

முகத்தின் அழகுக்கு மெருகேற்றுவது புருவமும் கண்களும்தான் இதில் புருவத்தின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்து முகத்திற்கு அதிக அழகு கொடுக்கமுடியும்.
புருவங்களில் உள்ள முடியின் வளர்ச்சிக்கு விளக்கெண்ணையை பயன்படுத்துவது நல்லது அதோடு சமஅளவு பாதாம் எண்ணெயையும் ஆளி எண்ணெயையும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்யலாம்.
புருவங்களில் விளக்கெண்ணெய் தடவுவதற்கு முன்பு இரண்டு விரல்களால் புருவங்களை மெதுவாக கிள்ளிவிட வேண்டும் எண்ணெய் மசாஜ் புருவத்தின் முடிவளர உதவுவதோடு முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர்வதற்கு பணி செய்கின்றது.
தினமும் குளிப்பதற்கு முன்பு புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை தடவி மசாஜ் செய்துவிட்டு ஊறவைத்த பிறகு குளிக்கலாம். இதுவும் புருவங்கள் அழகாக இருக்க உதவும்.
பிளேடுகள் உபயோகித்து புருவங்களை ஷேவ் செய்வதை தவிர்க்க வேண்டும் புருவங்களை எப்பொழுதும் தெரட்டின் முறையே அதற்கு ஒரே சிறந்தது.
புருவங்கள் நரைத்திருந்தால் ஐப்ரோ பென்சில் பயன்படுத்துவதை தவிர்த்து மஸ்காராவை உபயோகிப்பது நல்லது.
புருவங்களின் வளர்ச்சிக்கு ரோஸ்மேரி லாவண்யா யிலாங் பிலாங் மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிகவும் சிறந்தது
தினமும் படுக்கப் போகும்போது புருவங்களுக்கு கொஞ்சம் வாசலின் அல்லது விளக்கெண்ணை தடவி வந்தால் புருவங்கள் முடி அடர்த்தியாக வளரும்.
சதுரமுக அமைப்பு கொண்டவர்கள் புருவ முடிகளின் வரிசையில் உள்பக்கமாக உள்ளவற்றை அகற்றி விடவேண்டும்.
புருவமுடி உதிராமல் இருக்க நாள்தோறும் கொஞ்சம் வெண்ணெய் சாப்பிட வேண்டும் அதோடு இரவில் பசும்பால் ஒரு டம்ளரும் சாப்பிட்டு வரவேண்டும் உடனே புருவம் முடிவு உதிர்வது நிற்பதோடு புதியதாக முடிகளும் வளரும்.
தினமும் சுத்தமான ஆமணக்கு எண்ணெய் புருவங்களில் தேய்த்தால் புருவம் முடி கருப்பாக கவர்ச்சியாக தோன்றும் .
கண் புருவங்கள் நன்றாக நீண்டு வளர ஆப்பிள் பழத்தை தேனில் தொட்டு சாப்பிட வேண்டும்.
கண்ணிமைகளில் உள்ள முடிகளில் மஸ்காராவை பூசிக்கொள்ளும் போது கண்களை நன்றாக திறந்து கொண்டிருக்க வேண்டும்.
நீளமான முக அமைப்பை கொண்டவர்கள் புருவம் எவ்வளவுக்கு எவ்வளவு நேராக வளயாமல் இருக்கிறதோ அவ்வளவு முகத்தோற்றம் நன்றாக இருக்கும்.
கண்களில் லேசாக மூடிக்கொண்டு கண்ணிமைகளில் பன்னீரை ஒரு பஞ்சினால் தொட்டு அடிக்கடி தேய்த்துவிட்டால் கண்ணிமைகள் கவர்ச்சிகரமான நிறங்களை பெற்று அழகாக இருக்கும்.
கேரட் கிழங்கை துண்டித்து அதன் ஒரு பகுதியால் கண்களின் புருவங்களில் தேய்த்து வந்தால் கண் புருவம் அடர்த்தியாகவும் ஒழுங்காகவும் கருமையாகவும் அமையும்.
ஓவல் வடிவம் உள்ள முகத்திற்கு புருவம் சிறிய வளைவுடன் அதன் உயர்ந்த புள்ளி கண்ணின் நடு பகுதிக்கு மேலே இருக்கவேண்டும்.
குறுகிய நெத்தியுடையவர்களுக்கு புருவங்களுக்கிடையே இடைவெளி அதிகம் வேண்டும் நெடிய நெற்றி உடையவர்களுக்கு இடைவெளி அதிகம் தேவை இல்லை.
எப்போதும் இரண்டு புருவங்களுக்கிடையே இருக்கும் முடிகளை களைந்து விடவேண்டும்.
இரு புருவமும் நெருங்கி இருந்தாலும் கண்கள் சிறிதாகவும் முகம் குறுகியும் தெரியும்.
உங்களுக்கு பெரிய அகன்ற மூக்கு இருந்தால் புருவத்தின் இடைவெளியை அதிகப்படுத்தக்கூடாது.
நன்றாக ஷேப் செய்யப்பட்ட புருவத்தால் நீண்ட முகத்தை சிறியதாக காட்டலாம் இதற்கு புருவத்தை கிட்டத்தட்ட நீளமாக தோன்றும்படி செய்ய வேண்டும். ஆனால் கண் ஓரத்தை தாண்டி புருவத்தை நீட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
முகத்தை ஓவல் வடிவமாக மாற்ற புருவ வடிவில் பெரிய வளைவை ஏற்படுத்த வேண்டும்.
புருவத்தை சரிப்படுத்தும்போது கவனம் மிகவும் தேவை மிகவும் குறுக்கப்பட்ட புருவம் வயதான தோற்றம் தருவதோடு ஒரு கடினமான தோற்றத்தையும் தரும்.
கரிய நிறமான அழகான அமைப்புடைய புருவங்கள் இருப்பவர்கள் சரி செய்து கொள்வதற்கு அவசியமே இல்லை.