அதிக செலவின்றி வீட்டிற்கு இன்டீரியர் டெக்கரேஷன் செய்வது எப்படி?

interior design
interior design
Published on

சொந்த வீடோ, வாடகை வீடோ வீட்டு அலங்காரம்  என்றால் பெரிய பணக்காரர் வீட்டு விஷயம் என்று நினைப்பது தவறு. தற்போது சிறு வீடு என்றாலும் இண்டீரியர் டெக்கரேஷன் அவசியம் தேவைப்படுகிறது. ஏனெனில், அழகுடன் திகழும் இடத்தில் வசிக்கும்போது நம் மனதும் எனர்ஜி பெறுகிறது.

சிறு அறை என்றாலும் கொஞ்சம் அழகு உணர்வும், அக்கறையும் இருந்தாலே போதும் உள் அலங்காரம் அனைவரும் பாராட்டும்படி ஆகிவிடும். அதற்கான எளிய ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

இன்டீரியர் அலங்காரம் என்றால்  கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் தூய்மை மற்றும் பொருட்களை அதற்குரிய சரியான இடங்களில் வைப்பதாகும். இந்த இரண்டும் சரியாக இருந்தால் அதுவே வீட்டுக்கு அழகு தரும்.

பொருட்களை வாங்கிக் குவித்து வீட்டின் ஏதோ ஒரு இடத்தில்  அடைசலாகப் போட்டு வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இடத்திற்கு ஏற்ப அவசியமான பொருட்களை வாங்கிப் பழகுங்கள். பிள்ளைகள் மாடர்ன் லைஃப் ஸ்டைல் விரும்புவார்கள். பெற்றோரோ வேறு மாதிரியான அலங்காரத்தை விரும்புவார்கள். ஆகவே, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ஆலோசித்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது நல்லது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிட்டு பிளாஸ்டிக் மலர்களையும் செடிகளையும் அலங்காரங்களுக்காக வாங்குவதைத் தவிருங்கள். அதைவிட, சிறு பித்தளை கிண்ணம் போதும். அதில் நீரூற்றி சில மலர்களை போட்டு வரவேற்பறை மேஜையில் வைத்தால் அதுவே வீட்டுக்கு அழகு தரும்.

அதேபோல், மூங்கிலால் செய்யப்பட்ட அழகிய கலைப் பொருட்கள் ஒன்று இரண்டு வாங்கி வைத்தாலும் அந்த இடம் அந்தஸ்தாக தெரியும். தற்போது கைவினைப்பொருட்கள் தகுந்த விலையில் அழகழகாகக் கிடைக்கின்றன.

வீட்டுக்கு அழகு சேர்ப்பது நேர்த்தியான திரைச்சீலைகளும் ஜன்னல்களுக்கு ஸ்கிரீனும்தான். குறிப்பாக வீட்டிற்கு வெளிச்சம் தேவை என்று நினைப்பவர்கள் மென்மையான வண்ணங்களில் திரைச்சீலைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல் வீட்டின் சுவர்களின் பின்னணியில் வெளிர் நிறம் இருந்தால் அதற்கேற்றார்போல் வண்ணங்களில் கலைப் பொருட்களை வாங்குவது நல்லது. குறிப்பாக, ஆரஞ்சு, பிங்க், புளூ  போன்ற வண்ணங்கள் மற்றவர்களை எளிதாகக் கவரும்.

இதையும் படியுங்கள்:
சிக்கு கோலம் - இது கலை மட்டுமல்ல. அறிவியலும் கூட..
interior design

இருக்கும் அத்தனை புகைப்படங்களையும் வரிசையாக மாட்டி வீட்டின் அழகை கெடுப்பதை விட, அனைத்து உறுப்பினர்களும் இருப்பது போல் ஒரு பெரிய புகைப்படத்தை அனைவரின் கண்களுக்கும் தெரியும்படி  மாட்டுவது வீட்டிற்கு அழகு தரும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் அழகு தருவது புத்தக அலமாரிகள்தான். சிறு அளவு என்றாலும் புத்தக அலமாரியை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில் புத்தகங்களை சேமித்து அடுக்கி வையுங்கள். அது வீட்டின் அறிவுக் களஞ்சியத்துக்கு மிக முக்கியமானது.

கால் மிதியடிகள் முதல் செய்திதாள் மடித்து வைப்பது வரை அனைத்தும் தூசியின்றி சுத்தமாக இருப்பதுடன் தேவையற்ற பொருட்களை அடைக்காமல் இருந்தாலே  வீடு அழகாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com