குடல் பிரச்சினைக்கும் முடி உதிர்வுக்கும் சம்பந்தம் இருக்கா? அச்சச்சோ!

Hair Fall
The Link Between Poor Gut Health and Hair Fall

முடி உதிர்தல் பிரச்சனை என்பது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பாதிப்பாகும். முடி உதிர்வதற்கு பல காரணிகள் சொல்லப்பட்டாலும் சமீபத்திய ஆய்வுகள் உடல் ஆரோக்கியத்திற்கும் முடி உதிர்வுக்கும் சம்பந்தம் உள்ளதாக எடுத்துரைத்துள்ளன. இந்தப் பதிவில் அது சார்ந்த முழு விவரங்களைப் பார்க்கலாம். 

நீங்கள் உட்கொள்ளும் உணவில் இருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் குடல் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குடலில் பிரச்சினை இருப்பவர்கள் என்னதான் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலும் அது உடலுக்கு சரியாக செல்வதில்லை. இதன் காரணமாக முடி வளர்ச்சி, மற்றும் முடி ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். 

மோசமான குடல் ஆரோக்கியம் உடலில் ஒவ்வாமை பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக தலையில் அலர்ஜி எதிர்வினை ஏற்பட்டு மயிர்க்கால்கள் பாதிக்கப்படும். இது தலைமுடியின் ஆரோக்கிய சுழற்சியை சீர்குலைக்கும். இதனால் அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சினை ஏற்படலாம். 

குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் பெரும்பாலும் மோசமான உணவு, மன அழுத்தம் மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் போன்றவற்றால் உண்டாகிறது. இது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுத்து முடி உதிர்வதிலும் பங்களிக்கிறது. 

நாள்பட்ட மன அழுத்தம் காரணமாகவும் குடல் பிரச்சனை ஏற்படலாம். குடல் நுண்ணுயிரிகளில் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி, ஊட்டச்சத்து உறிஞ்சுதலைக் குறைக்கும். இதனால் நம்முடைய ஹார்மோன் அமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படும் என்பதால் அது முடி ஆரோக்கியத்தையும் வெகுவாக பாதிக்கும்.

இதையும் படியுங்கள்:
முடி வளர்ச்சியைத் தூண்டும் வெங்காய ஹேர் மாஸ்க்! 
Hair Fall

குடலில் உள்ள பிரச்சனை காரணமாக உடலில் ஆட்டோ இம்முனே பாதிப்புகள் ஏற்பட்டு, அலோபிசியா என்ற தலைமுடி திட்டு திட்டாகக் கொட்டும் நிலை ஏற்படலாம். எனவே உங்களது குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். 

சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தம் மேலாண்மை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மூலமாக குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முடி உதிரும் பிரச்சனையை நாம் நிறுத்த முடியும். மேலும் உங்களுக்கு முடி உதிர்வதற்கான காரணத்தைக் கண்டறிய சுகாதார நிபுணர் அல்லது தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com