
நம் பெண்களால் அதிகம் விரும்பப்படும் உடைகளில் புடவைக்கு இணையாக சுடிதாரும் உள்ளது. புடவையை விட இது பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதாக பல பெண்கள் நினைக்கிறார்கள்.
சிலர் மாடல் பெண்கள் அணித்திருப்பதை பார்த்து நிறைய விலை கொடுத்து துணியை வாங்கி தைத்தால், அது நமக்கு பொருந்துவதில்லை, என நினைக்கும் பெண்கள் நிறையபேர் உள்ளனர். யாருக்கு எந்த டைப் சுடிதார் பொருத்தம் இதோ சில டிப்ஸ்கள்.
காட்டன், பட்டு, சார்ஜட் டிஷ்யூ, சில்க் காட்டன் துணிகள், உடலை இறுக்கமாக காட்டக்கூடியவை மட்டுமல்ல நம் பெண்களின் உடல்வாகுக்கு இந்த மாதிரி துணிவகைகள் சிறப்பாக இருக்கும்.
பலரும் ஃபிட்டிங் என்றால் 'உடலை ஒட்டியபடி இறுக்கமாக இருப்பது, என்று தவறாக புரிந்துகொள்கிறார்கள். சுடிதாரை பொருத்தவரை அது உண்மை இல்லை. ஃபிட்டிங் என்றால் ஒருவரின் உடல் வாகுக்கு கச்சிதமாக பொருந்துவது.
மெட்டீரியல்
குண்டான உடல்வாகுள்ள பெண்கள், ஷிபான், க்ரீப், சார்ஜெட் மெட்டீரியலில் சுடிதார் அணிந்தால் கச்சிதமாக தெரியும். மற்ற துணிகள் இவர்களை இன்னும் குண்டாக காட்டும்.
வண்ணங்கள்.
பச்சை, நீலம், பழுப்பு போன்ற அடர் வண்ணங்கள் ஒருவரை ஒல்லியாக காட்டக்கூடியது.
எளிமையான டிசைன்கள்.
நிறைய பூ டிசைன்கள் பெரிய எம்பிராய்டரி இருந்தால் அணிபவரை இன்னும் குண்டாகக்காட்டும். எளிமையான டிசைன்களை போதுமானது.
கழுத்து டிசைன்கள்.
கழுத்து டிசைனைப் பொறுத்த வரையில் ரொம்ப 'லோ' 'நெக்கு வேண்டாம். முதுகுப்பகுதியில் அதிக இறக்க வேண்டாம். கழுத்தை ஒட்டும் அளவுக்கு மூடிய டாப்ஸ் அவர்களை ஒல்லியாக காட்டும். சற்று நீளமான கை வைத்த டாப்ஸ் அணியலாம். ஃபிரில் வைத்த கை வேண்டாம்.
பாதம் வரை நீளும் டாப்ஸ் வேண்டாம். அது இப்போது அவுட் ஆஃப் ஃபேஷன். டாப்ஸ் கால் மூட்டுக்கு கீழே போகாதவாறு பார்த்துக்கொள்ளவும்.
மிகவும் இறுக்கி பிடிக்காத உடலோடு பொருந்துகிற சுடிதார்கள் இவர்களை கச்சிகமாக காட்டும். சராசரியான சுடிதார் பேண்ட்கள் இவர்களுக்கு பொருத்தம். பட்டியாலா மற்றும் ரொம்ப தொளதொளப்பான சுடிதார் பேண்ட்டுகளைத் தவிர்க்கவும்.
ஒல்லியான உடல் வாகு கொண்டவர்கள்.
ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களுக்கு பட்டு, காட்டன் போன்ற கனமான துணிகள் பொருத்தமாக இருக்கும் .
ஷிபான் மற்றும் பாலியஸ்டர், மெட்டீரியல் அணியலாம். ஜூட் வகைத்துணிகளும் இவர்களுக்கு பொருந்தும்.
பெரிய பூ டிசைன்கள் போட்ட சுடிதார்கள் இவர்களையும் குண்டாக காட்டும் பொருத்தமான ஆடைகள் ஆகும். பளபள நிறங்கள் ஒல்லியானவர்களுக்கு ஏற்றவை.
முழுக்கை வைத்த அனார்கலி வகை சுடிதார்கள் கச்சிதம்தான்.
ஃபிரில் வைத்த கை இவர்களுக்கு அட்டகாசமாக இருக்கும்.
பட்டியலாவும் முட்டிக்கு மேல்வரை வரும் டாப்ஸ் அற்புதமாக பொருந்தும். 'வி' வடிவ கழுத்து டிசைன் உள்ள டாப்ஸ் இவர்களை இன்னும் அழகாக்கும். இறுக்கமாக அணியாமல் உடல் அளவைவிட ஒன்று அல்லது ஒன்றரை இன்ச் அதிகம் வைத்து டாப்ஸ் தைத்துக்கொள்ளவும்.
உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் மென்மையான நிறங்களையே தேர்ந்தெடுக்கலாம்.
சுடிதார் டாப்ஸ் முட்டிக்கு இரண்டு இன்ச் கீழே வருமாறு இருந்தால் உயரமாக தெரிவீர்கள். டாப்ஸ் மற்றும் பேன்டில் நீளமான கோடுகள் இருந்தால் உங்கள் உயரத்தை சற்று அதிகமாக காட்டும். டாப்ஸின் பார்டர் அகலமாக இருக்க வேண்டாம்.
பெரிய பூப்போட்ட அல்லது அதிகமான டிசைன்கள் கொண்ட சுடிதார்கள் இயல்பான உயரத்தையே குறைத்துகாட்டும்.
இதனை தவிர்த்துவிடுங்கள் கழுத்து டிசைனை பொருத்தவரை, 'வி' நெக் எப்போதும் உங்களுக்கு பொருந்தும். தோள் பகுதியில் அகலமாக வைத்து தைக்கவேண்டாம்.
இதனை தெரிந்துகொண்டு ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால் உங்கள் உடல் வாகுக்கு ஏற்ற பொருத்தமாக இருக்கும்.