Face Fasting சருமப் பராமரிப்பு முறை! 

Face Fasting
Face Fasting skin care method!
Published on

இன்றைய காலத்தில் நம் சருமத்தை அழகாக வைத்திருக்க பல வகையான கிரீம்கள், லோஷங்கள் மற்றும் சிகிச்சைகள் கிடைக்கின்றன. ஆனால், சிலர் இந்த செயற்கைப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து இயற்கையான முறைகளைப் பின்பற்றுகின்றனர். அத்தகைய இயற்கையான முறைகளில் ஒன்றுதான் Face Fasting. அதாவது சருமத்திற்கு எவ்விதமான தயாரிப்புகளையும் பயன்படுத்தாமல், சருமம் அதன் இயற்கையான நிலையில் வைத்திருக்கும் முறைதான் இது. இது சருமத்தின் தானாக சரி செய்து கொள்ளும் திறனை அதிகரித்து, பல சருமப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் என நம்பப்படுகிறது. 

Face Fasting என்றால் என்ன? 

Face Fasting என்பது சருமத்திற்கு எவ்விதமான கிளன்சர், மாய்ச்சரைசர், சன்ஸ்கிரீன் அல்லது மேக்கப் போன்ற தயாரிப்புகளை பயன்படுத்தாமல் இருப்பதாகும். இதன் மூலம் சருமம் இயற்கையாகவே எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை சமப்படுத்திக் கொள்ளும். மேலும், சருமத்தில் உள்ள நுண்ணுயிரிகள் தங்களுக்குத் தேவையான சமநிலையை அடைந்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.‌ 

நன்மைகள்: இதன் மூலமாக சருமத்தின் தானாக சரி செய்து கொள்ளும் திறன் அதிகரிக்கும். இதன் விளைவாக பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் பிற சருமப் பிரச்சனைகள் குறையலாம். 

பேஸ் ஃபாஸ்டிங் இருப்பதால் சருமம் வெளிப்புற சூழல்களில் இருந்து வரும் தாக்கங்களுக்கு குறைவாகவே எதிர்வினை ஆற்றும். இதனால், சருமம் சிவப்பு நிறமாக மாறுதல் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் குறையக்கூடும்.‌ 

நீங்கள் பல்வேறு வகையான சரும பராமரிப்பு தயாரிப்புகளை வாங்குவதற்கு செலவழிக்கும் பணம் இதனால் மிச்சப்படுகிறது. 

Face Fasting இருப்பது மிகவும் எளிதானது. நீங்கள் வெறும் தண்ணீர் அல்லது மைல்ட் கிளென்சர் கொண்டு உங்கள் முகத்தை சுத்தம் செய்தாலே போதும். மேலும், எவ்விதமான சன்ஸ்கிரீன் மாய்ஸ்சரைசர் போன்றவற்றையும் பயன்படுத்த வேண்டாம். இது அனைவருக்குமே ஒத்துவரும் சருமப் பராமரிப்பு முறையாக இருந்தாலும். ஏற்கனவே சில தீவிரமான சருமப் பிரச்சனைகள் இருப்பவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. 

இதையும் படியுங்கள்:
அதிக செலவின்றி வீட்டிற்கு இன்டீரியர் டெக்கரேஷன் செய்வது எப்படி?
Face Fasting

குறிப்பாக, சொரியாசிஸ், எக்ஸிமா போன்ற தீவிரமான சரும பிரச்சனைகள் உள்ளவர்கள் ஃபேஸ் ஃபாஸ்டிங் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. இத்துடன் வெயிலில் அதிக நேரம் செலவிடுபவர்கள் கட்டாயம் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். நீங்கள் வீட்டில் இருக்கும் சமயங்களில் ஃபேஸ் ஃபாஸ்டிங் செய்து கொள்ளலாம்.‌

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com