அழகிய கூந்தலுக்கு கொய்யா இலை தண்ணீர்!

Guava leaf water
Guava leaf water
Published on

வழக்கமாக கொய்யா இலையை வீட்டு வைத்தியத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தி வருவார்கள். வாய் துர்நாற்றத்தை தடுப்பதிலும் கொய்யா இலைகள் நல்ல பலன் தருகிறது. இத்தகைய மருத்துவக் குணம் மிகுந்த கொய்யா இலைகள் தலைமுடி வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது என்பது ஆச்சர்யமாக இருக்கும். கொய்யா இலை தண்ணீர் தலைமுடி பராமரிப்பில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

அழகான நீண்ட கூந்தலுக்கான ஒரு மூலிகைப் பொருள் இயற்கையில் இருக்கிறது. இரவில் சில கொய்யா இலைகளை ஒரு கிண்ணத்தில் விட்டு, அதில் தண்ணீர் கலந்து ஊற வைக்கவும். காலையில் அந்த தண்ணீரில் தலை முடியை தேய்த்துக் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். இயற்கையாகவே கொய்யா இலையில் நிறைந்துள்ள வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் முடியை வேர்க்காலில் இருந்தே வலுவாக்குகிறது. இந்த சக்திவாய்ந்த இலைகள் உங்கள் கூந்தல் பராமரிப்பில் முக்கியப் பொருளாக பயன்படுத்தி பலனை பெறலாம்.

கொய்யா இலைகளில் காணப்படும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள், உச்சந்தலையில் புதிய முடியை வளர்க்கின்றன. மேலும் முடியை வலுப்படுத்தி ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. தலைமுடி உதிர்வில் பிரீ ரேடிக்கல்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இவை முடியை பலவீனப்படுத்தி உடைய வைக்கிறது. தலை முடியை மெலிதாக மாற்றுவதும், உதிர வைப்பதிலும் ஃப்ரீ ரேடிக்கல்கள் முக்கிய காரணியாக இருக்கிறது.

கொய்யா இலை நீரில் தலைமுடியை வாரம் மூன்று முறை கழுவினால், தலையில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழித்துவிடும். கொய்யா இலைகளில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளுக்கு எதிராக செயல்படுகின்றன.

இது உச்சந்தலையை, பொடுகு இல்லாமலும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இவை பொடுகினால் வரும் அரிப்புகளைக் குறைத்து உச்சந்தலை ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

கொய்யா இலை தண்ணீர், முடி மெலிதல் மற்றும் வழுக்கை விழுதல் போன்ற பிரச்சினைகளை முன்கூட்டியே தடுக்கும் ஆற்றல் கொண்டது. முடியை வேர் முதல் நுனி வரை வலுப்படுத்துவதன் மூலம், கொய்யா இலைத் தண்ணீர், உங்கள் முடி பளபளப்பாகவும் வலுவாகவும் தோற்றமளிக்கச் செய்கிறது. கொய்யா இலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் புதிய முடியை வளர தூண்டுகிறது.

உங்கள் தலைமுடி பராமரிப்பில் கொய்யா இலை தண்ணீரை பயன்படுத்துவது முடியை அடர்த்தியாக்கவும் முடி உதிர்தலைக் குறைக்கவும் உதவும். கொய்யா இலைகளின் நன்மைகள் ஏராளமாக இருந்தாலும், அதை பயன்படுத்தும் முன் உங்களுக்கு ஒவ்வாமை எதுவும் இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
தங்கள் உடல் பாகங்களை இழந்தாலும் மீண்டும் புதுப்பிக்கும் உயிரினங்கள்!
Guava leaf water

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com