குளிர்காலத்தில் காய்ந்த உதடுகளை அடிக்கடி நாவால் ஈரப்படுத்தக் கூடாது. ஏன் தெரியுமா?

குளிர்காலத்தில் காய்ந்த உதடுகளை அடிக்கடி நாவால் ஈரப்படுத்தக் கூடாது. ஏன் தெரியுமா?

லரும் அடிக்கடி நாவால் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டே இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது. உண்மையில் உதடுகள் ஈரமாவதற்குப் பதில் காய்ந்துதான் போகின்றன.  இது தொடரும்போது விரைவில் உதடு தொடர்பான தோல் நோய் வரக்கூடும்.

ஏன் உதடுகள் உலர்ந்து போகின்றன?

நமக்கு மிகவும் டென்ஷனான சமயங்களில் நம்மை அறியாமல் உதட்டை ஈடுபடுத்துவோம். மிகுந்த வெயில், குளிர்க்காற்று, குளிர்காலங்களில் ஏற்படும் வறட்சியான காற்று, போன்றவைகளால் உதுடுகள் காய்ந்து போகும்.

மருத்துவக் காரணங்கள்;  காய்ச்சலின் போதும், சளி பிடித்திருக்கும் போதும் உதடுகள் மிகவும் உலர்ந்துவிடும். ஏனென்றால் மூக்கில் மூச்சு விடுவது குறைந்து நாம் வாயால் மூச்சு விடுவோம். புகைக்கும்,  புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், ஹைப்போ தைராய்டு உள்ளவர்களுக்கும் அடிக்கடி உதடுகள் உலரும்.

இதையும் படியுங்கள்:
ஒருமுறை வல்லாரைக் கீரையை இப்படி செஞ்சு பாருங்க!
குளிர்காலத்தில் காய்ந்த உதடுகளை அடிக்கடி நாவால் ஈரப்படுத்தக் கூடாது. ஏன் தெரியுமா?

அடிக்கடி உதட்டை நாவால் ஈரப்படுத்தும் போது என்ன ஆகிறது?

குளிர்காலத்தில் உதடுகள் இயற்கையாகவே காய்ந்து போகும். நாவால் ஈரப்படுத்தும் போது சில நொடிகளுக்கு உதடுகள் ஈரப்பசையுடன் இருப்பது போல இருக்கும். ஆனால் அந்த எச்சில் விரைவில் காற்றில் கரைந்து விடும். மிக மென்மையான உதடுகளில் எச்சில் படும்போது, முன்பை விட அதிக அளவு நம்முடைய உதடுகள் உலர்ந்து, வெடிப்புகள் தோன்றி, சிலருக்கு ரத்தம் கூட வரும்.

உதட்டை ஈரப்படுத்தும் பழக்கத்தை கைவிடுவது எப்படி?

ம் தோலும் உதடுகளும் காய்ந்து போகாத அளவு போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும் வெளியே செல்லும்போதெல்லாம் தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் தியானம் செய்யுங்கள்.  நீண்ட மூச்சை உள்ளிழுத்து விட்டு பதட்டம் தவிருங்கள். நல்ல தரமான லிப் பாம் தினமும் பகல் நேரத்தில் உபயோகியுங்கள். உங்களுடைய பர்சில் எப்போதும் லிப் பாம் இருக்கட்டும் உதடுகள் உலரும்போது அதை அடிக்கடி எடுத்துப்  போட்டுக் கொள்ளலாம்.

உதடுகள் உலர்ந்து காய்ந்து போகாமலிருக்க என்ன செய்யலாம்?

1. வீட்டில் இருக்கும் போது தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம். சிலரின் உதடுகள் வெடித்து பிளவுபட்டு, ரத்தம் கூட வரும். அவர்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லி நன்றாக கை கொடுக்கும். மிக விரைவில்  உதட்டுக் காயத்தை ஆற்றி விடும். சூரியகாந்தி எண்ணெய்யும் உதடுகளை ஈரப்பசையோடு வைத்திருக்கும்.

2. அதிக மணமில்லாத, தரமான லிப் பாம் பயன் படுத்துங்கள்.   

3. காலையில் தூங்கி எழுந்ததும் உதடுகளை ஈரமான டவலால் மென்மையாக ஒத்தி எடுக்க வேண்டும். உதடுகளை கிளீன் செய்யும் போது எப்போதும் குளிர்ந்த தண்ணீரில் தான் கழுவ வேண்டும் வெந்நீரில் அல்ல. உதடு வெடிக்கும்போது அதன் காய்ந்த பகுதியை  கிள்ளி எறியக்கூடாது.

4. வெளியில் செல்லும்போது ஒரு மாஸ்கை மாட்டிக் கொண்டு சென்றால் உதடுகள் குளிர்காலத்தில் அதிகம் உலராமல் இருக்கும். முகத்தை மறைக்கும் நல்ல தொப்பியை அணிந்து கொள்ளலாம்.

5. நிறைய ஜூஸ், இளநீர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.  தூங்கும் பொழுது நீங்கள் மூக்கினால் மட்டும் மூச்சு விடுகிறீர்களா அல்லது வாய் வழியாக விடுகிறீர்களா என்பதை கவனிக்க வேண்டும்

6. அதிக உப்பு, காரம், மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும், இது உதட்டைக் காயப்படுத்தும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை தவிர்க்க வேண்டும். இது உதட்டு வெடிப்பை அதிகரிக்கும்.

7.  லிப்ஸ்டிக் உபயோகிக்க விரும்பினால் நல்ல தரமானவற்றை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். வீடு வந்ததும், தேங்காய் எண்ணெய் கொண்டு லிப்ஸ்டிக்கை சுத்தம் செய்து விட்டு, பெட்ரோலியம் ஜெல்லி தடவலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com