முடி அதிகமா கொட்டுதா? தேங்காய் பாலும் அதன் நன்மைகளும்! 

Excessive hair loss
Excessive hair loss? Coconut milk and its benefits!

தேங்காய் பால் சமையலில் மட்டுமல்ல நம் முடிக்கும் அற்புதமான நன்மைகளை வழங்கும் ஒரு இயற்கை பொருள். அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் முடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க உதவுகிறது. இந்தப் பதிவில் தேங்காய்ப்பாலை தலையில் எப்படி பயன்படுத்துவது மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

தேங்காய் பாலை தலையில் பல வழிகளில் பயன்படுத்தலாம் அதில் சில எளிய வழிமுறைகள் பின்வருமாறு: 

ஹேர் மாஸ்க்: தேங்காய் பால் முடிக்கு ஒரு சிறந்த ஹேர் மாஸ்க் ஆகும். 1 கப் தேங்காய் பால் எடுத்து அதில் 2 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலை முடியிலும் உச்சந்தலையிலும் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் மிதமான ஷாம்புவைக் கொண்டு கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்தி வந்தால் முடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். 

கண்டிஷனர்: தேங்காய் பாலை தலைமுடிக்கு கண்டிஷனராகப் பயன்படுத்தலாம். ஷாம்பு போட்டு தலைக்கு குளித்த பின்னர் உங்கள் தலையில் தேங்காய் பால் தடவி ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழிவினால், உங்கள் தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். 

குளியல்: தலைக்கு குளிக்கும்போது தேங்காய் பாலை பயன்படுத்துவது நல்லது. உங்கள் ஷாம்புவில் 2 ஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து நன்றாகக் கலக்கி அந்த கலவையை உங்கள் தலைமுடியில் தேய்த்துக் கொள்ளவும். இப்படி செய்யும்போது தேங்காய்ப்பால் உங்கள் முடியை ஈரப்பதமாக்கி வறட்சியைத் தடுக்க உதவும். 

உங்களை மசாஜ்: தேங்காய் பாலை பயன்படுத்தி உங்கள் உச்சந்தலையை மசாஜ் செய்யலாம். இதற்கு சிறிதளவு தேங்காய் பாலை எடுத்து உங்கள் உச்சந்தலையில் தடவி 5 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். இது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
குடல் பிரச்சினைக்கும் முடி உதிர்வுக்கும் சம்பந்தம் இருக்கா? அச்சச்சோ!
Excessive hair loss

தேங்காய் பால் தலையில் பயன்படுத்துவதன் நன்மைகள்: 

  • தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. இது முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது. மேலும் தேங்காய் பால் முடி வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கிறது. 

  • தேங்காய் பாலில் உள்ள கொழுப்புகள் முடியை ஆழமாக ஊடுருவி அதை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும். அதன் ஈரப்பதமூட்டும் பண்புகள், தலை முடியை ஈரப்பதமாக்கி வறட்சியைத் தடுக்க உதவுகிறது. இதனால் முடி உடைவது தடுக்கப்படும். 

தேங்காய் பால் உங்கள் முடிக்கு பல நன்மைகளை வழங்கும் ஒரு சிறந்த பொருள். மேலேகுறிப்பிட்டுள்ள எளிய முறைகளைப் பின்பற்றி தேங்காய் பாலை உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்கும்போது, முடியை என்றும் ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com