
முதலில் உயரமாக வளரவேண்டும் என்று ஆசைப்படு பவர்கள் பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும். காரட், தக்காளி, பீட்ரூட், வெள்ளரிக்காய் பிஞ்சு, வெண்டைக்காய், முட்டைகோஸ் ஆகியவைத் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக பச்சையாக சாப்பிட்டு வரவேண்டும். உயரமாக வளர்வதற்கான சத்து பச்சை காய்கறிகளில் நிறைய இருக்கிறது.
கால்களை பாதுகாக்க குதி உயர்ந்த காலணிகளையும், கூர்மையான, நீண்ட,குறுகிய ஷூவையும் அணியக் கூடாது. அணிந்தால் பாதங்கள் கெடுகின்றன, விரல்கள் சுருங்குகின்றன, இரத்த ஓட்டம் தடைப்படுகிறது, கால்களில் வலி ஏற்படுகிறது.
கால், கைகளில் உள்ள நகங்களை மிக அழகாக வளர்க்க வேண்டுமானால் கோழி முட்டையின் மீது கனிந்த எலுமிச்சைப் பழ சாறைத் தடவி அப்படியே இரவில் வைத்துவிட வேண்டும். விடிந்ததும் அந்த கோழி முட்டையை உடைத்து காய்ச்சிய பாலில் ஊற்றி சிறிது சூடான தண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
இப்படி சில நாட்கள் பருகி வந்தால் நகங்கள் மிக அழகாக வளரும். நகங்களை நீளமாக வளர்க்க கூடாது. நகங்களை சதுரமாக இருக்கும்படி வெட்டிவிட்டால் அழகாக இருக்கும், அழுக்கு சேராது, உடையாது.
சிலருக்கு முழங்கைகளும், முழங்கால்களும், முரட்டுத் தனமாகவும், சொரசொரப்பாகவும் இருக்கும். இதைப்போக்க ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி முழங்கால்களில் தேய்க்க வேண்டும். பிறகு அதன் தோல்களை ஒரு மேஜையில் வைத்து, முழங்கை முட்டிகளை அந்த எலுமிச்சைபழத்தோல்களின் மேல் வைத்து அழுத்தி அசைக்க வேண்டும். இப்படி செய்தால் முழங்கால்களின் சொரசொரப்பும், முழங்கைகளின் சொரசொரப்பும் போய்விடும்.
பெண்கள், புல்தரைகளில் தினமும் கொஞ்ச நேரம் செருப்பு அணியாமல் நடக்கவேண்டும். செருப்பு அணியாமல் புல் தரையில் நடந்தால் பாதங்கள் அழகாக இருக்கும். மேலும் வீட்டை விட்டு வெளியில் போகும்போது தங்கள் பாதங்களில் சிறிது பவுடர் போட்டு கொள்ள வேண்டும். இப்படி செய்தால் எவ்வளவு தூரம் நடந்தாலும் பாதங்கள் வலிக்காமலும், வறண்டு போகாமலும் இருக்கும்.
பெண்கள், நடக்கும்போது அழகாக, ஒயிலாக நடக்கவேண்டும். நடக்கும் போது கால்களை நீளமாக எடுத்து வைக்காமல், கால் அடிகள் குறுகலாக இருக்கும்படி எடுத்து வைத்து நடக்கவேண்டும். இடுப்பை மட்டும் சிறிது அசைத்து, இடுப்புக்கு மேல் பகுதியும், தோள்களும் அசையாமல் நடந்தால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.
பாதங்களின் ஒரு பகுதியை மட்டும் அழுத்தி வைத்து நடக்காமல் பாதங்களின் பின் பகுதியை முதலில் உயர்த்தி பிறகு மற்ற பகுதியை உயர்த்தி நடக்க பழகிக்கொண்டால் நடக்கும்போது பார்த்தால், ஐயோ! அவ்வளவு அழகாக இருக்கும். மேலும் தினசரி கொஞ்ச நேரம் தலையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு அது கீழே விழாமல் நடந்து பழகினால் நம்முடைய நடை நாளடைவில் அழகு நடை ஆகிவிடும்.
நடக்கும்போது பாதங்களை நேராக வைத்து நடக்க வேண்டும். ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போதும் பாதங்களின் முனைகள் நேராக இருக்கும்படி பார்த்து பழகிக்கொள்ள வேண்டும். அவ்வாறு நடக்காவிட்டால் வயிறும், பின் பக்கமும் பெருத்துவிடும்.
பெண்களின் நடையை அன்ன நடை என்றும், இடையை கொஞ்சும் இடை என்றும் சொல்வார்கள். இதைப்போல ஆண்களின் நடையை சிம்ம நடை என்றும், இடையை பெண்கள் அஞ்சும் இடை என்றும் சொல்லும்படி இருக்க வேண்டும்.