்படுகிறது. சில நிமிடங்களுக்குப் பின்னர் தலை முடியை கழுவிக்கொள்ளலாம். oil மசாஜ் என்பது வீட்டில் இருந்துகூட செய்துகொள்ளலாம். ஆனால், ஹேர் ஸ்பா செய்துகொள்ள அதற்கான உபகரணங்களும் தேவையான பொருட்களும் நமது வீட்டில் இருக்காது என்பதால், அழகு நிலையங்களுக்குத்தான் செல்ல வேண்டும்.

hair wash
hair washImage credit- pixabay.com

hair wash
பொதுவாகவே, வீட்டில் நாம் தலைக்கு குளிக்கும்போது பல நேரங்களில் அவசர அவசரமாகத்தான் குளித்து முடித்து துவட்டிக்கொள்வோம். இதனால் நமது தலையில் சரியாக சுத்தமாகாததால் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எப்பொழுதாவது அழகு நிலையங்களுக்கு சென்று ஹேர் வாஷ் செய்துகொள்ளவேண்டும் என கூறினால், உங்களுக்கு சிறிய அளவில் எண்ணெய் தேய்த்துவிட்டு இரண்டு முறை நல்ல ஷாம்பு கொண்டு முடியைச் சுத்தம் செய்வர். அதன் பின்னர் தலைமுடிக்கு கண்டிஷனர் போட்டு மீண்டும் முடியைக் கழுவி விடுவார். இது உங்களுக்கு ஒரு நிம்மதியான மற்றும் சுகமான அனுபவமாக அமையும். hair spa, oil massage இவற்றை விட இந்த hair wash மலிவு விலைதான் என்பதாலும் ஒரு புத்துணர்வான அனுபவத்தைப் பெறமுடியும் என்பதாலும் இதை செய்துகொள்ளலாம். முகம், கை கால்கள், நகங்கள் ஆகியவற்றை சரியாக பராமரிப்பது போலவே தலைமுடியையும் பராமரிப்பது மிகவும் அவசியம்.

தொகுப்பு: மரிய சாரா 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com