
முகத்தில் கருந்திட்டுக்கள் ஏன் ஏற்படுகின்றன தெரியுமா? அதிக அளவு மெலானின் ஹார்மோன் சுரக்கப்படும் நிலை Hyperpigmentation என்று கூறப்படுகிறது. மேலும் வெயிலில் அதிகம் பாதிக்கப்படுவதாலும், ஹார்மோன்களின் சமச்சீரின்மையாலும் மற்றும் வயதான காரணத்தாலும் இந்நிலை ஏற்படுகிறது. இதைத்தவிர்க்க வழிகளைக் காண்போம்.
ஆலோவேரா ஜெல்
இதில் உள்ள அலிசின் மெலானினைக் கட்டுப் படுத்துகிறது. இதன் ஜெல்லைப் பயன்படுத்துவதன் மூலம் மாசு மருவற்ற முகத்தைப் பெறமுடியும்
உருளைக்கிழங்கு ஜுஸ்
உருளைக்கிழங்கில் Catocholase என்ற பொருள் முகத்தின் கருந்திட்டைப் போக்கைக் கூடியது. ஒரு காட்டன் பாலில் இந்த ஜுஸைதோய்த்து முகத்தில் தடவ நல்ல பலன் தெரியும்.
எலுமிச்சை, தேன்
தேன் முகத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். எலுமிச்சையின் சி சத்து முகத்தைப் பொலிவாக்கும். சமஅளவு இரண்டையும் எடுத்து முகத்தில் தடவிக் கழுவவும்.
மஞ்சள் பால்
மஞ்சளின் அழற்சி எதிர்ப்புப் பண்பும் பாலில் உள்ள லாக்டிக் அமிலமும் முகத்தில் இறந்த செல்களை நீக்கி முகத்த பளபளப்பாக்கும்.
க்ரீன் டீ
இதன் ஆன்டிஆக்சிடண்ட்ஸ்ஃப்ரீ ராடிகல்களின் சேதத்தைத்தடுத்து கருந்திட்டைப் போக்குகின்றது. குளிர்ந்த டீ பேக்குகளை (bags) முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
கெமிகல் பீல்
இந்த முறையில் க்ளைகோலிக் அமிலம், சாலிசிலிக் மற்றும் லாக்டிக் அமிலமும் முகத்தில் தடவப்படுகிறது. இது முகத்தில் இறந்த செயல்களை நீக்கி புதுப்பிக்கிறது.
லேசர் திராபி
சிலருக்கு மிகவும் மோசமான கருந்திட்டுக்களள் இருந்தால் லேசர் மூலம் அதை அகற்ற முடியும். சிறந்த சரும மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம்.
தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்குவது எப்படி?
தேன் எலுமிச்சை
ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 4 டீஸ்பூன் தேன் சேர்த்து சருமத்தில் தேவையற்ற முடிகள் உள்ள பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவேண்டும். இதனால் முடி வளர்ச்சி தடுக்கப்படும்.
மஞ்சள் தூள் மற்றும் பால்
ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளுடன் பால் சேர்த்து சருமத்தில் முடி வளர்ந்த இடத்தில் சுழற்சியில் தேய்த்து ஐந்து நிமிடம் ஸ்க்ரப் செய்து பிறகு கழுவவேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
தயிர் கடலைமாவு
தயிரில் கடலைமாவு மஞ்சள்தூள் சேர்த்தே சருமத்தில் தடவி பிறகு கழுவ தேவையற்ற முடிகள் நீங்கும்.
கடுகு எண்ணையில் ஈ சத்து உள்ளதால் உடல் முழுவதும் தேய்த்து பத்து நிமிடம் வெயிலில் நில்லுங்கள். முடி வலுவிழந்துவிடும்.
கோதுமைமாவை தோசை போல் குழைத்து முடி அதிகம் உள்ள இடங்களில் தடவி உலர்ந்ததும் எடுத்துவிட ரோமங்கள் உதிர்ந்துவிடும்.
குப்பைமேனி உலர்ந்தது 100கிராம், கோரைக்கிழங்கு 100 கிராம், கஸ்துரிமஞ்சள் 50 கிராம் இவற்றை அரைக்கவும் இதை பூசிக்குளிக்க கோரைக்கிழங்கும் கஸ்தூரி மஞ்சளும் முடியை உதிரவைத்து தோலை மிருதுவாக்கும். குப்பைமேனி தேவையற்ற முடியை நீக்கும்.
ஆவாரம்பூ விரலி மஞ்சள் பயத்தம்பருப்பு சமஅளவு எடுத்து நைசாக அரைத்து இதை பயன்படுத்த முகத்தில் முடி வலுவிழந்து உதிர்ந்துவிடும்.