Face mist: வீட்டிலேயே ஃபேஸ் மிஸ்ட் செய்யலாம் வாங்க!

Face Mist
Face Mist
Published on

சருமம் டல்லாக இருக்கும்போது புத்துணர்ச்சிபெற ஃபேஸ் மிஸ்ட்டை பயன்படுத்துகிறோம். தற்போது இதனை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். அந்தவகையில் ஃபேஸ் மிஸ்ட்டை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

டோனர், மாய்ஸ்ட்ரைஸர் போன்ற பல அழகு சாதன பொருட்கள் நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கின்றன. அந்த லைனில் ஃபேஸ் மிஸ்ட் தற்போது பிரபலமாகி வருகிறது. சருமம் புத்துணர்ச்சியாக இருக்க இந்த ஃபேஸ் மிஸ்ட் பயன்படுத்தப்படும். சருமம் புத்துணர்வுடன் இருக்க வேண்டுமெனில் ஹைட்ரேட்டாக இருக்க வேண்டியது அவசியம்.

அந்தவகையில் வீட்டிலேயே மிஸ்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ரோஸ்மேரி மிஸ்ட்:

ரோஸ்மேரி வாட்டர் – 25 மில்லி

டிஸ்டில்டு வாட்டர் – 100 மில்லி

கிளிசரின் – 1ஸ்பூன்

ஒரு ஸ்ப்ரே பாட்டில் வாங்கிக்கொள்ளவும். அதில்  ரோஸ்மேரி வாட்டர், டிஸ்டில்டு வாட்டர் மற்றும் கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து நன்றாக குலுக்கிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் ரோஸ்மேரி மிஸ்ட் தயார். சிலருக்கு இது அழற்சியை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால், பேட்ச் டெஸ்ட் எடுத்துக் கொள்வது நல்லது.

ரோஸ் வாட்டர் ஃபேஸ் மிஸ்ட்:

ரோஸ் வாட்டர் - 100 மில்லி,
கிளிசரின் - 1 ஸ்பூன்,

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ரோஸ் வாட்டர் சேர்த்துவிட்டு பின் அதில் கிளிசரின் சேர்க்க வேண்டும். கிளிசரின் கொஞ்சம் அடர்த்தி வாய்ந்தது என்பதால், ஒன்றோடு ஒன்று கலக்க நேரமெடுக்கும். ஆனால், நன்றாக கலந்தப் பின்னரே பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
முடி வளர்ச்சியை அதிகரிக்கும் டாப் 7 எண்ணெய்கள்! 
Face Mist

கற்றாழை ஃபேஸ் மிஸ்ட்:

கற்றாழை ஜெல் - 4 ஸ்பூன்,

கிளிசரின் - 1 ஸ்பூன்,

டிஸ்டில்டு வாட்டர் - 50 மில்லி,

வெள்ளரிக்காய் சாறு - 4 ஸ்பூன்,

முதலில் வெள்ளரிக்காய் சாறுடன் கற்றாழை ஜெல்லை நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர்தான் கிளிசரின் மற்றும் டிஸ்டில்டு வாட்டரை  சேர்த்து கலக்க வேண்டும். இதனை ஃபேஸ் மிஸ்ட்டாக பயன்படுத்தி வந்தால், உங்கள் சருமம் புத்துணர்ச்சி பெறும்.

இந்த மூன்றில் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com