
கருமையான உதடுகள் முகத்தின் அழகைக் கெடுக்கும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உதட்டுக்கருப்பை சரி செய்து விரைவில் சிவப்பு நிறத்தை கொண்டு வர முடியும். வீட்டில் இருக்கும் எலுமிச்சை, பீட்ரூட், தேன், கற்றாழை, சர்க்கரை, மஞ்சள் மற்றும் பால் போன்ற பொருட்களை வைத்து உதட்டு கருப்பை சரி செய்யலாம்.
எலுமிச்சை சாறு;
ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, ஒரு கிண்ணத்தில் அதன் சாற்றை எடுத்துக்கொள்ளவும். விரல்களைப் பயன்படுத்தி அல்லது சிறிதளவு காட்டன் பயன்படுத்தி எலுமிச்சைசாறை நேரடியாக உதட்டில் தடவவேண்டும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் உதடுகளைக் கழுவவும். எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் ஒரு ப்ளீச்சிங் ஏஜென்ட் செயல்பட்டு உதட்டுக் கருப்பை நீக்க உதவுகிறது.
பீட்ரூட் சாறு;
ஒரு சிறிய பீட்ரூட்டை தோல் உரித்து, அதை துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள், அதன் சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு உதடுகளில் தடவி 15 நிமிடங்கள் விடவும். பின்பு வெறுவதுப்பான நீரில் கழுவவும். பீட்ரூட்டில் உள்ள இயற்கையான நிறமிகள், உதடுகளுக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன.
ஆலோவேரா ஜெல்;
கற்றாழையை தோலை நீக்கி அதன் ஜெல்லை எடுக்கவும். அதை நன்றாக தண்ணீர் விட்டு கழுவிவிட்டு மிக்ஸியில் போட்டு நன்றாக கூழ்போல் அடித்துக் கொள்ளவும். அந்தச்சாறை எடுத்து உதட்டில் தடவி 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் துடைத்து. விடவும் கற்றாழை இருண்ட நிறத்தை நீக்கி, சிவப்பு நிறத்தைத் தருகிறது. இதை அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள் + பால் பேஸ்ட்;
காய்ச்சாத பால் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு மஞ்சள் தூள் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை உதடுகளில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்து அதை கழுவி விடவும் .மஞ்சுளில் உள்ள மெலனின் தடுக்கும் பண்பு உதட்டுக் கருப்பை நீக்குகிறது.
தேன் மற்றும் சர்க்கரை;
அரை டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் சர்க்கரை இரண்டையும் கலந்து கொள்ளவும். ஒரு பேஸ்ட்போல உருவாக்கவும். இந்தக் கலவையை உதடுகளில் தடவி விடவும். அரைமணி நேரம் கழித்து உதடுகளை கழுவவேண்டும். இந்தக் கலவை இறந்த சிரம செல்களை நீக்கி மென்மையான இலகுவான உதடுகளை தருகிறது.
வெள்ளரி சாறு;
ஒரு சிறிய வெள்ளரிக்காயை நன்றாகக்கழுவி தோல் நீக்கிவிட்டு அதை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும். அந்த சாற்றை எடுத்து உதடுகளில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் உதடுகளை கழுவவேண்டும். இதை தினமும் செய்துவந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
ரோஸ் வாட்டர்;
சிறிதளவு ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சு உருண்டையில் நனைத்து அதை உதடுகளில் சீராக தடவ வேண்டும். 15 நிமிடங்களில் கழித்து வெதுவெதுப்பான நீரில் உதடுகளை கழுவவேண்டும். இது உதடுகள் பிரகாசமாக இருக்க உதவுகிறது.